கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து நீங்கள் புதுப்பித்த நிலையில் உள்ளீர்களா என்பதைக் கண்டறிய, Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) வழிகாட்டுதலைப் (ஆங்கிலத்தில் மட்டும்) பார்க்கவும். கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து நீங்கள் புதுப்பித்த நிலையில் இல்லை என்றால், நீங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5 நாட்கள் தனிமைப்படுத்துதல்
பின்வரும் சூழ்நிலைகளில் 5 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் பொருத்தமானது:
- கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து நீங்கள் புதுப்பித்த நிலையில் இல்லை, மேலும்
- உங்களால் நன்கு-பொருந்தும் முகக்கவசங்களை பொது இடங்களிலும், வீட்டிலும் மற்றவர்களுடன் இருக்கும் போது அணிய முடியும்.
நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் குறைந்தது முழுமையான 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் (இந்த நேரத்தில் உங்கள் பரிசோதனை நெகட்டிவாக இருந்தாலும் கூட). உங்கள் தனிமைப்படுத்துதலின் முழுமையான கடைசி நாள்:
உங்கள் தனிமைப்படுத்துதல் முடிவடையும் நாள்:
இன்னும் 5 நாட்களுக்கு ( வரை) மற்றவர்களுடன் இருக்கும்போது நன்கு-பொருந்தும் முகக்கவசத்தை அணியவும், நீங்கள் முகக்கவசம் அணிய முடியாத செயல்பாடுகளைத் தவிர்க்கவும் மற்றும் தீவிர நோய்க்கான அதிக-அபாயத்தில் உள்ளவர்களுடன் இருப்பதைத் தவிர்க்கவும். பயணம் பற்றிய தகவல்களுக்கு பயணம் | CDC (ஆங்கிலத்தில் மட்டும்) ஐப் பார்க்கவும்.
உங்களுக்கு அறிகுறிகள் தோன்றாவிட்டாலும் கூட, நீங்கள் பரிசோதனை செய்ய வேண்டும். கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் கடைசியாக நெருங்கிய தொடர்பு கொண்ட நாளிலிருந்து குறைந்தது 5 நாட்களுக்குப் பிறகு பரிசோதனை செய்துகொள்ளுங்கள் ( அன்று அல்லது அதற்குப் பிறகு) பரிசோதனை உங்களுக்கு பாசிட்டிவாக வந்தால், நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் (கூடுதல் தகவல்களுக்கு, உங்களுக்கு கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்தால் என்ன செய்வது (PDF)) என்ற இணைப்பைப் பார்க்கவும்.
10 நாட்கள் தனிமைப்படுத்துதல்
10 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் பின்வரும் சூழ்நிலைகளில் பொருந்தும்:
- கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து நீங்கள் புதுப்பித்த நிலையில் இல்லை, மேலும்
- உங்களால் நன்கு-பொருந்தும் முகக்கவசங்களை மற்றவர்களுடன் இருக்கும் போது அணிய முடியாது.
நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் குறைந்தது முழுமையான 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் (இந்த நேரத்தில் உங்கள் பரிசோதனை நெகட்டிவாக இருந்தாலும் கூட). உங்கள் தனிமைப்படுத்துதலின் முழுமையான கடைசி நாள்:
உங்கள் தனிமைப்படுத்துதல் முடிவடையும் நாள்:
இந்தத் தேதியில், உங்கள் வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கலாம், ஆனால் ஆபத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் (உதாரணமாக, கோவிட்-19 தடுப்பூசிகளைப் பற்றி புதுப்பித்த நிலை (ஆங்கிலத்தில் மட்டும்) இல் இருங்கள்,பரிந்துரைகள் மற்றும்/அல்லது தேவைகளுக்கு ஏற்ப முகக்கவசத்தை அணியுங்கள், குறைந்த காற்றோட்டம் உள்ள இடங்களைத் தவிர்க்கவும் மேலும் அடிக்கடி கைகளை கழுவவும்; மேலும் அறிய உங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது | CDC (ஆங்கிலத்தில் மட்டும்) ஐப் பார்க்கவும்.)
தனிமைப்படுத்துதல் இல்லை
கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து நீங்கள் புதுப்பித்த (ஆங்கிலத்தில் மட்டும்) நிலையில் இருந்தால், உங்களுக்கு அறிகுறிகள் தோன்றாத வரை நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியதில்லை. வரை நீங்கள் நன்கு-பொருந்தும் முகக்கவசத்தை மற்றவர்களுடன் இருக்கும் போது அணிய வேண்டும் மற்றும் உங்களுக்கு அறிகுறிகள் தோன்றாவிட்டாலும் கூட, நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் கடைசியாக நெருங்கிய தொடர்பு கொண்ட நாளிலிருந்து குறைந்தது 5 நாட்களுக்குப் பிறகு பரிசோதனை செய்துகொள்ளுங்கள் ( அன்று அல்லது அதற்குப் பிறகு)
கடந்த 90 நாட்களுக்குள் உங்களுக்கு கோவிட்-19 நோய் இருந்திருக்கும் பட்சத்தில் (உங்களுக்கு வைரஸ் பரிசோதனை (ஆங்கிலத்தில் மட்டும்) பாசிட்டிவாக வந்திருந்தால்), உங்களுக்கு அறிகுறிகள் தோன்றாத வரை நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியதில்லை. வரை நீங்கள் நன்கு-பொருந்தும் முகக்கவசத்தை மற்றவர்களுடன் இருக்கும் போது அணிய வேண்டும் மேலும் நீங்கள் கடைசியாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் ( அல்லது அதற்குப் பிறகு) நெருங்கிய தொடர்பில் இருந்து குறைந்தது 5 நாட்களுக்குப் பிறகு, ஆன்டிஜென் சோதனையைப் பயன்படுத்தி (PCR சோதனை அல்ல) பரிசோதனை செய்ய வேண்டும்.