அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | கோவிட்-19 க்கான பரிசோதனை

பரிசோதனைக் கருவிகளை அணுகுதல்

கோவிட்-19 பரிசோதனையை நான் எங்கே செய்து கொள்ள வேண்டும்?

பின்வரும் விருப்பத்தேர்வுகளை முயற்சிக்கவும்:

உங்களுக்கு அருகிலுள்ள பரிசோதிக்கும் தளத்தை அறிந்து கொள்ள உதவி தேவைப்பட்டால், உங்கள் உள்ளூர் சுகாதாரத் துறை அல்லது மாவட்டத்தை (ஆங்கிலத்தில்) தொடர்புகொள்ளவும். 1-800-525-0127 என்ற எண்ணிற்கு அழைத்து # ஐ அழுத்தவும். அவர்கள் பதிலளிக்கும்போது, ​​விளக்கச் சேவைகளை அணுக உங்கள் மொழியைக் கூறவும்.

என்னிடம் இணையதள சேவை இல்லை / இணையதளம் எனது மொழியில் இல்லை. வாஷிங்டனில் இலவச பரிசோதனை செய்யும் கருவியை எவ்வாறு ஆர்டர் செய்வது?

1-800-525-0127 என்ற எண்ணிற்கு அழையுங்கள், பின்னர் # ஐ அழுத்துங்கள். மொழி உதவி உள்ளது. வாஷிங்டன் மற்றும் ஃபெடரல் ஆன்லைன் போர்டல்கள் மூலமாக உங்கள் சார்பில் கால் சென்டர் பணியாளர்கள் ஆர்டர் செய்யலாம்.

Say Yes! COVID Test ஆன்லைன் போர்ட்டல் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

இந்த திட்டம் வாஷிங்டன் மாகாணம், National Institutes of Health (தேசிய சுகாதார நிறுவனங்கள்) மற்றும் Centers for Disease Control and Prevention (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும். பொருட்கள் இருப்பில் இருக்கும் போது, வாஷிங்டன் முழுவதும் உள்ளவர்கள் இரண்டு துரித கோவிட்-19 பரிசோதனைக் கருவிகளை ஆர்டர் செய்ய முடியும். மேலும் Amazon நேரடியாக அவர்களின் வீட்டிற்கு டெலிவரி செய்யும்.

ஒரு வீடு/குடியிருப்பு முகவரிக்கு, ஒரு மாதத்திற்கு இரண்டு ஆர்டர்கள் மட்டுமே செய்ய முடியும், மேலும் ஒவ்வொரு ஆர்டரும் 5 துரித பரிசோதனைகளுடன் வருகிறது. அனைத்து ஆர்டர்கள் மற்றும் அனுப்புதல் செலவும் இலவசமாகும்.

பரிசோதனையைப் பற்றி அல்லது அதில் எவ்வாறு பரிசோதனை செய்வது என்பது தொடர்பான கேள்விகளுக்கு Say Yes! COVID Test டிஜிட்டல் உதவியாளர் ஐப் பார்வையிடவும் அல்லது 1-833-784-2588 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

நீங்கள் DOH மற்றும் ஃபெடரல் பரிசோதனைக் கருவிகள் ஆகிய இரண்டிலுமே Say Yes! COVID Test பரிசோதனைக் கருவிகளை ஆர்டர் செய்ய முடியுமா?

ஆம், நீங்கள் வாஷிங்டன் மாகாணத்தில் வசிக்கிறீர்கள் என்றால், Say Yes! COVID Test இணையதளம் மற்றும் ஃபெடரல் இணையதளம் இரண்டிலுமே வீட்டிலேயே செய்யும் துரித கோவிட்-19 பரிசோதனைக் கருவிகளைப் பெறுவதற்கு ஆர்டர் செய்யலாம்.

எனக்கு மேலும் கேள்விகள் இருந்தால் நான் எங்கு செல்வது?

DOH Say Yes! COVID Test program (சுகாதாரத் துறை கோவிட் பரிசோதனைக்கு சரி என்று சொல்லுங்கள்) பற்றி மேலும் கேள்விகள் இருந்தால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தைப் பார்வையிடவும் அல்லது DOH கோவிட்-19 ஹாட்லைனை 1-800-525-0127 என்ற எண்ணில் அழைக்கவும் (மொழி உதவி உள்ளது). ஃபெடரல் பரிசோதனைத் திட்டம் பற்றி கேள்விகள் இருந்தால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தைப் பார்வையிடவும்.

எனது இலவச பரிசோதனைக் கருவிகளை எப்போது பெறுவேன்?

இந்த திட்டங்களின் (Say YES! COVID Test (சரி என்று சொல்லுங்கள்! கோவிட் பரிசோதனை அல்லது Federal Program (ஃபெடரல் திட்டம்) மூலமாக கோரப்படும் பரிசோதனைக் கருவிகள் ஆர்டர் செய்த 1-2 வாரங்களில் அனுப்பி வைக்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பரிசோதனை விருப்பங்களையும் பின்பற்றிய பிறகு, என்னால் இன்னும் பரசோதனை எங்கு செய்துகொள்ளலாம் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு கோவிட்-19 இருப்பதாக சந்தேகம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
என் வீட்டில் நான்கிற்கும் அதிகமானோர் உள்ளனர். எவ்வாறு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கான பரிசோதனைகளை அணுகுவது?
  • நீங்கள் வாஷிங்டனின்  இணையதளத்தின் மூலமாக ஒரு மாதத்திற்கு இரண்டு பரிசோதனைக் கருவியை அணுகலாம் (5 பரிசோதனைகள் வரை அடங்கும்).
  • COVIDtests.gov இல் உள்ள ஃபெடரல் திட்டத்தில் இருந்து இரண்டு கூடுதல் பரிசோதனைக் கருவியை (4 பரிசோதனைகள் உட்பட) அணுகலாம்.
  • கூடுதல் வீட்டுப் பரிசோதனை கருவிகளை உள்ளூர் அல்லது ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருந்தகங்களில் நீங்கள் வாங்கலாம்.
  • உங்களுக்கு அருகிலுள்ள ஒரு பரிசோதனை செய்யும் இடத்தில் பி.சி.ஆர் (PCR) பரிசோதனையைப் பெறுங்கள். இங்கே ஒன்றைக் கண்டறியவும்.
எவ்வாறு எனது பரிசோதனைக் கருவியை பயன்படுத்துவது?

துரித வீட்டுப் பரிசோதனைக் கருவிகளின் மிகத் துல்லியமான முடிவுகளுக்கு அந்த தொகுப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியமாகும். ஏதேனும் குறிப்பிட்ட கேள்விகள் இருந்தால் பரிசோதனை உற்பத்தியாளரைத் தொடர்பு கொள்ளவும் (அவர்களைப் பற்றிய தகவல்கள் பெட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும்).

துரித பரிசோதனைகளில் தவறான நெகட்டிவ் முடிவுகள் வரலாம். சில பரிசோதனைக் கருவிகளில் இரண்டு பரிசோதனைகள் இருக்கலாம் (எப்போது பரிசோதிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளுக்கு பெட்டியில் குறிப்பிட்டுள்ளவற்றைப் பின்பற்ற வேண்டும்).

பொதுவான பரிசோதனை

யாரெல்லாம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்?

உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது பரிசோதனை செய்யுங்கள். கோவிட்-19 பரவலான அறிகுறிகளைக் கொண்டுள்ளது, எனவே உங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், மிக விரைவில் பரிசோதனை செய்து கொள்வது நல்லதாகும்.

கோவிட்-19 பாசிட்டிவ் வந்த ஒருவரிடம் நீங்கள் வெளிப்படும் போது பரிசோதனை செய்யுங்கள். அறிகுறிகள் தோன்றும் பட்சத்தில் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு அறிகுறிகள் தோன்றவில்லை என்றால், வெளிப்பாடுக்குப் பிறகு ஐந்து நாட்கள் காத்திருந்து பின்னர் பரிசோதனை செய்யுங்கள்.

வாஷிங்டனில் உள்ள வணிகங்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் ஆகியவை ஒரு நிறுவனம் அல்லது நிகழ்விற்குள் நுழைவதற்கு முன்பு பரிசோதனை மற்றும்/அல்லது தடுப்பூசி செலுத்த வேண்டிய தேவைகளைக் கொண்டிருக்கலாம். நீங்கள் செல்வதற்கு முன் அவர்களை தொலைபேசியில் அழைக்கவும் அல்லது அவர்களின் இணையதளத்தைப் பார்க்கவும்.

பயணத்திற்கு முன்பு மற்றும்/அல்லது பயணத்திற்குப் பின்பு நீங்கள் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கலாம். Center for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்) இன் சமீபத்திய பயண வழிகாட்டுதலைப் பார்க்கவும்.

குறிப்பாக தீவிரமான நோய் அபாயத்தில் உள்ளவர்கள் அல்லது அவர்களின் கோவிட்-19 தடுப்பூசிகளை புதுப்பித்த நிலையில் கொண்டில்லாத குழுவினருடன் செல்லும்போது.

பரிசோதனை முடிவு பாசிடிவ் என வந்தபின் அடுத்து என்ன செய்வது?

Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்) மற்றும் DOH வழிகாட்டுதல் மற்றும் வீட்டிலேயே விலகியிருத்தல் ஐப் பின்பற்றி மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள். அனைத்து நெருங்கிய தொடர்புகளும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

வீட்டிலேயே சோதனை செய்த கோவிட்-19 பரிசோதனை முடிவைத் தெரிவிக்க, பராமரிப்புச் சேவைகளை அணுகவும், வாஷிங்டன் மாகாண கோவிட் ஹாட்லைனை 1-800-525-0127 என்ற எண்ணில் அழைக்கவும். மொழி உதவி உள்ளது.

உங்கள் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே WA Notify (வாஷிங்டன் அறிவி) பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால் அல்லது இயக்கப்பட்டிருந்தால், பாசிடிவ் சோதனை முடிவைத் தெரிவிக்க இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம்.

மேலும் அதிக தகவல்களை இங்கே காணலாம்: உங்கள் பரிசோதனை பாசிட்டிவாக வந்தால் நீங்கள் செய்யவேண்டியது.

தொற்றுக்கு வெளிப்பட்ட பிறகு, எப்போது ஒரு நபருக்கு பரிசோதனை பாசிட்டிவாக வரும்?

ஒரு நபர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவுடன், தொற்று வெளிப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு எடுக்கும் பி.சி.ஆர் (PCR) பரிசோதனை அவர்களுக்கு வைரஸ் இருப்பதைக் காட்டாது. எனவே உங்களுக்கு தொற்று இருக்கலாம், ஆனால் பரிசோதனை சிறிது காலத்திற்கு அதைக் காட்டாமல் இருக்கலாம். பாசிட்டிவ் பரிசோதனை முடிவைப் பெறுவதற்கு நேரம் முக்கியமானது ஆகும். கோவிட்-19 தொற்றுக்கு சாத்தியமான முறையில் வெளிப்பட்டிருந்து ஆனால் நோய்வாய்ப்படாமல் இருந்தால், கடைசி சாத்தியமான வெளிப்பாட்டிற்கு குறைந்தது 5 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்து கொள்வது சிறந்ததாகும். பொதுவாக மக்களுக்கு அறிகுறிகள் இருக்கும்போது ஆன்டிஜென் பரிசோதனைகள் மிகவும் துல்லியமாக இருக்கும், ஆனால் சில சூழ்நிலைகளில் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் பயன்படுத்தலாம்.

முடிவுகள் வருவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

இது பரிசோதனையின் வகை மற்றும் பரிசோதனைக்கு மாதிரி எங்கு அனுப்பப்படுகிறது என்பதைப் பொறுத்தது. ஆன்டிஜென் பரிசோதனைகளின் முடிவுகள் 10 நிமிடங்களுக்குள் மீண்டும் வந்துவிடும். பி.சி.ஆர் (PCR) பரிசோதனைகளுக்கு, பல நாட்கள் ஆகலாம்.

எந்த பரிசோதனையை எடுப்பது சிறந்தது?

உங்களுக்கு முதலாவதாக கிடைக்கும் பரிசோதனையே சிறந்த சோதனையாகும். அதாவது உங்களிடம் வீட்டுப் பரிசோதனை இருந்தால், அதனைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பரிசோதனைத் தளத்திற்கான சந்திப்பைக் கண்டறியும் பட்சத்தில், அதைப் பயன்படுத்தவும். ஒரு சூழ்நிலைக்கு (உதாரணமாக பயணம்) ஒரு குறிப்பிட்ட பரிசோதனை தேவைப்படும் போது ஒரு விதிவிலக்கு உள்ளது.

நான் பரிசோதனை கருவிகளை இருப்பில் வைத்துக் கொள்ளலாமா?

ஒரு சில பரிசோதனை கருவிகளை கையில் வைத்துக் கொள்வது நல்லதாகும். ஏனெனில் அரசாங்க வலைத்தளங்கள் மூலம் பரிசோதனை கருவிகள் கிடைப்பதால் அவற்றை ஆர்டர் செய்யுங்கள். நீங்கள் ஷாப்பிங் செய்யும் போது பரிசோதனைக் கருவிகள் இருப்பதைக் கண்டால், சிலவற்றை வாங்கிக்கொள்ளவும். ஆனால் நல்ல அண்டை வீட்டாராக இருங்கள் மற்றும் உங்களது சிறந்த தீர்ப்பைப் பயன்படுத்துங்கள். பல பரிசோதனைக் கருவிகளை பதுக்கி வைப்பது தேவைப்படக்கூடிய மற்றவர்களுக்கான அணுகலைத் தடுக்கிறது மற்றும் நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பே பரிசோதனைகள் தேதி காலாவதியாகும் அபாயம் உள்ளது.