உள்ளடக்கம் கடைசியாக டிசம்பர் 9, 2022 அன்று புதுப்பிக்கப்பட்டது

6 மாதங்கள் மற்றும் அதற்கும் அதிகமான வயதுடையவர்களுக்கு COVID-19 தடுப்பூசி கிடைக்கின்றது.
குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் சிகிச்சையகங்களைக் காட்ட, உள்ளமைக்கப்பட்ட வடிப்பானைப் பயன்படுத்தி சந்திப்பு முன்பதிவைக் கண்டறிந்து திட்டமிட தடுப்பூசி இருப்பிடத்தைப்
பார்வையிடவும்.வீட்டிலேயே இருப்பவரா, கோவிட்-19 தடுப்பூசி தேவையா? நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் வீட்டிலேயே இருப்பவர் என்றால் அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க பாதுகாப்பான ஒரு ஆன்லைன் படிவத்தை நிரப்பவும். நீங்கள் இருக்கும் மாவட்ட மற்றும்/அல்லது மாகாண மொபைல் தடுப்பூசி குழுக்களுடன் அவர்களை இணைக்க உங்கள் பதில்கள் உதவும்.
உதவி தேவையா? 1-833-VAX-HELP ஐ அழைக்கவும் (833-829-4357), பிறகு # ஐ அழுத்தவும். மொழிபெயர்ப்பு உதவி உள்ளது. உங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் இடங்களை அறிந்து கொள்ள உங்கள் அஞ்சல் குறியீட்டை 438-829 (GET VAX) அல்லது 822-862 (VACUNA) க்கு அனுப்பலாம்.
தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் செயல்திறன்
உங்கள் குழந்தைக்கு கோவிட்-19 தடுப்பூசி போடுவது:
- அவர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்
- அவர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தீவிரமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்
- அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைத்து, அவர்கள் கோவிட்-19 ஆல் இறக்கும் அபாயத்தைக் குறைக்கும்
- அவர்கள் உருமாறும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்படுவதைத் தடுக்க உதவும்
- சமூகத்தில் கோவிட்-19 நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் பரவுவதை கடினமாக்குகிறது.
- கோவிட்-19 இன் சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த உதவுவதன் மூலம் நேரடி கற்றல் மற்றும் செயல்பாடுகளில் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கும்

தடுப்பூசி அங்கீகரிப்பு
Pfizer தடுப்பூசியானது 6 மாதங்கள்-11 வயதுள்ள குழந்தைகளுக்கு Emergency Use Authorization (அவசரகால பயன்பாட்டு ஆணையம்) (EUA)-ன், கீழ் கிடைக்கிறது மற்றும் 12+ வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்கள் - 17 வயதுடைய குழந்தைகளுக்கு Emergency Use Authorization (EUA, அவசரகால உபயோக அனுமதி) இன் கீழ் Moderna தடுப்பூசி கிடைக்கிறது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, Emergency Use Authorization (EUA,அவசரநிலை பயன்பாட்டு அங்கீகாரம்) இன் கீழ் Novavax தடுப்பூசி கிடைக்கிறது.
ஒரு EUA Food and Drug Administration (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) (FDA) ஒரு தயாரிப்பு முழு உரிமத்தைப் பெறுவதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட அவசரநிலையின் போது கிடைக்கச் செய்ய அனுமதிக்கிறது. Emergency Use Authorization (அவசரகால பயன்பாட்டு அங்கீகரிப்பு)-ன் நோக்கம், தரவுகளின் நீண்ட கால பகுப்பாய்விற்கு முன்னர் மக்கள் உயிர்காக்கும் தடுப்பூசிகளைப் பெறுவதை உறுதி செய்வதாகும். EUA க்கு இன்னும் குறுகிய காலத்தில் மருத்துவத் தரவுகளின் முழுமையான மதிப்பாய்வு தேவைப்படுகிறது.
FDA வழங்கிய எந்த EUA, Centers for Disease Control and Prevention )நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்( Advisory Committee on Immunization Practices (நோய்த்தடுப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் குழு)] (ஆங்கிலம் மட்டும்) மற்றும் Western States Scientific Safety Review Workgroup (மேற்கத்திய மாநிலங்களின் அறிவியல் பாதுகாப்பு மதிப்பாய்வு பணிக்குழு) மூலம் மேலும் சரிபார்க்கப்படுகிறது.
பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- எனது குழந்தைக்கு கோவிட்-19 வருவதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?
-
தொற்றுப்பரவல் தொடங்கியது முதல், அமெரிக்காவில் சுமார் 15 மில்லியன் குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய கோவிட்-19 திரிபுகள் அதன் அசல் விகாரங்களைக் காட்டிலும் இளைஞர்களுக்கு மிகவும் ஆபத்தானதாகவும் எளிதில் தொற்றக்கூடியவையாகவும் உள்ளன. மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய கோவிட்-19 எண்ணிக்கையை இளையோர்களிடையே உச்சபட்சத்திற்கு செல்ல வழிவகுத்துள்ளன.
பெரியவர்களை விட குழந்தைகளிடத்தில் கோவிட்-19 பெரும்பாலும் லேசானதாக இருந்தாலும், குழந்தைகள் மிகவும் நோய்வாய்ப்படலாம் மேலும், அவர்கள் மூலம் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள அல்லது பிற வழிகளில் பாதிக்கப்படக்கூடிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நோய் பரவலாம்.
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் "நீண்ட கோவிட்-19 " அல்லது தொடர்ச்சியான அறிகுறிகளை உருவாக்கலாம், அவற்றில் பெரும்பாலும் மூளைச்சோர்வு, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை அடங்கும். குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க தடுப்பூசி போடுவதே சிறந்த வழியாகும்.
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் Multisystem Inflammatory Syndrome (மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்) (MIS-C) (ஆங்கிலம் மட்டும்) நோய்க்கான அதிக ஆபத்தில் இருக்கலாம். MIS-C என்பது இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, தோல், கண்கள் அல்லது இரைப்பை குடல் உறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்கள் அழற்சியடையக்கூடிய ஒரு நிலைமை ஆகும். MIS-C ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை என்றாலும், MIS-C உள்ள பல குழந்தைகளுக்கு கோவிட்-19 இருந்தது, அல்லது கோவிட்-19 உள்ள ஒருவர் அவரைச் சுற்றி இருந்தார். MIS-C தீவிரமானது, ஆபத்தானது கூட இருக்கலாம், ஆனால் இந்த நிலைமை இருப்பதாக கண்டறியப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் மருத்துவ கவனிப்பு மூலம் சீரடைந்துள்ளனர்.
- K-12 பள்ளிக்கு செல்ல தடுப்பூசி தேவையா?
-
K-12 பள்ளிகளில் Revised Code of Washington (RCW, வாஷிங்டன் மறுசீரமைக்கப்பட்ட குறியீடு) 28A.210.140 உள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்தத் தேவைகளை உருவாக்குவதற்கு Washington State Board of Health (வாஷிங்டன் மாகாண சுகாதார வாரியத்துக்கு) அதிகாரம் உண்டு, Department of Health (சுகாதாரத் துறைக்கு) இல்லை. இந்த நேரத்தில் கோவிட்-19 தடுப்பூசிக்கான பள்ளி அல்லது குழந்தை பராமரிப்பு தேவை எதுவும் இல்லை.
- தடுப்பூசிக்கு நான் பணம் செலுத்த வேண்டுமா?
-
இல்லை. உங்கள் குழந்தை உங்களுக்கு எந்த செலவும் இல்லாமல் தடுப்பூசியைப் பெறுவார். தடுப்பூசிக்கான முழுச் செலவையும் மத்திய அரசு செலுத்துகிறது.
உங்களுக்கு பொது அல்லது தனியார் உடல்நலக் காப்பீடு இருந்தால், உங்கள் தடுப்பூசி வழங்குநர் உங்களுக்கு செலுத்திய தடுப்பூசிக்கானக் கட்டணத்தை காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து திருப்பி பெறலாம். உங்களிடம் காப்பீடு இல்லையென்றால், உங்கள் தடுப்பூசி போட வழங்குநருக்கு பணம் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு வழங்குகிறது.
கோவிட் -19 தடுப்பூசி செலுத்துவதற்கு உங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது. இது தனியார் காப்பீடு, Apple Health (Medicaid) உள்ளவர்களுக்கும், Medicare உள்ளவர்களுக்கும் அல்லது காப்பீடு இல்லாதவர்களுக்கும் பொருந்தும்.
- குழந்தைகளிடத்தில் கோவிட்-19 தடுப்பூசியின் பொதுவான பக்க விளைவுகள் என்ன?
-
குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளின் அபாயத்தை விட மிக அதிகமாகும்.
மற்ற தடுப்பூசிகளைப் போலவே, மிகவும் பொதுவான பக்க விளைவுகள் கை வலி, சோர்வு, தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை ஆகும். இந்த அறிகுறிகள் பொதுவாக லேசானவை ஆகும்.
மருத்துவ சோதனைகளில் (ஆங்கிலம் மட்டும்) முதல் டோஸை விட இரண்டாவது டோஸுக்குப் பிறகு அதிகமான குழந்தைகள் பக்க விளைவுகளை தெரிவித்தனர். பக்க விளைவுகள் பொதுவாக லேசானது முதல் மிதமான அளவு வரை தீவிரத்தை கொண்டுள்ளன மேலும் அவை தடுப்பூசி போட்ட இரண்டு நாட்களுக்குள் ஏற்படும், பெரும்பாலானவை ஒன்று முதல் இரண்டு நாட்களுக்குள் மறைந்துவிடும்.
- MRNA தடுப்பூசியில் உள்ள உட்பொருட்கள் யாவை?
-
MRNA தடுப்பூசியில் உள்ள உட்பொருட்கள் ஒரு தடுப்பூசிக்கு மிகவும் பொதுவாக காணப்படுபவையே ஆகும். தடுப்பூசியில் எம்ஆர்என்ஏவின் செயல்பாட்டில் உள்ள உட்பொருளுடன், கொழுப்புகள், உப்புகள் மற்றும் சர்க்கரைகள் போன்ற பிற பொருட்களும் உள்ளன, இவை அந்த செயல்பாட்டில் உள்ள உட்பொருளை பாதுகாக்கின்றன, உடலில் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன, மேலும் தடுப்பூசி சேமிப்பு மற்றும் கொண்டு செல்லும் போது பாதுகாக்கின்றன.
MRNA தடுப்பூசியில் மனித உயிரணுக்கள் (கருவின் உயிரணுக்கள் உட்பட), கோவிட்-19 வைரஸ், லேடெக்ஸ், பதப்படுத்திகள் அல்லது பன்றி இறைச்சி பொருட்கள் உள்ளிட்ட விலங்கு பொருட்கள் அல்லது ஜெலட்டின் போன்ற எதுவும் இருக்காது தடுப்பூசிகள் கருமுட்டைகளில் உருவாக்கப்படுவதில்லை மற்றும் அதில் எந்த கருமுட்டை சார்ந்த பொருட்களும் இல்லை.
உட்பொருட்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு இதைப் பார்க்கவும் Q&A; Children's Hospital of Philadelphia (பிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனை) இணையதளப் பக்கம் (ஆங்கிலம் மட்டும்).
- என் குழந்தை எந்த தடுப்பூசி பிராண்டைப் பெறலாம்?
-
இந்த நேரத்தில், 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு Pfizer-BioNTech (Pfizer) தடுப்பூசி மற்றும் Moderna COVID-19 தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, Emergency Use Authorization (EUA,அவசரநிலை பயன்பாட்டு அங்கீகாரம்) இன் கீழ் Novavax தடுப்பூசி கிடைக்கிறது.
- என் குழந்தைக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டுமா?
-
ஆம், 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, புதுப்பித்த நிலையில் உள்ள கடைசி டோஸ் செலுத்திய 2 மாதங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் mRNA பூஸ்டர் பரிந்துரைக்கப்படுகிறது. 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் - இவர்களுக்கான Pfizer COVID-19 தடுப்பூசியில் தற்போது 2 மோனோவேலண்ட் Pfizer டோஸ்கள் மற்றும் 1 பைவேலண்ட் Pfizer டோஸ் இருக்கும். 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் - இன்னும் 3-டோஸ் Pfizer முதன்மைத் தொடரை தொடங்காத அல்லது இவர்களின் முதன்மைத் தொடரின் 3 ஆவது டோஸைப் பெறாதவர்கள் இப்போது புதுப்பிக்கப்பட்ட Pfizer தொடரைப் பெறுவார்கள். 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் - 3-டோஸ் Pfizer முதன்மைத் தொடரை ஏற்கனவே நிறைவுசெய்த குழந்தைகள் இந்த நேரத்தில் கூடுதல் டோஸ்கள் அல்லது பூஸ்டர்களுக்குத் தகுதி பெற மாட்டார்கள்.
- என் குழந்தைக்கு எத்தனை டோஸ்கள் தேவைப்படும்?
-
அனைத்து குழந்தைகளும் குறைந்த பட்சம் 2 டோஸ்களைப் பெற்றுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
- 6 மாதங்கள் - 4 வயதுடைய குழந்தைகள் ஒரு 3 டோஸ் Pfizer முதன்மைத் தொடர் அல்லது ஒரு 2 டோஸ் Moderna முதன்மைத் தொடரைப் பெறுவார்கள்.
- 5-11 வயதுடைய குழந்தைகள் ஒரு 2 டோஸ் முதன்மைத் தொடர் பெறுவார்கள்.
- 12-17 வயதுடைய குழந்தைகள் ஒரு 2 டோஸ் முதன்மைத் தொடர் பெறுவார்கள்.
2 டோஸ் தொடர் பெற்ற மிதமான அல்லது தீவிரமான நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள குழந்தைகள் அவர்களது 2 ஆம் ஊசி செலுத்திய 28 நாட்களுக்குப் பிறகு ஒரு கூடுதல் முதன்மை டோஸ் பெறவேண்டும். மேலும் 6 மாதங்கள்+ வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு பூஸ்டர் டோஸ் பெறவேண்டும்.
நோயெதிர்ப்புக் குறைபாடுள்ளவர்களுக்கான Centers for Disease Control Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) இன் வழிகாட்டுதல்களைப் பார்க்கவும் அல்லது DOH இணையதளத்தைப் பார்வையிடவும்.
- தடுப்பூசி பற்றி எனக்கு கேள்விகள் இருந்தால் யாரிடம் பேச வேண்டும்?
-
உங்கள் குழந்தையின் குழந்தை மருத்துவர் அல்லது பிற நம்பகமான மருத்துவ வழங்குநருடன் பேசவும், சமூக சுகாதாரப் பணியாளருடன் பேசவும் அல்லது www.CovidVaccineWA.org இல் தகவலைப் படிக்கவும்.
- தடுப்பூசி போட என் குழந்தையை எங்கு அழைத்துச் செல்லலாம்?
-
18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் வாஷிங்டன் மாகாணம் வழங்குகிறது. அவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாமா என்று குழந்தை மருத்துவர் அல்லது வழக்கமாக செல்லும் சிகிச்சையகத்தில் கேளுங்கள்.
ஏற்கனவே சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர் இல்லாத குடும்பங்கள் Help Me Grow வாஷிங்டன் ஹாட்லைனை 1-800-322-2588 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்,சிகிச்சையகம் அல்லது பிற சுகாதார ஆதார வளங்களைக் கண்டறிய ParentHelp123.org ஐப் பார்வையிடலாம். இந்த சேவை இலவசமானது மற்றும் மொழி உதவியும் உள்ளது.
நீங்கள் VaccineLocator.doh.wa.gov-க்கு சென்று, வடிகட்டியைப் பயன்படுத்தி உங்களுக்கு அருகிலுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ள இடங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
- என் குழந்தை காய்ச்சலுக்கான மற்ற தடுப்பூசிகளைப் பெறும்போது, கோவிட்-19 தடுப்பூசியையும் பெறலாமா?
-
ஆம். உங்கள் குழந்தை மற்ற தடுப்பூசிகளைப் பெறும் அதே நேரத்தில் கோவிட்-19 தடுப்பூசியையும் பெறலாம்.
உங்கள் குழந்தைக்கு பள்ளிகளால் வலியுறுத்தப்படும் தேவையான தடுப்பூசிகள் (ஆங்கிலம் மட்டும்) அல்லது பரிந்துரைக்கப்பட்ட பிற தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள திட்டமிட்ட நேரத்தை கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக திட்டமிட்ட நேரத்திலிருந்து தனித்தனியாக நீங்கள் மாற்றத் தேவையில்லை. கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள திட்டமிட்ட நேரம் உங்கள் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பெறுவதற்கான மற்றொரு வாய்ப்பாகும்.
- குழந்தை பராமரிப்பு அல்லது நாள் முகாம்களில் கலந்து கொள்ள எனது குழந்தைக்கு கோவிட்-19 தடுப்பூசி தேவைப்படுமா?
-
Washington State Department of Health (வாஷிங்டன் மாநில சுகாதாரத் துறை) (ஆங்கிலம் மட்டும்) பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்புக்கு எந்த தடுப்பூசிகள் தேவை என்பதை தீர்மானிக்கிறது. இந்த நேரத்தில் கோவிட்-19 தடுப்பூசிக்கான பள்ளி அல்லது குழந்தை பராமரிப்பு தேவை இல்லை.
பகல் நேர முகாம்கள் எனில், அவர்களின் தேவைகள் என்ன என்பதைக் கண்டறிய, முகாமை நடத்தும் நிறுவனத்துடன் சரிபார்க்கவும்.
- தடுப்பூசிகள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானவை மற்றும் திறன்மிகுந்தவை என்று நமக்கு எப்படித் தெரியும்?
-
COVID-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த, Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) ஆனது தடுப்பூசி பாதுகாப்பைக் கண்காணிக்கும் நாட்டின் திறனை விரிவுபடுத்தி வலுப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, COVID-19 தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைகளின் போது பார்த்திராத பிரச்சனைகளைத் தடுப்பூசி பாதுகாப்பு நிபுணர்கள் கண்காணித்து கண்டறிய முடியும்.
Pfizer
6 மாதங்கள் - 4 வயதுள்ள குழந்தைகள்
- தோராயமாக, 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான 4,500 குழந்தைகள் Pfizer COVID-19 தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகளில் பங்குபெற்றுள்ளனர். ஒரு 3 டோஸ் தொடருக்கு இந்த வயதினரின் நோயெதிர்ப்பு சக்தியின் ஏற்புத்திறனானது மூத்த பங்கேற்பாளர்களின் ஏற்புத்திறனுக்குச் சமமாக இருந்தது. தொடர்ந்து நடைபெற்று வருகிற ஆய்வில் இதுவரை தீவிரமான பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
5-11 வயதுள்ள குழந்தைகள்
- தோராயமாக 5 முதல் 11 வயது வரையிலான 3,100 குழந்தைகள் மருத்துவப் பரிசோதனைகளில் Pfizer கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வருகிற ஆய்வில் இதுவரை தீவிரமான பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
- 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளின் நோயெதிர்ப்பு எதிர்வினைகள் 16 முதல் 25 வயது வரையிலான நபர்களுடன் ஒப்பிடத்தக்கவை ஆகும்.
- 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளிடத்தில் கோவிட்-19 நோயைத் தடுப்பதில் தடுப்பூசி கிட்டத்தட்ட 91% அளவிற்கு பயனுள்ளதாக இருந்தது.
12-15 வயதுள்ள குழந்தைகள்
- 12 முதல் 15 வயது வரையிலான 2,260 பங்கேற்பாளர்கள் யுனைடெட் ஸ்டேட்ஸில் நடைபெற்று வரும் தற்போக்காக்கிய, மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சோதனையில் சேர்ந்துள்ளனர்.
- இதில், 1,131 இளம் பருவ பங்கேற்பாளர்கள் தடுப்பூசியும், 1,129 பேர் உப்புக்கரைசல் (சலைன்) மருந்துப்போலியும் பெற்றனர். பங்கேற்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸைத் தொடர்ந்து குறைந்தது இரண்டு மாதங்களுக்கு பாதுகாப்பிற்காகப் பின்தொடரப்பட்டனர்.
Moderna
6 மாதங்கள் - 5 வயதுடைய குழந்தைகள்
- தோராயமாக, 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான 6,300 குழந்தைகள் Moderna COVID-19 தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகளில் பங்குபெற்றுள்ளனர். இந்த வயதினர் குழுவில், COVID-19 நோயைத் தடுப்பதில் தடுப்பூசி 50% அளவிற்கு பயனுள்ளதாக இருந்தது. தொடர்ந்து நடைபெற்று வருகிற ஆய்வில் இதுவரை தீவிரமான பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
6-11 வயதுள்ள குழந்தைகள்
- தோராயமாக, 6-11 வயது வரையிலான 4,000 குழந்தைகள் Moderna COVID-19 தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகளில் பங்குபெற்றுள்ளனர். தடுப்பூசிக்கு இந்த வயதினரின் நோயெதிர்ப்பு சக்தியின் ஏற்புத்திறனானது மூத்த பங்கேற்பாளர்களின் ஏற்புத்திறனுக்குச் சமமாக இருந்தது. தொடர்ந்து நடைபெற்று வருகிற ஆய்வில் இதுவரை தீவிரமான பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
12-17 வயதுள்ள குழந்தைகள்
- தோராயமாக, 12-17 வயது வரையிலான 3,700 குழந்தைகள் Moderna COVID-19 தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகளில் பங்குபெற்றுள்ளனர். இந்த வயதினர் குழுவில், COVID-19 நோயைத் தடுப்பதில் தடுப்பூசி 93% அளவிற்கு பயனுள்ளதாக இருந்தது. தொடர்ந்து நடைபெற்று வருகிற ஆய்வில் இதுவரை தீவிரமான பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
Novavax
12-17 வயதுள்ள குழந்தைகள்
- தோராயமாக, 12-17 வயது வரையிலான 2,200 குழந்தைகள் Novavax COVID-19 தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகளில் பங்குபெற்றுள்ளனர். இந்த வயதினர் குழுவில், COVID-19 நோயைத் தடுப்பதில் தடுப்பூசி 78% அளவிற்கு பயனுள்ளதாக இருந்தது. தொடர்ந்து நடைபெற்று வருகிற ஆய்வில் இதுவரை தீவிரமான பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.