நம்பிக்கையை உருவாக்குதல் மற்றும் கட்டுக்கதைகளைத் தகர்த்தல்

நீங்கள் கோவிட்-19 தடுப்பூசி மீது நம்பிக்கை வைக்கலாம்!

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்கள் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளனர், ஆனால் சிலர் தடுப்பூசி போடுவதற்கு முன்பு கூடுதல் தகவல்களை அறிய விரும்பலாம். இது முற்றிலும் இயல்பானதுதான். நம் வாழ்க்கையை பாதிக்கும் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு நாம் அனைவரும் உறுதியான நம்பிக்கை கொள்ள விரும்புகிறோம்.

நம்பிக்கை கொள்வதற்கு, எங்களுக்கு நம்பகமான ஆதாரங்களில் இருந்து தகவல் தேவைப்படுகிறது. COVID-19 தடுப்பூசி தொடர்பான வதந்திகள் மற்றும் உண்மைகளை வேறுபடுத்தி அறிவதற்கு உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் உதவுங்கள்.

தடுப்பூசி போட விரும்பும் மக்கள் தங்கள் முடிவில் உறுதியுடன் இருக்க அவர்களுக்கு நீங்கள் உதவலாம். இதற்காக நீங்கள் இதைச் செய்யலாம்:

உங்கள் கருத்துக்களை சொல்வதன் மூலமும் அதன்படி செயல்படுவதின் மூலமும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் கருத்துக்களை மாற்றும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் COVID-19 தடுப்பூசிகளைப் பற்றி எப்படிப் பேசுவது (ஆங்கிலம் மட்டும்) சம்மந்தமாக இந்த உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும்.

தடுப்பூசி பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அறிந்து கொள்ளுங்கள் மேலும் அவற்றை உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் அவற்றை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் பிரபலமான தலைப்புகளில் வகைப்படுத்தியுள்ளோம்.

பாதுகாப்பு மற்றும் செயல்திறன்

நான் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் போட்டுக் கொள்ளாமல் இருப்பதிலும் என்ன முக்கியத்துவம் உள்ளது?

கோவிட்-19 தடுப்பூசி பெறுவது முற்றிலும் உங்கள் விருப்பம்தான் என்றாலும் இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தவரை எல்லோரும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி மூலமும் அல்லது சமீபத்திய நோய்த்தொற்றின் மூலமும் ஒரு சமூகத்தில் பலர் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும்போது COVID-19 வைரஸ் பரவுவது கடினமாகும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விகிதம் அதிகமாக இருந்தால், நோய்த்தொற்று விகிதமும் குறையும்.

தடுப்பூசி போடாதவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி, வைரஸைப் மற்றவர்களுக்கும் பரப்பக்கூடும். சிலர் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசியைப் பெற முடியாது, மேலும் இதனால் அவர்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளார்கள். நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், நீங்கள் COVID-19 மாறுபாடு (ஆங்கிலம் மட்டும்) நோய்த்தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அல்லது மரணிக்கும் அபாயமும் உள்ளது (ஆங்கிலம் மட்டும்). தடுப்பூசி போடுவது உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பம், அக்கம்பக்கத்தினர் மற்றும் சமூகத்தையும் பாதுகாக்கிறது.

பெரும்பாலான மக்கள் நோயிலிருந்து பிழைத்துக் கொள்ளும்போது, நான் ஏன் COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்?

COVID-19 ஆல் பாதிக்கப்படும் பலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. இருப்பினும், இந்த வைரஸ் மிகவும் கணிக்க முடியாதது, மேலும் சில COVID-19 மாறுபாடுகள் உங்களை தாக்கி உண்மையில் நோய்வாய்ப்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்பது எங்களுக்குத் தெரியும். நாள்பட்ட நோய்களின் பாதிப்புகள் இல்லாத இளைஞர்கள் உட்பட, சிலர் இந்த COVID-19 ஆல் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்படலாம் அல்லது மரணிக்க நேரிடலாம். "கோவிட் லாங்-ஹாலர்ஸ்" என்று அழைக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த நோயின் அறிகுறிகள் பல மாதங்கள் வரை நீடிக்கின்றன மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கின்றன. கோவிட்-19 ஒரு புதிய வைரஸ் என்பதால் அதன் நீண்டகால விளைவுகள் அனைத்தும் நமக்குத் தெரியவில்லை. தடுப்பூசி போடுவது மட்டுமே வைரஸுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பாக உள்ளது.

தடுப்பூசி உண்மையில் பாதுகாப்பானதா அல்லது பயனுள்ளதா?

ஆம், COVID-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை. மருத்துவ பரிசோதனைகளில் பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுக்கு விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை செலுத்தி சோதித்துப் பார்த்தனர். தடுப்பூசிகள் U.S. Food and Drug Administration's (FDA, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெறத் தேவையான தரநிலைகள் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் உற்பத்தித் தரத்தினை பெற்று இருந்தன. அவைகள் அனைத்தும் COVID-19 ஆல் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்படுவதைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக உணரப்பட்டன. அதிலிருந்து, இந்த தடுப்பூசிகள் மில்லியன் கணக்கான மக்களுக்கு பாதுகாப்பாக வழங்கப்பட்டு வருகின்றன.

COVID-19 தடுப்பூசிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றி மேலும் அறிய இந்த வீடியோக்களை பார்க்கவும்:

 

இந்த தடுப்பூசி என்னுடைய குழந்தைக்கு பாதுகாப்பானதா?

ஆம். Pfizer தடுப்பூசி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாகக் காட்டப்பட்டது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது- தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வ இளைஞர்களில் யாரும் COVID-19 ஆல் பாதிக்கப்படவில்லை. Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) 6 மாதங்கள் வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் COVID-19 தடுப்பூசியை செலுத்த பரிந்துரைக்கிறது (ஆங்கிலம் மட்டும்).

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று நான் எப்படி நம்புவது?

கோவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த, Centers for Disease Control Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) ஆனது தடுப்பூசி பாதுகாப்பைக் கண்காணிக்கும் நாட்டின் திறனை விரிவுபடுத்தி வலுப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கோவிட்-19 தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைகளின் போது பார்த்திராத பிரச்சனைகளைத் தடுப்பூசி பாதுகாப்பு நிபுணர்கள் கண்காணித்து கண்டறிய முடியும்.

கோவிட்-19 தடுப்பூசி மூலம் எனக்கு கோவிட்-19 நோய் ஏற்படுமா?

இல்லை, உங்களுக்கு தடுப்பூசியிலிருந்து COVID-19 நோய் பரவாது. கோவிட்-19 தடுப்பூசிகளில் கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் இல்லை.

எனக்கு ஏற்கனவே கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் நான் தடுப்பூசி எடுக்க வேண்டுமா?

ஆமாம், உங்களுக்கு ஏற்கனவே கோவிட்-19 வந்து இருந்தாலும் நீங்கள் இன்னும் தடுப்பூசி போட வேண்டும். நீங்கள் பாதிக்கப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு COVID-19 ஆல் மீண்டும் பாதிக்கப்படுவது வழக்கமல்ல என்று தரவுகள் காட்டுகின்றன. அதாவது, சிறிது காலத்திற்கு உங்களுக்கு கோவிட்-19 (இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எனப்படும்) பாதிப்பிலிருந்து கொஞ்சம் பாதுகாப்பு கிடைக்கலாம். இருப்பினும், இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. நீங்கள் ஏன் இன்னும் COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் (ஆங்கிலம் மட்டும்) என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.

தடுப்பூசிக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

நோய்த்தொற்றிலிருந்து கிடைக்கும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி, மறுதொற்றுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது, ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு முதலில் தொற்று ஏற்படும் போது, அது அவர்களிடம் தீவிர நோய், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்பதை வலியுறுத்துவது முக்கியம். COVID-19 தொற்றுக்குப் பிறகு, சிலருக்கு ஆன்டிபாடிகள் உருவாகலாம், ஆனால் சிலருக்கு உருவாகாமல் போகலாம். நோய்த்தொற்றுக்குப் பிறகு, குறிப்பிட்ட அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குபவர்களுக்கு, அந்த பாதுகாப்பு எவ்வளவு வலிமையானது, எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது எந்த திரிபிற்கான நோய் எதிர்ப்பு சக்தி என்பதை அவர்களால் கூற இயலாது.

COVID-19ஆல் மீண்டும் ஏற்படும் தொற்று அல்லது தீவிரமான நோய் ஆகியவற்றைத் தடுப்பதற்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நாம் நம்ப முடியாது என்பதால், சமீபத்திய தடுப்பூசி வரை செலுத்தி புதுப்பித்த நிலையில் இருப்பது, SARS-COV-2 நோய்த்தொற்றுகள், அதன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் முன்னோக்கி பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த பாதுகாப்பு மற்றும் முதன்மை உத்தியாக உள்ளது.

இனப்பெருக்க ஆரோக்கியம்

நான் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டால் பெற்றால் நான் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா?

ஆம். இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசிகளைப் பற்றிய உங்கள் கவலைகள் புரிந்து கொள்ளத்தக்கவை. இந்த விஷயத்தில் நமக்குத் தெரிந்தது: தடுப்பூசிகள் கருவுறாமை அல்லது ஆண்மையின்மையை ஏற்படுத்துகின்றன என்பதற்கு எந்த விதமான அறிவியல் ஆதாரமும் கிடையாது. தடுப்பூசி உங்கள் உடலில் நுழையும் போது, அது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புடன் இணைந்து கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட ஆன்டிபாடிகளை (எதிர்ப்பான்கள்) உருவாக்குகிறது. இந்த செயல்முறை உங்கள் இனப்பெருக்க உறுப்புகளில் தலையிடாது.

The American College of Obstetricians and Gynecologists (ACOG, அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி) எதிர்காலத்தில் கருத்தரிக்க விரும்பும் அல்லது தற்போது கர்ப்பமாக இருக்கும் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் அனைவருக்கும் COVID-19 தடுப்பூசியை பரிந்துரைக்கிறது. கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பலர் கர்ப்பம் அடைந்தனர் அல்லது ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

கர்ப்பமாக இருக்கும் போது மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது கோவிட்-19 தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது பற்றிய கூடுதல் ஆதாரவளங்களுக்கு, One Vax, Two Lives என்ற இணையதளத்தில் இன்று வரையிலான புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பார்க்கவும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பானதா?

ஆம், நீங்கள் கர்ப்பம் அடைந்திருந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், மேலும் American College of Obstetricians and Gynecologists (ACOG) (அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி) “(ஆங்கிலம் மட்டும்)” (ஆங்கிலம் மட்டும்) கருவுற்ற தாய்மார்களுக்கும் தடுப்பூசியை பரிந்துரைக்கிறது. கோவிட்-19 தடுப்பூசி கர்ப்பம், உங்கள்குழந்தையின்வளர்ச்சி, பிறப்பு அல்லது கருவுறுதல் ஆகியவற்றில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும்இல்லை.

கர்ப்பமாக இருக்கும் போது மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது கோவிட்-19 தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது பற்றிய கூடுதல் ஆதாரவளங்களுக்கு, One Vax, Two Lives என்ற இணையதளத்தில் இன்று வரையிலான புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பார்க்கவும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பனதா?

ஆம், நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நீங்கள் தடுப்பூசி பெற விரும்பினால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த தேவையில்லை. உண்மையில், ஆரம்பகால அறிக்கைகள் உங்கள் உடலானது தாய்ப்பால் மூலம் உங்கள் குழந்தைக்கு ஆன்டிபாடிகளை (எதிர்ப்பான்கள்) அனுப்ப தடுப்பூசி உதவக்கூடும் என்று கூறுகின்றன. மேலும் ஆய்வுகள் தேவை, ஆனால் இது உறுதி செய்யப்பட்டால், அது உங்கள் குழந்தையை COVID-19 நோயிலிருந்து பாதுகாக்க உதவும்.

COVID-19 தடுப்பூசி தாய்மார்களையும் மற்றும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளையும் எவ்வாறு பாதுகாக்கிறது (ஆங்கிலம் மட்டும்) என்பது பற்றி அறிய மேலும் படிக்கவும்.

தடுப்பூசி என் மாதவிடாய் சுழற்சியை மாற்றி விடுமா?

தடுப்பூசி போடப்பட்ட பிறகு சிலர் தங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்களை காண்பதாக புகாரளித்துள்ளனர், ஆனால் இவை நீண்ட கால விளைவுகள் என்று தெரிவிக்க தற்போது தரவுகள் எதுவும் இல்லை. மாதவிடாய் சுழற்சிகள் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் மாறலாம்.

மூலப்பொருட்கள்

தடுப்பூசிகளில் உள்ள மூலப்பொருட்கள் என்ன?

ஆன்லைனில் அல்லது சமூக ஊடகங்களில் சில வதந்திகளையும் மற்றும் உண்மைக்குப் புறம்பாக பட்டிலியலிடப்பட்ட மூலப்பொருட்களையும் நீங்கள் காணலாம். இவை அனைத்தும் பொதுவான கட்டுக்கதைகளாகும். COVID-19 தடுப்பூசிகளில் உள்ள மூலப்பொருட்கள் (ஆங்கிலம் மட்டும்) எல்லா தடுப்பூசிகளுக்கும் போதுவானவையாகும். மூலப்பொருளைப் பாதுகாத்து, உடலில் சிறப்பாகச் செயல்பட உதவுகின்ற, சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது தடுப்பூசியைப் பாதுகாக்கின்ற எம்ஆர்என்ஏ (mRNA) அல்லது மாற்றியமைக்கப்பட்ட அடினோவைரஸ் மற்றும் கொழுப்பு, உப்புகள் மற்றும் சர்க்கரைகள் போன்ற செயலில் உள்ள மூலக்கூறுகளை உள்ளடக்கி உள்ளன.

Novavax COVID-19 தடுப்பூசி என்பது ஒரு புரத சப்யூனிட் அடிப்படையிலான தடுப்பூசி ஆகும். இது தடுப்பூசியானது உடலில் சிறப்பாக செயல்பட உதவுவதற்கான சேர்ப்பு பொருள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த தடுப்பூசி mRNA ஐப் பயன்படுத்துவதில்லை.

மூலப்பொருட்களின் முழு விவரப் பட்டியலையும் Pfizer (ஆங்கிலம் மட்டும்), Moderna (ஆங்கிலம் மட்டும்), Novavax (ஆங்கிலம் மட்டும்), மற்றும் Johnson & Johnson (ஆங்கிலம் மட்டும்) ஆகியவற்றில் உள்ள உண்மை தாள்களில் காணவும்.

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியில் கரு திசு உள்ளதா?

Johnson & Johnson COVID-19 தடுப்பூசி மற்ற பல தடுப்பூசிகளின் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இதில் கருவின் பாகங்கள் அல்லது கரு உயிரணுக்கள் எதுவும் இல்லை. தடுப்பூசியின் ஒரு பகுதி 35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்புகளிலிருந்து பெறப்பட்ட உயிரணுக்களின் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட நகல்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அப்போதிருந்து, இந்த தடுப்பூசிகளுக்கான செல் கோடுகள் ஆய்வகத்தில் பராமரிக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை தயாரிக்க கரு உயிரணுக்களின் கூடுதல் ஆதாரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இது சிலருக்கு புதிய தகவலாக இருக்கலாம். இருப்பினும், தட்டம்மை, ரூபெல்லா மற்றும் ஹெபடைடிஸ் ஏ (கல்லீரல் அழற்சி) ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளும் அதே முறையில் தயாரிக்கப்படுகின்றன.

தடுப்பூசிகளில் மைக்ரோசிப்புகள் உள்ளதா?

இல்லை, தடுப்பூசிகளில் மைக்ரோசிப் அல்லது கண்காணிப்பு கருவி எதுவும் இல்லை. அவை கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்க உங்கள் உடலுக்கு உதவும் ஒரு செயலில் உள்ள ஒரு மூலப்பொருளுடன் கொழுப்புகள், உப்புகள் மற்றும் சர்க்கரைகள் மட்டுமே கொண்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி என்னை காந்த சக்தியுள்ளவராக மாற்றுமா?

இல்லை, நீங்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றால் காந்த சக்தியுள்ளவராக மாற மாட்டீர்கள். தடுப்பூசிகளில் மின்காந்த புலத்தை உருவாக்கக்கூடிய பொருட்கள் இல்லை, மேலும் அவை உலோகங்கள் இல்லாதவை. மூலப்பொருட்களின் முழு விவரப் பட்டியலையும் Pfizer (ஆங்கிலம் மட்டும்), Moderna (ஆங்கிலம் மட்டும்), மற்றும் Johnson & Johnson (ஆங்கிலம் மட்டும்) ஆகியவற்றில் உள்ள உண்மை தாள்களில் காணவும் மேலும் தகவல்களுக்கு

பிற ஆரோக்கிய கவலைகள்

தடுப்பூசி போடுவதினால் எனக்கு இரத்த உறைவு ஏற்படுமா?

இரத்தக்கட்டிகள்உண்டாவதற்கானஆபத்துகுறைவு. Johnson & Johnson தடுப்பூசிபோடப்பட்டுஇரத்தக்கட்டிகள்உண்டானமக்களின்எண்ணிக்கையானதுதடுப்பூசிபோடப்பட்டுஇரத்தக்கட்டிகள்ஏற்படாதமில்லியன்கணக்கானமக்களுடன்ஒப்பிடும்போதுமிகவும்குறைவாகும். ஒப்பீட்டுஅளவில்,மில்லியன்கணக்கானபெண்கள்ஒவ்வொருநாளும்பயன்படுத்தும்கருத்தடைமாத்திரைகளினால்உண்டாகும்ஆபத்தைவிடமிகவும்குறைவாகும். கருத்தடைமற்றும் Johnson & Johnson COVID-19 தடுப்பூசிமற்றும்மேலும் (ஆங்கிலம்மட்டும்)உங்களின்சந்தேகங்களுக்குவிடைகாணுங்கள்.

உங்கள்ஆபத்துகுறித்துஉங்கள்சுகாதாரவழங்குநரிடம்பேசலாம். ஜான்சன்&ஜான்சன்தடுப்பூசிக்குப்பிறகுஇரத்தஉறைவுபற்றியபெரும்பாலானஅறிக்கைகள் 50 வயதுக்குகுறைவானவயதுவந்தபெண்களில்இருந்தன. நீங்கள் 18 முதல் 50 வயதுக்குட்பட்டபெண்ணாகஇருந்தால், உங்களுக்குஇரத்தக்கட்டிகள்வருவதற்கானஅதிகஆபத்துஇருப்பதைநீங்கள்அறிந்திருக்கவேண்டும், இதுமரணத்திற்குவழிவகுக்கும்.இரத்தஉறைவுகவலை Johnson & Johnson COVID-19 தடுப்பூசியுடன்மட்டுமேதொடர்புடையதாகஇருந்தது, Pfizer அல்லது Moderna தடுப்பூசிகளுடன்அல்ல. Johnson & Johnson தடுப்பூசிஎடுப்பதில்உங்களுக்குசந்தேகம்இருந்தால், உங்கள்சுகாதாரவழங்குநரிடம் Moderna மற்றும் Pfizer தடுப்பூசிகளைபோடுமாறுகேட்கவும்.

நான் இதயத்தசை அழற்சி (myocarditis) மற்றும் இதய உறை அழற்சி (pericarditis) பற்றி கவலைப்பட வேண்டுமா?

கோவிட்-19 தடுப்பூசிக்குப் பிறகு மயோகார்டிடிஸ் (இதயத் தசையின் வீக்கம்) மற்றும் பெரிகார்டிடிஸ் (இதயப் புறணி வீக்கம்) வழக்குகள் மிகவும் அரிதானவை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தடுப்பூசிக்குப் பிறகு இவற்றை உணர்கின்றனர். இவற்றை உணரும் நபர்களில், பெரும்பாலான வழக்குகளில் பதின்ம வயதினரும் மற்றும் இளம் வயதினரும் உள்ளனர், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் லேசானவை, மற்றும் மக்கள் பொதுவாக சொந்தமாக அல்லது குறைந்தபட்ச சிகிச்சையுடன் குணமடைந்து விடுகிறார்கள். கோவிட்-19 மூலம் நோய்வாய்ப்பட்டால் மயோகார்டிடிஸ் மற்றும் பெரிகார்டிடிஸ் நோய் வருவது பொதுவாக நிகழ்கிறது.

ஜூலை 30, 2021 வரை, 177 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ள நிலையில், Vaccine Adverse Event Reporting System (VAERS, தடுப்பூசி பாதகமான நிகழ்வு அறிக்கையிடல் அமைப்புக்கு), அளிக்கப்பட்ட 1500 க்கும் குறைவான அறிக்கைகளில், அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் வெறும் 699 மட்டுமே இருந்தன (ஆங்கிலம் மட்டும்).

உங்கள் ஆபத்து குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசலாம். தடுப்பூசி போட்ட பிறகு உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், அவற்றை VAERS (ஆங்கிலம் மட்டும்) க்கு தெரிவிக்கலாம்.

கோவிட்-19 தடுப்பூசிக்கு பிறகு வரும் மயோகார்டிடிஸ் மற்றும் பெரிகார்டிடிஸ் நோய்கள் (ஆங்கிலம் மட்டும்) பற்றி மேலும் அறியவும்.

எனக்கு அடிப்படை உடல்நிலைப் பிரச்சனை இருந்தால் நான் தடுப்பூசி பெறலாமா?

அடிப்படை உடல்நலம் அல்லது மருத்துவ நிலைமைகள் உள்ள பெரும்பாலான மக்கள் COVID-19 தடுப்பூசிகளைப் பெறலாம். உங்கள் உடல்நலப் பராமரிப்பு வழங்குநருக்கு உங்கள் ஒவ்வாமைகள் மற்றும் உடல் நிலைகள் அனைத்தையும் தெரியப்படுத்தவும். உண்மையில், பல அடிப்படை நிலைமைகள் உங்களுக்கு கோவிட்-19 நோயின் சிக்கல்களால் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன, எனவே நீங்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க தடுப்பூசி இன்னும் முக்கியமானது.

இந்த குறிப்பிட்ட மக்கள் குழுக்கள் COVID-19 தடுப்பூசியைப் பெறலாம்:

  • எச்.ஐ.வி மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்.
  • தன்னுடல் தாங்குதிறன் உள்ளவர்கள்.
  • முன்னரே Guillain-Barré syndrome (GBS, குய்லைன் பார் சிண்ட்ரோம்)நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
  • முன்னரே பெல்ஸின் வாத நோய்க்கு ஆளானவர்கள்.

உங்களுக்கு கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளின் வரலாறு இருந்தால் அல்லது தடுப்பூசி மூலப்பொருளுக்கு கடுமையான ஒவ்வாமை எதிர்வினை ஏற்படலாம் என நினைத்தால், ஒவ்வாமை உள்ளவர்களுக்கு COVID-19 தடுப்பூசிகள் (ஆங்கிலம் மட்டும்) பற்றி படித்தறிந்து கொள்ளவும். கோவிட்-19 தடுப்பூசிக்குப் பிறகு அனாபிலாக்ஸிஸ் (ஆங்கிலம் மட்டும்) ஒவ்வாமை ஏற்படுவது அரிதானது மற்றும் அமெரிக்காவில் தடுப்பூசி போடப்பட்ட ஒரு மில்லியன் மக்களில் சுமார் 2 முதல் 5 பேருக்கு ஏற்பட்டது.

இந்தத் தகவல் (ஆங்கிலம் மட்டும்) மேற்கண்ட குழுக்களில் உள்ள மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி பெறுவது குற ித்து விவரமான முடிவை எடுக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தடுப்பூசிகள் என் டிஎன்ஏவை (DNA) மாற்றுமா?

இல்லை, கோவிட்-19 தடுப்பூசிகள் உங்கள் டிஎன்ஏவை மாற்றவதோ அல்லது திருத்துவதோ இல்லை. கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸிலிருந்து பாதுகாப்பை உருவாக்குவதைத் தொடங்குமாறு தடுப்பூசிகள் நம் உயிரணுக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குகின்றன. நமது டிஎன்ஏ வைக்கப்பட்டிருக்கும் செல் பகுதிக்குள் தடுப்பூசி நுழைவதில்லை. அதற்கு பதிலாக, தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நம் உடலின் இயற்கையான பாதுகாப்புடன் வேலை செய்கின்றன. mRNA (ஆங்கிலம் மட்டும்) மற்றும் viral vector (ஆங்கிலம் மட்டும்) கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றி மேலும் அறியவும்.

தடுப்பூசி நீண்ட கால பக்க விளைவுகளை ஏற்படுத்துமா?

கோவிட்-19 மற்றும் பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் குறித்து எங்களிடம் நிறைய அறிவியல் தகவல்கள் உள்ளன. அந்த தரவுகளின் அடிப்படையில், இந்த தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்று நிபுணர்கள் நம்புகின்றனர். கோவிட்-19 க்கான கிட்டத்தட்ட அனைத்து எதிர்வினைகளும் சோர்வு அல்லது புண் போன்ற லேசானவை, மேலும் அவை ஓரிரு நாட்கள் மட்டுமே நீடிக்கும் தன்மை உடையவையாகும். தீவிரமான அல்லது நீண்டகால எதிர்வினைகள் மிகவும் அரிதானவை.

எந்தவொரு நீண்ட கால பக்க விளைவுகளும் பொதுவாக தடுப்பூசி போட்ட எட்டு வாரங்களுக்குள் நிகழும். இதனால்தான் அமெரிக்காவின் Food and Drug Administration (FDA, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின்)அவசர பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்கும் முன்பு மருத்துவ பரிசோதனைகள் முடிந்து குறைந்தது எட்டு வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக நிபுணர்கள் COVID-19 தடுப்பூசிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். FDA தீவிர பக்க விளைவுகள் அல்லது எதிர்வினைகள் பற்றிய அறிக்கைகளை ஆராய்கிறது.