தடுப்பூசி பூஸ்டர் டோஸ்கள்

டிசம்பர் 9, 2022அன்று கடைசியாக புதுப்பிக்கப்பட்ட உள்ளடக்கம்

நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி பெற்றவுடன், சமீபத்திய பூஸ்டர் டோஸ்கள் வரை செலுத்தி புதுப்பித்த நிலையில் இருந்தால், இது COVID-19 தொற்றின் மூலம் வரக்கூடிய தீவிர நோய் மற்றும் இறப்புக்கு எதிராக உங்களுக்கு சிறந்த பாதுகாப்பைத் தரும்.

The Center for Disease Control and Prevention (CDC) ஆல் புதுப்பிக்கப்பட்ட பூஸ்டர் டோஸுக்கான பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் - அசல் மோனோவேலண்ட் Moderna COVID-19 தடுப்பூசியைப் பெற்ற முதன்மைத் தொடரை நிறைவுசெய்த குழந்தைகள் 2 மாதங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் பூஸ்டரைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர். 
  • 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் - இவர்களுக்கான Pfizer COVID-19 தடுப்பூசியில் தற்போது 2 மோனோவேலண்ட் Pfizer டோஸ்கள் மற்றும் 1 பைவேலண்ட் Pfizer டோஸ் இருக்கும்.
    • 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் - இன்னும் 3-டோஸ் Pfizer முதன்மைத் தொடரை தொடங்காத அல்லது இவர்களின் முதன்மைத் தொடரின் 3 ஆவது டோஸைப் பெறாதவர்கள் இப்போது புதுப்பிக்கப்பட்ட Pfizer தொடரைப் பெறுவார்கள்.
    • 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் - 3-டோஸ் Pfizer முதன்மைத் தொடரை ஏற்கனவே நிறைவுசெய்த குழந்தைகள் இந்த நேரத்தில் கூடுதல் டோஸ்கள் அல்லது பூஸ்டர்களுக்குத் தகுதி பெற மாட்டார்கள்.
  • வயது வந்தோர் முதன்மைத் தொடர் தடுப்பூசியை நிறைவு செய்திருந்து, ஆனால் அதற்கு முன் COVID-19 பூஸ்டரைப் பெறவில்லை என்றால்—மற்றும் புதுப்பிக்கப்பட்ட mRNA பூஸ்டரை அவர்களால் பெற முடியாவிட்டால் அல்லது பெறாவிட்டால், அவர்கள்Novavax COVID-19 பூஸ்டர்களைப் பெறலாம்
உங்களுக்கு கீழ்கண்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தால்… யார் பூஸ்டர் டோஸைப் பெற வேண்டும் எந்த பூஸ்டர் டோஸைப் பெற வேண்டும் எப்பொழுது பூஸ்டர் டோஸைப் பெறவேண்டும்
Pfizer-BioNTech 5 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்

5 வயது குழந்தைகள் - Pfizer தடுப்பூசியைப் பெற்ற குழந்தைகள் புதுப்பிக்கப்பட்ட Pfizer பைவேலண்ட் பூஸ்டரை மட்டுமே பெற முடியும்.

6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் - புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் Pfizer அல்லது Moderna பூஸ்டரைப் பெற வேண்டும்

முதன்மை தடுப்பூசி அல்லது முந்தைய பூஸ்டர் டோஸை செலுத்திய பிறகு, குறைந்தது 2 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும்
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களால் புதுப்பிக்கப்பட்ட mRNA பூஸ்டரைப் பெற முடியாவிட்டால் அல்லது பெறாவிட்டால், அவர்கள் Novavax பூஸ்டரைப் பெறுவதையும் தேர்ந்தெடுக்க முடியும். Novavax: முதன்மை தடுப்பூசித் தொடரை செலுத்திய பிறகு குறைந்தது 6 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும்
Moderna வயது 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல்

6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் - இவர்களின் முதன்மைத் தொடரின் அதே பிராண்டின் புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் டோஸைப் பெற வேண்டும்.

5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் - புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் Pfizer அல்லது Moderna பூஸ்டரைப் பெற வேண்டும்

முதன்மை தடுப்பூசி அல்லது முந்தைய பூஸ்டர் டோஸை செலுத்திய பிறகு, குறைந்தது 2 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும்
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களால் புதுப்பிக்கப்பட்ட mRNA பூஸ்டரைப் பெற முடியாவிட்டால் அல்லது பெறாவிட்டால், அவர்கள் Novavax பூஸ்டரைப் பெறுவதையும் தேர்ந்தெடுக்க முடியும். Novavax: முதன்மை தடுப்பூசித் தொடரை செலுத்திய பிறகு குறைந்தது 6 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும்
Novavax 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் - புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் Pfizer அல்லது Moderna பூஸ்டரைப் பெற வேண்டும் முதன்மை தடுப்பூசி அல்லது முந்தைய பூஸ்டர் டோஸை செலுத்திய பிறகு, குறைந்தது 2 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும்
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களால் புதுப்பிக்கப்பட்ட mRNA பூஸ்டரைப் பெற முடியாவிட்டால் அல்லது பெறாவிட்டால், அவர்கள் Novavax பூஸ்டரைப் பெறுவதையும் தேர்ந்தெடுக்க முடியும். Novavax: முதன்மை தடுப்பூசித் தொடரை செலுத்திய பிறகு குறைந்தது 6 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும்
Johnson & Johnson* 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் புதுப்பிக்கப்பட்ட பைவேலன்ட் Pfizer அல்லது Moderna பூஸ்டரைப் பெற வேண்டும். முதன்மை தடுப்பூசி அல்லது முந்தைய பூஸ்டர் டோஸை செலுத்திய பிறகு, குறைந்தது 2 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும்
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களால் புதுப்பிக்கப்பட்ட mRNA பூஸ்டரைப் பெற முடியாவிட்டால் அல்லது பெறாவிட்டால், அவர்கள் Novavax பூஸ்டரைப் பெறுவதையும் தேர்ந்தெடுக்க முடியும். Novavax: முதன்மை தடுப்பூசித் தொடரை செலுத்திய பிறகு குறைந்தது 6 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும்

*mRNA தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன, ஆனால் மற்றொரு தடுப்பூசியைப் பெற முடியாமலோ அல்லது செலுத்திக் கொள்ள விருப்பமில்லாமல் இருந்தாலோ Johnson & Johnson கோவிட்-19 தடுப்பூசி இன்னும் கிடைக்கிறது.

நோயெதிர்ப்புக் குறைபாடு கொண்டவர்களுக்கான டோஸ்கள்

நீங்கள் மிதமான அல்லது தீவிர நோயெதிர்ப்பு பாதிப்பு கொண்டவர் என்றால், வழிகாட்டுதல்கள் மாறுபடும்.

நீங்கள் பின்வரும் டோஸ்களைப் பெற்றிருந்தால்... நான் கூடுதல் டோஸ் பெறவேண்டுமா? நான் பூஸ்டர் டோஸைப் பெறலாமா?
Pfizer: 5 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 21 நாட்கள் இடைவெளியில் 2  டோஸ்கள் செலுத்தப்படும் ஆமாம், 5 வயதுக்கு மேற்பட்ட மிதமான அல்லது தீவிர நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் தங்களது 2 ஆம் ஊசிக்கு 28 நாட்களுக்குப் பிறகு ஒரு கூடுதல் டோஸ் பெற வேண்டும்.

ஆம், 5+ மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, புதுப்பித்த நிலையில் உள்ள கடைசி டோஸ் செலுத்திய 2 மாதங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் mRNA பூஸ்டர் பரிந்துரைக்கப்படுகிறது.

5 வயது குழந்தைகள் - Pfizer தடுப்பூசியைப் பெற்ற குழந்தைகள் புதுப்பிக்கப்பட்ட Pfizer பைவேலண்ட் பூஸ்டரை மட்டுமே பெற முடியும்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களால் புதுப்பிக்கப்பட்ட mRNA பூஸ்டரைப் பெற முடியாவிட்டால் அல்லது பெறாவிட்டால், முதன்மைத் தொடரை நிறைவு செய்த 6 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் Novavax பூஸ்டரைப் பெறுவதையும் தேர்ந்தெடுக்க முடியும்.

Pfizer: 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு 3 டோஸ்கள் கொடுக்கப்படுகின்றன. முதல் 2 டோஸ்கள் 21 நாட்கள் இடைவெளியில் கொடுக்கப்படுகின்றன மற்றும் 2  ஆம் டோஸ் பெற்ற 8 வாரங்களுக்குப் பிறகு 3 ஆம் டோஸ் கொடுக்கப்படுகிறது. இல்லை, மிதமான அல்லது தீவிர நோயெதிர்ப்பு குறைபாடுள்ள 6 மாதங்கள் முதல் 4 வயதுடைய குழந்தைகள் இந்த நேரத்தில் கூடுதல் முதன்மை டோஸ் பெறக்கூடாது. இல்லை, இந்த நேரத்தில் ஃபைசர் முதன்மைத் தொடரை ஏற்கனவே முடித்த 6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு mRNA பூஸ்டர் பரிந்துரைக்கப்படவில்லை.
Moderna: 6 மாதங்கள்  மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் செலுத்தப்படும் ஆமாம், 6 மாதங்கள்  வயதுக்கு மேற்பட்ட மிதமான அல்லது தீவிர நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் தங்களது 2 ஆம் ஊசிக்கு 28 நாட்களுக்குப் பிறகு ஒரு கூடுதல் டோஸைப் பெற வேண்டும்.

ஆம், 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, புதுப்பித்த நிலையில் உள்ள கடைசி டோஸ் செலுத்திய 2 மாதங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் mRNA பூஸ்டர் பரிந்துரைக்கப்படுகிறது.

6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் - இவர்களின் முதன்மைத் தொடரின் அதே பிராண்டின் புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் டோஸைப் பெற வேண்டும்.

5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் - புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் Pfizer அல்லது Moderna பூஸ்டரைப் பெற வேண்டும்

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களால் புதுப்பிக்கப்பட்ட mRNA பூஸ்டரைப் பெற முடியாவிட்டால் அல்லது பெறாவிட்டால், முதன்மைத் தொடரை நிறைவு செய்த 6 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் Novavax பூஸ்டரைப் பெறுவதையும் தேர்ந்தெடுக்க முடியும்.

Johnson & Johnson: ஒரு டோஸ், 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டது* ஆமாம், 18 வயதுக்கு மேற்பட்ட மிதமான அல்லது தீவிர நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் தங்களது 1 ஆவது டோஸ் J&J ஐப் பெற்ற 28 நாட்களுக்குப் பிறகு ஒரு கூடுதல் டோஸ் பெற வேண்டும்.

ஆம், 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, புதுப்பிக்கப்பட்ட கடைசி டோஸை நிறைவுசெய்த 2 மாதங்களுக்குப் பிறகு ஒரு பைவேலண்ட் mRNA பூஸ்டர் பரிந்துரைக்கப்படுகிறது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களால் புதுப்பிக்கப்பட்ட mRNA பூஸ்டரைப் பெற முடியாவிட்டால் அல்லது பெறாவிட்டால், முதன்மைத் தொடரை நிறைவு செய்த 6 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் Novavax பூஸ்டரைப் பெறுவதையும் தேர்ந்தெடுக்க முடியும்.

Novavax: 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 21 நாட்கள் இடைவெளியில் 2  டோஸ்கள் செலுத்தப்படும் இல்லை, மிதமான அல்லது தீவிர நோயெதிர்ப்புக் குறைபாடுள்ளவர்கள் இந்த நேரத்தில் கூடுதல் முதன்மை டோஸைப் பெறக்கூடாது.

ஆம், 12 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, புதுப்பித்த நிலையில் உள்ள கடைசி டோஸ் செலுத்திய 2 மாதங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் mRNA பூஸ்டர் பரிந்துரைக்கப்படுகிறது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களால் புதுப்பிக்கப்பட்ட mRNA பூஸ்டரைப் பெற முடியாவிட்டால் அல்லது பெறாவிட்டால், முதன்மைத் தொடரை நிறைவு செய்த 6 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் Novavax பூஸ்டரைப் பெறுவதையும் தேர்ந்தெடுக்க முடியும்.

*mRNA தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன, ஆனால் மற்றொரு தடுப்பூசியைப் பெற முடியாமலோ அல்லது செலுத்திக் கொள்ள விருப்பமில்லாமல் இருந்தாலோ Johnson & Johnson கோவிட்-19 தடுப்பூசி இன்னும் கிடைக்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் எடுத்துக்கொண்ட அதே தடுப்பூசி பிராண்ட்டைதான் பூஸ்டர் டோஸுக்காக பயன்படுத்த வேண்டுமா?

6 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் - இவர்களின் முதன்மைத் தொடரின் அதே பிராண்டின் புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் டோஸைப் பெற வேண்டும். 5 வயது குழந்தைகள் - Pfizer தடுப்பூசியைப் பெற்ற குழந்தைகள் புதுப்பிக்கப்பட்ட Pfizer பைவேலண்ட் பூஸ்டரை மட்டுமே பெற முடியும். 5 வயது குழந்தைகள் - Moderna தடுப்பூசியைப் பெற்ற குழந்தைகள் புதுப்பிக்கப்பட்ட Moderna அல்லது Pfizer பைவேலண்ட் பூஸ்டரைப் பெறலாம். 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் - புதுப்பிக்கப்பட்ட பைவேலண்ட் Pfizer அல்லது Moderna பூஸ்டரைப் பெற வேண்டும். வயது வந்தோர் முதன்மைத் தொடர் தடுப்பூசியை நிறைவு செய்திருந்து, ஆனால் அதற்கு முன் COVID-19 பூஸ்டரைப் பெறவில்லை என்றால்—மற்றும் புதுப்பிக்கப்பட்ட mRNA பூஸ்டரை அவர்களால் பெற முடியாவிட்டால் அல்லது பெறாவிட்டால், அவர்கள்Novavax COVID-19 பூஸ்டர்களைப் பெறலாம்

பூஸ்டர் ஊசிகள் ஏன் முக்கியமானவை?

தீவிரமான கோவிட்-19 நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் கடுமையான நோய்களுக்கு எதிராக தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க பூஸ்டர் டோஸ் உதவுகிறது. தீவிர COVID-19 பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்பு பூஸ்டர் டோஸ்கள் பரிந்துரைக்கப்பட்டு வந்தன, ஆனால் COVID-19 நோயிற்கு எதிரானப் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு 6 மாதங்கள் மேற்பட்ட அனைவருக்கும் அந்தப் பரிந்துரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா முழுவதும் தீவிரமாக பரவும் அதிக தொற்றுத்தன்மையுடைய திரிபுகளாலும் கோவிட்-19 நோயாளிகள் அதிகரித்து வருவதாலும் இது மிகவும் முக்கியமானதாக உள்ளது..

அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகள் கோவிட்-19 வைரஸால் ஏற்படும் நோயின் தீவிரத்தைக் குறைக்கிறது, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் வைரஸ் திரிபுகளுக்கு எதிராக செயல்படுவதில் இன்னும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இருப்பினும், தற்போது உள்ள தடுப்பூசிகள் காலப்போக்கில் அதன் பாதுகாப்பு வீழ்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம். பூஸ்டர் டோஸ்கள் கோவிட்-19 க்கு எதிராக, தடுப்பூசியால் தூண்டப்பட்ட பாதுகாப்பை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க உதவும்.

நீங்கள் இன்னும் மக்களுக்கு முதன்மைத் தொடர் தடுப்பூசியை அளிக்கிறீர்களா?

ஆம். முதன்மை தொடர்கள் (Johnson & Johnson-இன்கோவிட் vaccine முதல் கோவிட் தடுப்பூசி அல்லது Pfizer-இன் அல்லதுModerna-இன்இரண்டு தடுப்பூசிகள்) போட்டு முடித்த அனைவரும் இதற்கு தகுதியுள்ள முதன்மையானவர்கள். தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுடன் ஒப்பிடும்போது, ​​தடுப்பூசி போடப்படாத பெரியவர்களில் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் 10 முதல் 22 மடங்கு அதிகமாகும். தடுப்பூசி போடப்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, ​​தடுப்பூசி போடப்பட்டவர்கள் கோவிட்-19 இலிருந்து தீவிரமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறைவு.தடுப்பூசிகள் தனிநபர்கள் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கவும் மற்றும் கோவிட்-19 இலிருந்து நோய்வாய்ப்பட்டவர்களில் 50% பேர் வரை நீண்ட கால அறிகுறிகளை உருவாக்குவதைத் தடுக்கவும் உதவும்.

எங்களுக்கு பூஸ்டர் ஷாட்கள் தேவைப்படுகிறது எனில், தடுப்பூசிகள் வேலை செய்யவில்லை என்று அர்த்தமா?

இல்லை. அமெரிக்காவில் நம்மிடம் உள்ள தற்போதைய கோவிட்-19 தடுப்பூசிகள், கடுமையான நோய் பாதிப்புகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், மரணம், மற்றும் மாறுபட்ட கொரோனா வகைகளுக்கு எதிராகவும் சிறப்பாகச் செயல்படுகின்றன.  இருப்பினும், பொது சுகாதார வல்லுநர்கள் குறிப்பாக அதிக ஆபத்துள்ள மக்களிடையே கோவிட்-19 இன் லேசான மற்றும் மிதமான நோய்க்கு எதிரான பாதுகாப்பு குறைந்துவருவதை பார்க்கிறார்கள்.

புதுப்பிக்கப்பட்ட பூஸ்டர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஓமிக்ரான் திரிபுகளின் மூலம் பரவும் தொற்றுகளிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன. சிறந்த பாதுகாப்பிற்காக இருப்பில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட டோஸ்களையும் பெறுவது முக்கியம்.

பூஸ்டர் டோஸ் போடவில்லை என்றாலும், நான் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவனாக கருதப்படுவேனா?

நீங்கள் COVID-19 தடுப்பூசியின் முதன்மைத் தொடரை நிறைவுசெய்து, CDC ஆல் பரிந்துரைக்கப்பட்ட மிக சமீபத்திய பூஸ்டர் டோஸ் வரைப் பெற்றிருந்தால், COVID-19 தடுப்பூசிகளில் நீங்கள்புதுப்பித்த நிலையில்உள்ளீர்கள்.

நான் பூஸ்டர் டோஸ் பெறத் தகுதியானவன் என்பதை எப்படி தெரிவிப்பது?

நீங்கள் பூஸ்டர் டோஸ் பெறத் தகுதியானவர் என்பதை சுயமாக அறிக்கை செய்யலாம். அதற்கு நீங்கள் ஒரு சுகாதார வழங்குநரின் பரிந்துரையை காண்பிக்க தேவையில்லை.

உங்கள் பூஸ்டர் டோஸ் நியமனத்திற்கு தயவுசெய்து உங்கள் தடுப்பூசி அட்டையை எடுத்துக்கொள்ளவும். அதன் மூலம் தடுப்பூசி வழங்குபவர் நீங்கள் இரண்டு டோஸ் கொண்ட தடுப்பூசியைப் பெற்றுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்.Pfizer உங்கள் அட்டை உங்களிடம் இல்லையென்றால், வழங்குநர் உங்கள் பதிவைத் தேடிப் பார்க்கலாம்.

கூடுதல் தடுப்பூசி டோஸுக்கும் பூஸ்டர் தடுப்பூசி டோஸுக்கும் என்ன வித்தியாசம்?
  • முதன்மை தடுப்பூசித் தொடரை நிறைவுசெய்த போதுமான வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்காத சில நோயாளிகளுக்கு (மேலே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்) கூடுதல் டோஸ் பரிந்துரைக்கப்படுகிறது.
  • ஆரம்ப தடுப்பூசித் தொடருக்குப் பிறகு, காலப்போக்கில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்துவிடும் நோயாளிகளுக்கு பூஸ்டர் டோஸ் போடலாம்.
நோயெதிர்ப்பு குறைபாடு என்றால் என்ன?

நோயெதிர்ப்புக் குறைபாடுடையவர்கள் 2டோஸ் mRNA COVID-19 தடுப்பூசி அல்லது 1 டோஸ் J&J தடுப்பூசியைப் பெற்றுள்ளார்கள்.

பின்வரும் மருத்துவ நிலைகளில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், நீங்கள் மிதமானது முதல் கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுடையவராகக் கருதப்படுவீர்கள், மேலும் கோவிட் -19 தடுப்பூசியின் கூடுதல் டோஸிலிருந்து பயனடையலாம். இதில் உள்ளடங்கும் நபர்கள்:

  • கட்டிகள் அல்லது இரத்தப் புற்றுநோய்களுக்கான புற்றுநோய் சிகிச்சையைப் பெறுபவர்.
  • உறுப்புமாற்று அறுவைசிகிச்சை பெற்ற மற்றும் நோயெதிர்ப்புமண்டலத்தை அடக்க மருந்து எடுத்துக் கொள்பவர்
  • கடந்த 2 ஆண்டுகளில் ஒரு ஸ்டெம் செல்மாற்று அறுவைசிகிச்சை பெற்றவர் அல்லது நோய்எதிர்ப்பு சக்தியை அடக்க மருந்து எடுத்துக்கொள்பவர்
  • மிதமான அல்லது கடுமையான நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு (DiGeorge நோய்க்குறி, Wiskott-Aldrich நோய்க்குறி போன்றவை)
  • தீவிர அல்லது சிகிச்சையளிக்கப்படாத HIV தொற்று
  • அதிக அளவு கார்டி கோஸ்டீராய்டுகள் அல்லது நோயெதிர்ப்பு சக்தியை அடக்கும் பிற மருந்துகளுடன் சிகிச்சை பெறுபவர்.

எங்களிடம் உள்ள தடுப்பூசிகள் பெரும்பாலான வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராக 90% பயனுள்ளதாக இருந்த போதிலும், மிதமான மற்றும் கடுமையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நபர்கள் எப்போதும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில்லை என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மூன்றாவது டோஸ் ஒரு பூஸ்டராக கருதப்படுவதில்லை, ஆனால் இரண்டு டோஸ் மூலம் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்காதவர்களுக்கு கூடுதல் டோஸ் என கருதப்பபடுகிறது.

அடிப்படை உடல் நலப்பிரச்சனைகள்?

கீழே பட்டியலிடப்பட்டுள்ள உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்ட(ஆங்கிலம் மட்டும்) எந்த வயதினரும் கோவிட்-19 ஆல் கடுமையாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடுமையான நோய்பாதிப்பு என்றால், கோவிட்-19 உள்ள ஒருவர்:

  • மருத்துவமனையில் இருக்கவேண்டி வரலாம்.
  • தீவிர சிகிச்சை தேவைப்படும்
  • சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படும்
  • இறக்க நேரிடும்

நீங்கள் வயதானவராக இருந்தாலோ அல்லது இந்தப்பட்டியலில் உள்ளவை உட்பட, வேறுபல கடுமையான உடல்நலப்பிரச்சினைகள் உள்ளவராக இருந்தாலோ கோவிட்-19 தடுப்பூசிகள் (ஆரம்ப டோஸ்கள் மற்றும் பூஸ்டர்கள்)  மற்றும் கோவிட்-19 க்கான பிற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம். கோவிட்-19 நோயினால் கடுமையான நோய்பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள அனைத்து சாத்தியமான உடல்நல பிரச்சனைகளை இந்தப்பட்டியலில் சேர்க்கவில்லை. உங்களுக்கு இங்குச் சொல்லப்படாத உடல்நல பிரச்சனைகள் இருந்தால், அதை எவ்வாறுசிறப்பாக கையாள்வது மற்றும் கோவிட்-19 இலிருந்து எவ்வாறு உங்களைப் பாதுகாத்துக்கொள்வதுஎன்பதுகுறித்துஉங்களது உடல் நலப்பாதுகாப்பு வழங்குநரிடம் பேசுங்கள்.

  • புற்றுநோய்
  • நாள்பட்டசிறுநீரகநோய்
  • நாள்பட்டகல்லீரல்நோய்
  • நாள்பட்டநுரையீரல்நோய்கள்
  • டிமென்ஷியாஅல்லதுபிறநரம்பியல்பிரச்சனைகள்
  • நீரிழிவுநோய் (வகை 1 அல்லது 2)
  • டவுன்சிண்ட்ரோம்
  • இதயநோய்கள்
  • எச்.ஐ.விதொற்று
  • நோயெதிர்ப்புகுறைபாடுள்ளநிலை (பலவீனமானநோயெதிர்ப்புஅமைப்பு)
  • மனநலபிரச்சனைகள்
  • அதிகஎடைமற்றும்உடல்பருமன்
  • கர்ப்பம்
  • வளைந்தஉயிரணுஅல்லதுஇரத்தஅழிவுச்சோகை (தலசீமியா)
  • புகைபிடித்தல், தற்போதையஅல்லதுமுந்தையது
  • திடஉறுப்புஅல்லதுஇரத்தஸ்டெம்செல்மாற்றுஅறுவைசிகிச்சை
  • பக்கவாதம்அல்லதுசெரிப்ரோவாஸ்குலர்நோய், இதுமூளைக்குஇரத்தஓட்டத்தைபாதிக்கிறது
  • பொருள்பயன்பாட்டுகோளாறுகள்
  • காசநோய்
மிதமான அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் இந்த டோஸ்களைப் பெற மருத்துவரின் குறிப்பு/மருந்துச் சீட்டு அல்லது பிற ஆவணங்கள் தேவைப்படுமா?

இல்லை, தடுப்பூசிகள் வழங்கப்படும் அனைத்து இடங்களிலும் தனிநபர்கள் தங்களது சுய அடையாளத்தைக் காண்பித்து அனைத்து தடுப்பூசி டோஸ்களையும் செலுத்திக் கொள்ளலாம். இவ்வளவு மக்கள்தொகையும் தடுப்பூசியை அணுக கூடுதல் தடைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த இது உதவும். நோயெதிர்ப்புக் குறைபாடுள்ள நபர்களுக்கு அவர்களின் குறிப்பட்ட மருத்துவ நிலை குறித்து எதேனும் கேள்விகள் இருந்தால், கூடுதல் டோஸ் எடுப்பது அவர்களுக்குப் பொருந்துமா என்பதைப் பற்றி தங்கள் சுகாதார வழங்குநரிடம் கலந்தாலோசிக்கலாம்.