WA Notify உரை செய்தி

Washington State Department of Health (DOH, வாஷிங்டன் மாகாண சுகாதாரத் துறை) இலிருந்து ஒரு குறுஞ்செய்தியையோ அல்லது தொலைபேசி அறிவிப்பையோ பெற்றீர்களா?

இரண்டு வகையான குறுஞ்செய்திகள்/அறிவிப்புகளை தொலைபேசியின் மூலம் நீங்கள் பெறக்கூடும்.

COVID-19 பரிசோதனை பாசிட்டிவ் என்ற முடிவு பற்றிய அறிவிப்பு:

DOH க்கு புகாரளிக்கப்பட்ட COVID-19 பரிசோதனை பாசிட்டிவ் முடிவுடன் தொடர்புடைய அனைத்து தொலைபேசி எண்களுக்கும் சரிபார்ப்பு இணைப்புடன் அறிவிப்பு மற்றும்/அல்லது உரைச் செய்தியை DOH அனுப்புகிறது. இந்த அறிவிப்பு, மற்ற WA Notify பயனர்கள் COVID-19 தொற்றுக்கு வெளிப்பட்டிருக்கலாம் என்பதை அவர்களுக்கு எவ்வாறு அநாமதேயமாக அறிவிப்பது என்பது குறித்த தகவலை வழங்குகிறது.

நீங்கள் WA Notify பயனர் எனில், நீங்கள் அறிவிப்பைத் தட்டி அல்லது குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து WA Notify இல் உள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி சாத்தியமான வெளிப்பாட்டில் இருந்த பிற பயனர்களை அநாமதேயமாக எச்சரிக்கலாம்.

நீங்கள் WA Notify பயனர் இல்லையென்றால், உரை செய்தியை நிராகரிக்கலாம்.WA Notify குறித்தும் உங்கள் தொலைபேசியில் அதை எவ்வாறு சேர்ப்பது என்பது உள்ளிட்ட தகவல்களைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், WANotify.org ஐப் பார்வையிடவும்

சுய-பரிசோதனையைப் பயன்படுத்தும் WA Notify பயனர்களுக்கு (வீட்டுப் பரிசோதனைகள் என்றும் அழைக்கப்படுகிறது) COVID-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்திருந்தால், மற்ற WA Notify பயனர்கள் COVID-19 தொற்றுக்கு வெளிப்பட்டிருக்கலாம் என்று அநாமதேயமாகத் தெரிவிக்க சரிபார்ப்புக் குறியீட்டைக் கோரலாம். WANotify.org இணையதளத்தில் உள்ள “சுய-பரிசோதனையில் உங்களுக்கு COVID-19 பரிசோதனை பாசிட்டிவாக வந்திருந்தால், மற்றவர்களுக்கு எவ்வாறு அறிவிப்பது” என்ற பிரிவைப் பார்வையிடவும்.

சாத்தியமான COVID-19 வெளிப்பாடு பற்றிய அறிவிப்பு

தொற்றுக்கான வெளிப்பாட்டில் இருந்த WA Notify பயனர்கள் வெளிப்பாடு பற்றிய அறிவிப்பைப் பெறுவார்கள்.

உரை செய்திகள் மற்றும் அறிவிப்புகள் எப்படி இருக்கும்?

பரிசோதனையில் COVID-19 உறுதி செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு

உரை மற்றும் அறிவிப்பின் படம்

pop up notification screenshot

 

அறிவிப்பு மற்றும் உரையின் உள்ளடக்கம்

உங்கள் COVID-19 நோயறிதலைப் பகிரவும்

COVID-19 தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்பதை மற்றவர்களுக்கு அடையாளம் தெரியாமல் தெரியப்படுத்த இங்கே தட்டவும். உங்கள் சமுதாயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் பின்பற்றவும். உங்கள் தனிப்பட்ட தகவல் பகிர்ந்து கொள்ளப்படாது.

உரை மற்றும் அறிவிப்பின் படம்

text message screenshot

 

அறிவிப்பு மற்றும் உரையின் உள்ளடக்கம்

Message from (Mensaje del) WA Dept. of Health:

This number was given for a recent COVID-19 test. If this phone uses WANotify AND belongs to the person tested, please click the link within 24 hours. Follow the steps to anonymously alert others who may have been exposed.

https://us-wa.en.expressly/v?c=8w5io5c38ipo24fc

Se dio este numéro para una prueba reciente de COVID-19. Si este teléfono usa WANotify Y es de quien se hizo la prueba, haga clic en el enlace en las próximas 24 horas. Siga los pasos para alertar anónimamente a quienes tal vez hayan sido expuestos.

NOT the person tested? Need more information? Visit wanotify.org/text

¿NO es quien se hizo la prueba? ¿Desea más información? Visite notificawa.org/texto

உரை மற்றும் அறிவிப்பின் படம்

text message screenshot

 

அறிவிப்பு மற்றும் உரையின் உள்ளடக்கம்

Message from WA Dept. of Health:

If this phone uses WANotify AND belongs to the person tested, please click the link within 24 hours. Follow the steps to anonymously alert others who may have been exposed.

https://us-wa.en.expressly/v?c=5b56h13n80q9onll

NOT the person tested? Need more information? Visit wanotify.org/text.

உரை மற்றும் அறிவிப்பின் படம்

text message screenshot

 

அறிவிப்பு மற்றும் உரையின் உள்ளடக்கம்

Mensaje del Departamento de Salud del Estado de Washington:

Si este teléfono usa WANotify Y es de quien se hizo la prueba, haga clic en el enlace en las próximas 24 horas. Siga los pasos alertar anónimamente a quienes tal vez hayan sido expuestos.

https://us-wa.en.expressly/v?c=dvo8iije3v33saoj

¿NO es quien se hizo la prueba? ¿Desea más información? Visite notificawa.org/texto.

சாத்தியமான COVID-19 வெளிப்பாடு பற்றிய அறிவிப்பு

உரை மற்றும் அறிவிப்பின் படம்

exposure notification screenshot

அறிவிப்பு மற்றும் உரையின் உள்ளடக்கம்

நீங்கள் COVID-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்

COVID-19 க்கு நேர்மறையாக பரிசோதித்த ஒருவரின் அருகில் நீங்கள் இருந்தீர்கள். அடுத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் மேலும் நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். மேலும் அறிந்து கொள்ள விசையைத் தட்டவும்.

எனக்கு குறுஞ்செய்தி அல்லது அறிவிப்பு வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

WA Notify பயனர்கள் குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து அல்லது அறிவிப்பைத் தட்டி, செயலியில் உள்ள தங்கள் பரிசோதனை முடிவுகளை அநாமதேயமாக உறுதிப்படுத்துவதற்கான அனைத்துப் படிகளையும் பின்பற்றவும். சமீபத்தில் COVID-19 தொற்றுக்கு சாத்தியமாக வெளிப்பட்ட மற்ற WA Notify பயனர்களை இது அநாமதேயமாக எச்சரிக்கிறது. WA Notify பயனர்களின் முடிவுகளை அநாமதேயமாக உறுதிப்படுத்த அனுமதிப்பதன் மூலம் COVID-19 வேகமாகப் பரவுவதைத் தடுக்கிறது. தொற்று ஏற்பட்டவர்களைப் பற்றிய விசாரணை செயல்பாட்டின் போது பொது சுகாதார அமைப்பு மேலும் ஒரு சரிபார்ப்பு இணைப்பு அல்லது குறியீட்டை வழங்கலாம்.

பின்வரும் சூழ்நிலையில் உங்கள் முதன்மை மருத்துவரை அல்லது பரிசோதனை வழங்குநரைத் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:

  • நீங்கள் ஒரு உரை செய்தி மற்றும்/அல்லது அறிவிப்பைப் பெற்றுள்ளீர்கள், ஆனால் உங்களது அதிகாரப்பூர்வ சோதனை முடிவுகளைப் பெறவில்லை, அல்லது
  • உங்கள் சோதனை முடிவுகள் குறித்து உங்களுக்கு சந்தேகங்கள் உள்ளன

பொதுவான கேள்விகள்

இந்தWA Notify செயலிக்கு க்கு நான் யார் என்பது தெரியாவிட்டால், எனக்கு எப்படி உரைச் செய்தி மற்றும்/அல்லது அறிவிப்பை அனுப்பும்?

உரைகள் மற்றும் அறிவிப்புகளை DOHமூலம் அனுப்பப்படுகின்றன ,WA Notify அவற்றை அனுப்பாது. COVID-19 உறுதி செய்யப்படும் அனைவருக்கும் DOH ஒரு உரை மற்றும்/அல்லது அறிவிப்பை அனுப்புகிறது, ஏனெனில் WA Notify ஐ யார் பயன்படுத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. WA Notify நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் உரை மற்றும் அறிவிப்பைப் புறக்கணிக்கலாம்.

யாருக்கு குறுஞ்செய்தி அல்லது அறிவிப்பை அனுப்ப வேண்டும் என்று DOH க்கு எவ்வாறு தெரியும்?

சட்டப்படி, பல தொற்று நோய்களின் உறுதி செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள், தொடர்பு கொள்வதற்கானத் தகவலுடன் அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கங்களுக்காக தொற்று ஏற்பட்டவர்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் தொடர்புத் தடமறிதல் (ஆங்கிலத்தில் மட்டும்) DOH இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. பரிசோதனையில் பாசிட்டிவ் வந்த அனைவருக்கும் அறிவிப்பதின் மூலம் WA Notify பயனர்கள் விரைவாக செயல்பட அனுமதிக்கிறது மற்றும் சாத்தியமான தொடர்புகள் குறித்து அநாமதேயமாக மற்றவர்களை எச்சரிக்கிறது.

நான்WA Notify. நீங்கள் ஏன் எனக்கு உரை செய்தி அனுப்பினீர்க?

DOH சமீபத்தில் COVID-19 உறுதி செய்யப்பட்ட நபர்களால் பயன்படுத்தும் தொலைபேசி எண்களுக்கு ஒரு குறுஞ்செய்தி மற்றும்/அல்லதுபாப்-அப் அறிவிப்பை அனுப்புகிறது.

சோதனையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்DOH க்கு தெரியு- WA Notifyஐ யார் பயன்படுத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அனைவருக்கும் உரை மூலமாக செய்திகளை அனுப்புவதன் மூலம், நாங்கள் WA Notify பயனர்களுக்கு அறிவித்து அநாமதேயமாக மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுவது குறித்து எச்சரிக்கலாம் மற்றும் உயிர்களைக் காப்பாற்றலாம்.

WA Notifyஐ நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. WA Notify குறித்தும் உங்கள் தொலைபேசியில் அதை எவ்வாறு சேர்ப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை மேலும் அறிய விரும்பினால், WANotify.org ஐப் பார்வையிடவும்

எந்த தொலைபேசி எண்ணிலிருந்து உரை செய்தி வரும்?

1-844-986-3040 என்ற எண்ணில் இரு DOH செய்தி அனுப்பும்

எனக்கு ஒரு அறிவிப்பு மற்றும்/அல்லது ஒரு உரை செய்தி வந்துள்ளது. ஆனால் பரிசோதிக்கப்பட்ட நபர் எனது குடும்ப அல்லது வீட்டு உறுப்பினர் ஆவார். நான் என்ன செய்ய வேண்டும்?

பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்த WA Notify பயனர் வெளிப்பட்ட மற்றவர்களை அநாமதேயமாக எச்சரிக்கை செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், எனவே உங்களுக்குப் பொருந்தாத எந்தவிதமான குறுஞ்செய்திகளையும் அல்லது அறிவிப்புகளையும் நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தினர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் WA Notify பயனராக இருந்து அவர்களின் பரிசோதனை முடிவு பாசிட்டிவாக வந்து, இன்னும் அவர் முடிவை WA Notify இல் உறுதிப்படுத்தாமல் இருந்தால், அவர் WANotify.org இல் உள்ள “சுய பரிசோதனையில் COVID-19 பாசிட்டிவ் என்று வந்தால் மற்றவர்களுக்கு எவ்வாறு அறிவிப்பது” பகுதியில் உள்ள படிமுறைகளைப் பின்பற்றலாம்.

அறிவிப்புச் செய்தியைத் திறக்க அல்லது சரிபார்ப்பு இணைப்பைச் செயல்படுத்த எனக்கு எவ்வளவு நேர கால அவகாசம் இருக்கிறது?

WA Notify இல் உள்ள மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு, உங்களுக்கு அறிவிப்பு அல்லது குறுஞ்செய்தி வந்த பிறகு 24 மணிநேரம் உள்ளது. அந்த நேரத்திற்குள் உங்களால் அறிவிப்பைத் தட்ட முடியாவிட்டால் அல்லது உறுதிப்படுத்தல் இணைப்பை கிளிக் செய்ய முடியாவிட்டால், நீங்கள் WANotify.org இல் உள்ள “சுய பரிசோதனையில் COVID-19 பாசிட்டிவ் என்று வந்தால் மற்றவர்களுக்கு எவ்வாறு அறிவிப்பது” பகுதியில் உள்ள படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் WA Notify இல் உறுதிப்படுத்தல் குறியீடு ஒன்றைக் கோர முடியும்.

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இணைப்பைச் செயல்படுத்துவதற்கு WA Notify இல் சரிபார்ப்பு உரை அல்லது அறிவிப்பைப் பயன்படுத்த முடியுமா?

இல்லை. உங்கள் குடும்பத்தினர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் WA Notify பயனராக இருந்து அவர்களின் பரிசோதனை முடிவு பாசிட்டிவாக வந்து, இன்னும் அவர் முடிவை WA Notify இல் உறுதிப்படுத்தாமல் இருந்தால், அவர் WANotify.org இல் உள்ள “சுய பரிசோதனையில் COVID-19 பாசிட்டிவ் என்று வந்தால் மற்றவர்களுக்கு எவ்வாறு அறிவிப்பது” பகுதியில் உள்ள படிமுறைகளைப் பின்பற்றலாம்.

WA Notify இல் எனக்கு தொற்றிய தேதியை எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒரு iPhone-ல்:

  1. Settings (அமைப்புகள்) க்குச் செல்லவும்
  2. Exposure Notifications (வெளிப்பாட்டு அறிவிப்புகள்) ஐ தேர்வுசெய்யவும் அல்லது Exposure Notifications ஐ தேடல் பட்டியில் உள்ளிடவும்
  3. நீங்கள் தொற்றுக்கு சாத்தியமாக வெளிப்பட்டுள்ள தோராயமான தேதி “You may have been exposed to COVID-19 (நீங்கள் COVID-19 தொற்றுக்கு வெளிப்பட்டிருக்கக் கூடும்)” இன் கீழ் காட்டப்படும்

Android இல்:

  1. WA Notify ஆப்பைத் திறக்கவும்
  2. “Possible exposure reported (அறிவிக்ப்பட்ட சாத்தியமான வெளிப்பாடு” என்பதன் கீழ் See Details (விவரங்களை பார்க்கவும்)”
  3. நீங்கள் தொற்றுக்கு சாத்தியமாக வெளிப்பட்டுள்ள தோராயமான தேதி “Possible Expo-sure Date (சாத்தியமான வெளிப்பாட்டுத் தேதி)” இன் கீழ் காட்டப்படும்