கோவிட் -19 தடுப்பூசி

 

குடியேற்ற நிலையை பொருட்படுத்தாமல் 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி இலவசமாகக் கிடைக்கிறது.

உங்களுக்குத் தேவையான தகவல்களை நாங்கள் அளிக்க விரும்புகிறோம். நாங்கள் உங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கிக் கொண்டே இருப்போம். இதன்மூலம் உங்கள் உடல்நலத்திற்கான தெளிவான தேர்வுகளை நீங்கள் செய்யலாம்.

டிசம்பர் 17, 2021 – Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு) மற்றும் Washington State Department of Health (DOH, வாஷிங்டன் மாநில சுகாதாரத் துறை) 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் Johnson & Johnson கோவிட்-19 தடுப்பூசியை விட mRNA கோவிட்-19 தடுப்பூசியை (Pfizer  அல்லது Moderna) எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் Johnson & Johnson கோவிட்-19 தடுப்பூசி இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையை உள்ளடக்கிய Thrombosis with thrombocytopenia syndrome (TTS, த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் உடனான ரத்த உறைவு மற்றும் Guillain-Barré syndrome ( ,GBSகுய்லின்-பார்ரே சிண்ட்ரோம்),போன்ற நரம்புகளை சேதப்படுத்தும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை உங்களுக்கு mRNA தடுப்பூசியைப் பெற முடியாமலோ அல்லது செலுத்திக் கொள்ள விருப்பமில்லாமலோ இருந்தால் Johnson & Johnson தடுப்பூசி இன்னும் கிடைக்கிறது. உங்களுக்கான விருப்பங்களைப் பற்றி ஒரு சுகாதார வழங்குநரிடம் பேசவும்.

கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கு நான் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

நான் எவ்வாறு தடுப்பூசியைப் பெறலாம்?

சந்திப்பை நியமனம் செய்வதற்குதடுப்பூசிகண்டுபிடிப்பான் ஐப் பார்வையிடவும்.

உங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் இடங்களை அறிய உங்கள் அஞ்சல் குறியீட்டை 438-829 (GET VAX) என்ற எண்ணிற்கு உரை செய்தியாக அனுப்பலாம்.

கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஏதேனும் கேள்விகள் உள்ளதா? தடுப்பூசி செலுத்துவதற்கு சந்திப்பை நியமனம் செய்ய உங்களுக்கு உதவி தேவையா? 1-800-525-0127 என்ற கோவிட் -19 தகவலுக்கான ஹாட்லைனை அழைக்கவும். பின்னர் #ஐ அழுத்தவும். மொழி உதவி கிடைக்கிறது.

உங்கள் இரண்டாவது தடுப்பூசிக்கு (Moderna/Spikevax or Pfizer/Comirnaty) திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் முதல் டோஸின் அதே தடுப்பூசியைப் பெற வேண்டும்.

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ வீட்டை விட்டு வெளியேற முடியாதவர் எனில், பாதுகாப்பான ஆன்லைன் படிவத்தை (ஆங்கிலம்) நிரப்பவும். உங்கள் பதில்கள் தனிநபர்களை தயாராக உள்ள மாவட்ட மற்றும்/அல்லது மாநில மொபைல் தடுப்பூசி குழுக்களுடன் இணைக்க அனுமதிக்கும்.

வீடு, பயன்பாட்டுச் சேவைகளுக்கான உதவி, சுகாதார காப்பீடு போன்ற பிற கோவிட் -19 தொடர்பான சிக்கல்களுக்கு 211 ஐ அழைக்கவும் அல்லது wa211.org ஐப் பார்வையிடவும்

மேலும் தகவலுக்கு, கோவிட் -19 தடுப்பூசி குறித்துப் பார்க்கவும்: என்ன அறிந்து கொள்ள வேண்டும் உண்மை தாள்.

தடுப்பூசி பெற நான் அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டுமா?

இல்லை, தடுப்பூசி பெற நீங்கள் அமெரிக்கக் குடிமகனாக இருக்க தேவையில்லை. அதாவது தடுப்பூசி பெற உங்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு எண் அல்லது உங்கள் குடியேற்ற நிலை கொண்ட பிற ஆவணங்கள் தேவையில்லை. சில தடுப்பூசி வழங்குநர்கள் ஒரு சமூக பாதுகாப்பு எண்ணைக் கேட்கலாம், ஆனால் நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை.

தடுப்பூசி பெறுவதற்கு உங்கள் குழந்தை அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்கள் குடியேற்ற நிலை குறித்து கேட்க மாட்டார்கள். பெரும்பாலான சூழ்நிலைகளில், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பெற்றோர்களும் பாதுகாவலர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

Washington State Department of Health (வாஷிங்டன் மாநில சுகாதாரத் துறை) 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பரிந்து ரை செய்கிறது.

என்னிடம் தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா?

இல்லை. உங்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது அதற்காக உங்கள் வழங்குநர் மூலமாகவோ அல்லது தடுப்பூசி செலுத்தும் இடத்திலோ எவ்வகையிலும் கட்டணம் வசூலிக்கப்படாது. இது தனியார் காப்பீடு, Apple Health (Medicaid), Medicare உளள்ளவர்களுக்கும், அல்லது காப்பீடு இல்லாதவர்களுக்கு பொருந்தும்.

நீங்கள் உங்கள் வழங்குநரிடம் தடுப்பூசி போடும்போது பிற சேவைகளைப் பெற்றால், அலுவலக வருகைக்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம். இதைத் தவிர்க்க, மருத்துவ செலவுகளை பற்றி உங்கள் வழங்குநரிடம் முன்பே கேட்டுக்கொள்ளலாம்.

உங்களிடம் மருத்துவக் காப்பீடு இல்லையென்றால், வழங்குநர்கள் தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்க முடியாது மற்றும் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் தேவைகளை மீறுவதாக இருக்கலாம். கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்பட்டால் covid.vaccine@doh.wa.gov என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

உங்களிடம் உடல் நலக் காப்பீடு மற்றும் தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தால், முதலில் உங்கள் இன்சூரன்ஸ் திட்டத்தை தொடர்பு கொள்ளவும். இது உங்கள் சிக்கலைச் சரிசெய்யவில்லை என்றால், காப்பீட்டு ஆணையர் அலுவலகத்தில் நீங்கள் புகார்செய்யலாம் (ஆங்கிலம்).

 • தொலைபேசி மொழிபெயர்ப்பாளர் சேவைக்கு 800-562-6900 ஐ அழைக்கவும் (உங்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது)
 • TDD/TYY: 360-586-0241
 • TDD: 800-833-6384
எனக்கு உடல் நலக் காப்பீடு இல்லையென்றால் என்ன செய்வது?

உங்களிடம் காப்பீடு இல்லை என்றால், உங்கள் வழங்குநரிடம் தெரியப்படுத்துங்கள். இருப்பினும் நீங்கள் தடுப்பூசியை கட்டணமின்றி பெறலாம். உங்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு வழங்குநருக்கு பணம் செலுத்தும் ஒரு திட்டம் (ஆங்கிலம்) மத்திய அரசிடம் உள்ளது

தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனில், எனது உடல்நலக் காப்பீட்டுத் தகவல் ஏன் கேட்கப்படுகிறது?

உங்களுக்கு தடுப்பூசி வழங்கும்போது, உங்கள் தடுப்பூசி வழங்குநர் உங்களிடம் காப்பீட்டு அட்டை இருக்கிறதா என்று கேட்கலாம். இது உங்களுக்கு தடுப்பூசி (தடுப்பூசி செலுத்தும் கட்டணம்) வழங்கியதற்கான கட்டணத்தை அவர்கள் திருப்பிப் பெற உதவும். உங்களுக்கு காப்பீடு இல்லையென்றால் உங்கள் வழங்குநருக்கு தெரியப்படுத்துங்கள். இருந்தாலும், நீங்கள் தடுப்பூசியை கட்டணமின்றி பெறலாம்.

தடுப்பூசி செலுத்தும் கட்டணம் என்றால் என்ன மற்றும் அதை யார் செலுத்துகிறார்கள்?

தடுப்பூசி செலுத்தும் கட்டணம் என்பது உங்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார பராமரிப்பு வழங்குநர் வசூலிக்கும் கட்டணமாகும். இது தடுப்பூசியின் விலையில் இருந்து வேறுபட்டதாகும்.

தடுப்பூசிக்கான முழுச் செலவையும் மத்திய அரசு செலுத்துகிறது. உங்களுக்கு பொது அல்லது தனியார் உடல்நலக் காப்பீடு இருந்தால், உங்கள் தடுப்பூசி வழங்குநர் உங்களுக்கு செலுத்திய தடுப்பூசிக்கானக் கட்டணத்தை காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து திருப்பி பெறலாம். உங்களுக்கு காப்பீடு இல்லையென்றால், உங்களுக்கு தடுப்பூசி செலுத்த வழங்குநருக்கு பணம் அளிக்கும் திட்டம் (ஆங்கிலம்) மத்திய அரசு வழங்குகிறது.

கோவிட் -19 தடுப்பூசி செலுத்துவதற்கு உங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது. இது தனியார் காப்பீடு, Apple Health (Medicaid), Medicare உளள்ளவர்களுக்கும், அல்லது காப்பீடு இல்லாதவர்களுக்கு பொருந்தும்.

தற்போது கிடைக்கும் கோவிட் -19 தடுப்பூசிகள் என்னென்ன?

U.S. Food and Drug Administration (FDA, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால்) மூன்று தடுப்பூசிகள் அவசர பயன்பாட்டிற்காக முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இந்தத் தடுப்பூசிகள் தற்போது Washington மாநிலத்தில் வழங்கப்படுகின்றன. மேலும் Johnson & Johnson கோவிட்-19 தடுப்பூசியை விட  Pfizer (Comirnaty) மற்றும் Moderna  (Spikevax) தடுப்பூசியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் Johnson & Johnson கோவிட்-19 தடுப்பூசி இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையை உள்ளடக்கிய Thrombosis with thrombocytopenia syndrome (TTS, த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் உடனான ரத்த உறைவு) மற்றும் Guillain-Barré syndrome ( ,GBSகுய்லின்-பார்ரே சிண்ட்ரோம்) போன்ற நரம்புகளை சேதப்படுத்தும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

Pfizer-BioNTech கோவிட் -19 தடுப்பூசி (Comirnaty):

து 21 நாட்கள் இடைவெளியில் கொடுக்கப்படக் கூடிய, இரண்டு டோஸ் அளவு கொண்ட தடுப்பூசியாகும், மேலும்:

 • ூடுதல் டோஸ் (மூன்றாவது) நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கானது.
 • இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு குறைந்தது ஐந்து மாதங்களுக்குப் பிறகு போடப்படுகிறது.

இரண்டாவது டோஸ் பெற்ற பிறகு முதல் இரண்டு வாரங்கள் வரை நீங்கள் முழுமையாக பாதுகாப்புப் பெற்றதாகக் கருதப்படுவதில்லை. 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி Comirnaty என்ற பெயரில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 5 முதல் 15 வயதுடைய இளைஞர்களுக்கு அவசர பயன்பாட்டிற்காக இந்தத் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவச் சோதனைகளில் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

Moderna  கோவிட்-19 தடுப்பூசி (Spikevax) :

இது 28 நாட்கள் இடைவெளியில் கொடுக்கப்படக் கூடிய, இரண்டு டோஸ் அளவு கொண்ட தடுப்பூசியாகும், மேலும்:

 • கூடுதல் டோஸ் (மூன்றாவது) நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கானது.
 • இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு குறைந்தது ஐந்து மாதங்களுக்குப் பிறகு போடப்படுகிறது.

இரண்டாவது டோஸ் பெற்ற பிறகு முதல் இரண்டு வாரங்கள் வரை நீங்கள் முழுமையாக பாதுகாப்புப் பெற்றதாகக் கருதப்படுவதில்லை. மருத்துவச் சோதனைகளில் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

Johnson & Johnson – Janssen கோவிட்-19 தடுப்பூசி:

இந்த தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களின் அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு டோஸ் (ஒரு ஷாட்) தடுப்பூசி ஆகும். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், முதல் இரண்டு வாரங்கள் வரை முழுமையாக பாதுகாக்கப்படுவதாக கருதப்படுவதில்லை. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முதல் டோஸ் பெற்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களுக்குப் பிறகு ஒரு பூஸ்டர் டோஸ் பெறவேண்டும். மருத்துவச் சோதனைகளில் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. Johnson & Johnson தடுப்பூசியை விட Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

கோவிட் -19 தடுப்பூசியின் அனைத்து டோஸ்களையும் நான் பெற வேண்டுமா?

பெரும்பாலானவர்களுக்கு Comirnaty/Pfizer மற்றும் Spikevax/Moderna இரண்டும் இரு டோஸ்களாக வழங்கப்படும். வைரஸால் பாதிப்புக்குள்ளாவதற்கு அதிகம் வாய்ப்புள்ளவர்கள் அல்லது தடுப்பூசிக்கு நல்ல பலனளிக்காதவர்களுக்கு மூன்று அல்லது நான்கு டோஸ்கள் தேவைப்படலாம். நீங்கள் Comirnaty/Pfizer அல்லது Spikevax/Moderna தடுப்பூசியைப் பெற்றால், கோவிட் -19 க்கு எதிராக அதிகபட்ச பாதுகாப்பைப் பெற பரிந்துரைக்கப்பட்ட அனைத்து டோஸ்களையும் பெற வேண்டும்.

Johnson & Johnson-Janssen கோவிட் - 19 தடுப்பூசி ஒரு ஒற்றை டோஸ் தடுப்பூசியாகும். மேலும் இது 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு குறைந்தது இரண்டு மாதங்களுக்குப் பிறகு பரிந்துரைக்கப்படும் பூஸ்டர் டோஸ் ஆகும்.

எனக்கு இரண்டாவது டோஸ் செலுத்தத் தாமதமாகிவிட்டால், மீண்டும் தடுப்பூசியை முதலில் இருந்து தொடங்க வேண்டுமா?

இல்லை. இரண்டாவது டோஸ் பெறத் தாமதமாகி விட்டால் நீங்கள் தடுப்பூசியை முதலில் இருந்து தொடங்க வேண்டிய தேவையில்லை.

உங்கள் முதல் டோஸ் செலுத்தப்பட்ட நாளில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட நாட்கள் முடிந்தவுடன் இரண்டாவது டோஸை கூடிய விரைவில் பெறுங்கள் (Comirnaty/Pfizer க்கு 21 நாட்கள், Spikevax/Moderna விற்கு 28 நாட்கள்).

இரண்டாவது டோஸை நீங்கள் எவ்வளவு காலம் தாழ்த்தினாலும் இரண்டு டோஸ் பெறுவது முக்கியம்.

நோயெதிர்ப்பு குறைபாடு மற்றும் கூடுதல் டோஸுக்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால், உங்கள் இரண்டாவது டோஸுக்கு பிறகு குறைந்தது 28 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

நான் கர்ப்பமாக இருந்தால், பாலூட்டுபவராக இருந்தால் அல்லது கர்ப்பம் தரிக்கத் திட்டமிட்டால், எனக்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்தலாமா?

ஆம், கர்ப்ப காலத்திலும் கோவிட் -19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று தரவு காட்டுகிறது. Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்)(ஆங்கிலம்),American College of Obstetricians and Gynecologists (ACOG, அமெரிக்கன் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி) மற்றும் Society for Maternal-Fetal Medicine (SMFM, சொசைட்டி ஃபார் மெட்டர்னல்-ஃபெடல் மெடிசின்(ஆங்கிலம் மட்டும்) கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் அல்லது கர்ப்பம் தரிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசியை பரிந்துரை செய்கிறது. சில ஆய்வுகள் உங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால், உங்கள் குழந்தையும் கர்ப்பம் மற்றும் பாலூட்டுதல் வழியாக கோவிட் -19 க்கு எதிரான ஆன்டிபாடிகளைப் பெறலாம் எனக் காட்டுகிறது. கோவிட் -19 நோய் பெறும் தடுப்பூசி செலுத்தப்படாத கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்கூட்டிய பிறப்பு அல்லது கருவிலேயே இறப்பு போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கர்ப்பமாக இருக்கும்போது கோவிட் -19 நோய் ஏற்படுபவர்களுக்கு தீவிரமான உயிர்காப்பு அமைப்பு மற்றும் சுவாசக் குழாய் தேவைப்படும் வாய்ப்பு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

கர்ப்ப காலத்தில் கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவது பற்றி யாரிடமாவது பேச விரும்பினால், தயவுசெய்து MotherToBaby ஐ தொடர்பு கொள்ளவும். MotherToBaby நிபுணர்கள் ஆங்கிலம் அல்லது ஸ்பானிஷ் மொழியில் தொலைபேசி அல்லது அரட்டை மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். இலவச மற்றும் இரகசிய சேவைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கிடைக்கிறது. (உள்ளூர் நேரம்). MotherToBaby ஐ தொடர்பு கொள்ள:

வழக்கமான தடுப்பூசிகளைப் பெறும்போது கோவிட் -19 தடுப்பூசியைப் பெறலாமா?

ஆம். Advisory Committee on Immunization Practices (ACIP, தடுப்பூசி நடைமுறைகள் பற்றிய ஆலோசனைக் குழு) மே 12, 2021 அன்று தங்கள் பரிந்துரைகளை மாற்றியுள்ளது. இப்போது மற்ற தடுப்பூசிகளை நீங்கள் பெறும் அதே நேரத்தில் கோவிட் -19 தடுப்பூசியைப் பெறலாம்.

உங்கள் குழந்தைக்கு பள்ளிகளால் வலியுறுத்தப்படும் தேவையான தடுப்பூசிகள் (ஆங்கிலம் மட்டும்) அல்லது பரிந்துரைக்கப்பட்ட பிற தடுப்பூசிககளின் கால அட்டவனையை கோவிட் -19 தடுப்பூசியிலிருந்து தனித்தனியாக நீங்கள் மாற்றத் தேவையில்லை. கோவிட் -19 தடுப்பூசிக்கான கால அட்டவணை உங்கள் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பெறுவதற்கு மற்றொரு வாய்ப்பாகும்.

தடுப்பூசி பதிவு அட்டை என்றால் என்ன?

நீங்கள் முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் பெறும்போது உங்களுக்கு தடுப்பூசி விவரங்கள் கொண்ட ஒரு காகித அட்டை வழங்கப்படும். இந்த அட்டை உங்களுக்கு எந்த வகையான தடுப்பூசி செலுத்தப்பட்டது (Comirnaty/Pfizer-BioNTech, Spikevax/Moderna, அல்லது Johnson & Johnson) மற்றும் நீங்கள் அதைப் பெற்ற தேதி பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு Comirnaty/Pfizer-BioNTech அல்லது Spikevax/Moderna தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தால், நீங்கள் முதல் டோஸைப் பெறவரும்போது உங்கள் வழங்குநர் உங்களுக்கான இரண்டாவது டோஸை முன்பதிவு செய்ய வேண்டும். உங்களுடன் இந்த அட்டையை எப்போதும் வைத்திருங்கள். அதனால், உங்களுக்கு தடுப்பூசி வழங்குபவர் உங்கள் இரண்டாவது டோஸுக்குப் பிறகு அதை நிறைவு செய்ய முடியும்.

நீங்கள் ஒரு கூடுதல் டோஸ் அல்லது ஒரு பூஸ்டர் டோஸைப் பெற்றால், உங்கள் தடுப்பூசி பதிவு அட்டையை உங்கள் அப்பாயிண்ட்மெண்ட்டிற்கு எடுத்துச் செல்லவேண்டும். உங்கள் தடுப்பூசி வழங்குநர் உங்கள் டோஸைப் பதிவு செய்வார்.

உங்கள் தடுப்பூசிக்கான அட்டையை கையாளும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன:

 • குறிப்பிட்ட காலஇடைவெளியில் டோஸ்கள் போடும்போதும் மற்றும் அதற்கு பிறகும் தடுப்பூசி அட்டையை வைத்திருங்கள்.
 • டிஜிட்டல்நகலைகைவசம்வைத்துக்கொள்வதற்குஉங்கள்அட்டையின்முன்மற்றும்பின்புறம்புகைப்படங்களைஎடுத்துக் கொள்ளுங்கள்.
 • நீங்கள் அதை மீண்டும் எளிதாகக் காணும் வகையில், அதை உங்களுக்கே மின்னஞ்சல் அனுப்புவது, ஆல்பத்தை உருவாக்குவது அல்லது புகைப்படத்தில் ஒரு குறிச்சொல்லைச் சேர்ப்பது ஆகியவற்றை யோசிக்கவும்.
 • அதில்ஒன்றைஉங்களுடன்எடுத்துச்செல்லவிரும்பினால்புகைப்படநகலைஎடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் தடுப்பூசி அட்டையை கொண்டு வரவில்லை என்றாலும் நீங்கள் உங்கள் இரண்டாவது டோஸைப் பெறமுடியும். மீண்டும் அதே வகை மருந்தைப் பெறுவதை உறுதி செய்வதற்கு உங்கள் முதல் டோஸுக்கு நீங்கள் பெற்ற தடுப்பூசியின் வகையை (பிராண்ட்) பார்க்குமாறு உங்கள் வழங்குநரிடம் கேளுங்கள். உங்கள் தடுப்பூசி அட்டையைத் தொலைத்துவிட்டால், உங்கள் கோவிட் -19 தடுப்பூசி குறித்தப் பதிவைப் பார்க்க லாகின் செய்து MyIR (My Immunization Registry (எனது நோய்த்தடுப்பு பதிவு)க்குச் செல்லுங்கள். (ஆங்கிலம் மட்டும்), பின்னர் அதன் ஸ்கிரீன் ஷாட் அல்லது புகைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு கணக்கு இல்லையென்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் MyIR இல் பதிவு செய்யலாம்.

MyIR மூலம் உங்கள் பதிவுகளுக்கான சரிபார்ப்பு உடனடியாகக் கிடைக்காது மற்றும் தற்போது ஆங்கில மொழியில் மட்டுமே அணுகல் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். MyIRmobile அல்லது தடுப்பூசி பதிவு பற்றிய கேள்விகளுக்கு நேரடி உதவி தொலைபேசி வாயிலாக Department of Health COVID-19 (மாநில சுகாதார துறை கோவிட் – 19) மூலம் கிடைக்கிறது. 833-VAX-HELP என்ற எண்ணில் அல்லது waiisrecords@doh.wa.gov என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

பாதுகாப்பு மற்றும் செயல்திறன்

ஏன் கோவிட் -19 தடுப்பூசி பெற வேண்டும்?

கோவிட்-19 தடுப்பூசி பெறுவது முற்றிலும் உங்கள் விருப்பம்தான் என்றாலும் இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தவரை எல்லோரும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி மூலமும் அல்லது சமீபத்திய நோய்த்தொற்றின் மூலமும் ஒரு சமூகத்தில் பலர் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும்போது கோவிட் -19 வைரஸ் பரவுவது கடினமாகும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விகிதம் அதிகமாக இருந்தால், நோய்த்தொற்று விகிதமும் குறையும்.

கோவிட் -19 தடுப்பூசிகள் பல வழிகளில் உங்களைப் பாதுகாக்கும்:

 • கோவிட் -19 ஐத் தடுப்பதில் அவை மிகத் திறமையாக வேலை செய்கின்றன
 • நீங்கள் கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்டால், தீவிரமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பைப் பெரிதும் குறைக்கின்றன
 • முழுமையாக தடுப்பூசி பெறுவது நீங்கள் நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது மற்றும் கோவிட் -19 நோயினால் இறக்கும் அபாயத்தை குறைக்கிறது
 • சமூகத்தில் பாதுகாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தடுப்பூசிகள் அதிகரிக்கின்றன. இதனால் நோய் பரவுவது கடினமாகிறது.
 • மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பூசியின் திறனை வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர்.

நீங்கள் முழுமையாக தடுப்பூசித் தொடரைப் போட்டு முடித்தாலும், கோவிட் -19 ஆல் பாதிக்கப்படும் சாத்தியக்கூறு இன்னும் உள்ளது.ஆனால் இது நீங்கள் தடுப்பூசி போடவில்லையெனில் வரும் வாய்ப்பை விட மிச் சிறியது. மருத்துவ பரிசோதனைகளில், ஒவ்வொரு தடுப்பூசியும் கடுமையான கோவிட் -19 நோயைத் தடுப்பதில் குறைந்தது 85 சதவிகித செயல்திறனைக் கொண்டிருந்தன. பலருக்கும் கோவிட் -19 அறிகுறிகள் வராமல் தடுப்பூசிகள் தடுத்தன:

 • Johnson & Johnson (Janssen), 74 சதவீதம்
 • Pfizer-BioNTech, 95 சதவீதம்
 • Moderna, 94 சதவீதம்

தடுப்பூசி போடாதவர்கள் மேலும் வைரசால் பாதிப்படைந்து மற்றவர்களுக்கு பரப்பலாம். சிலர் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசியைப் பெற முடியாது, மேலும் இதனால் அவர்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளார்கள். நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், மாறுபட்ட கோவிட் -19நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அல்லது இறக்கும் அபாயமும் அதிகம்.தடுப்பூசி பெற்றுக் கொள்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும், அண்டை வீட்டாரையும், சமூகத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

பெரும்பாலான மக்கள் நோயிலிருந்து தப்பிப் பிழைக்கும் போது நான் ஏன் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற வேண்டும்?

மரணம் மட்டுமே கோவிட் -19 நோயின் அபாயம் அல்ல. கோவிட் -19 நோயைப் பெறும் பலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. இருப்பினும், இந்த வைரஸ் மிகவும் கணிக்க முடியாதது, மேலும் சில கோவிட் -19மாறுபாடுகள்உங்களை தாக்கி உண்மையில் நோய்வாய்ப்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்பது எங்களுக்குத் தெரியும். நாள்பட்ட நோய்கள் இல்லாத நிலைகள் இளைஞர்கள் கூட சிலர் கடுமையாக நோய்வாய்ப்படலாம் அல்லது கோவிட் -19 நோயினால் இறக்கலாம். "கோவிட் லாங்-ஹாலர்ஸ்" என்று அழைக்கப்படும் மற்றவர்களுக்கு அறிகுறிகள் பல மாதங்களுக்கு நீடிக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் ஏற்படலாம். கோவிட்-19 ஒரு புதிய வைரஸ் என்பதால் அதன் நீண்டகால விளைவுகள் அனைத்தும் நமக்குத் தெரியவில்லை. தடுப்பூசி பெற்றுக் கொள்வது வைரஸுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு ஆகும். நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலும், கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாறுபட்ட கோவிட் -19 என்றால் என்ன?

வைரஸ்கள் ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுவதால் (மாற்றம் பெறுகின்றன) பகுப்படைகின்றன. 'மாறுபாடு' என்பது வைரஸின் பிறழ்ந்த மாற்றம் ஆகும். சில வகை காலப்போக்கில் மறைந்துவிடும் மற்றும் சிலவகை சமூகங்களில் தொடர்ந்து பரவுகின்றன.

Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்)தொடர்புடைய வைரஸ் வகைகளை அடையாளம் காட்டுகிறது. விரைவாகவும் எளிதாகவும் பரவி, அதிக கோவிட் -19 தொற்றுகளை ஏற்படுத்துவதால் தற்போது, பல வகைகள் உள்ளன.

கோவிட் -19 தடுப்பூசி மாறுபட்ட வகை வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகிறதா?

தடுப்பூசி செலுத்திக் கொள்வது வைரஸ் பரவுவதை குறைக்க உதவுகிறது மற்றும் மாறுபட்ட வகை வைரஸ்கள் பரவுவதைக் குறைக்கிறது. மேலும் இது இதுவரை அறியப்பட்ட அனைத்து வைரஸ் வகைகளின் தாக்கத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்புக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குகிறது.

சில தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்கள் இன்னும் மாறுபட்ட வகை வைரசால் பாதிக்கப்படலாம். ஆனால் ஆராய்ச்சி அவர்கள் லேசான அறிகுறிகளை கொண்டிருப்பதாக காட்டுகிறது. இரண்டு டோஸ் தேவைப்படும் தடுப்பூசியை நீங்கள் செலுத்தினால், இரண்டு டோஸ்களையும் பெறுவது முக்கியம், அதனால் மாறுபட்ட வகை வைரஸ்களுக்கு எதிராக உங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும்.

உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் உங்கள் சமூகத்தையும் பாதுகாப்பதற்கு தடுப்பூசி சிறந்த வழியாகும். அதிக தடுப்பூசி வைரஸ் பரவுவதைக் குறைக்கும் மற்றும் புதிய வைரஸ் வகைகள் வெளிவருவதைத் தடுக்க உதவும்.

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று நமக்கு எப்படித் தெரியும்?

கோவிட் -19 தடுப்பூசிகளை உருவாக்க விஞ்ஞானிகள் பத்து ஆண்டு கால அறிவியல் ஆராய்ச்சி முறையைப் பயன்படுத்துகின்றனர். நாம் கொள்ளை நோயின் காலத்தில் இருப்பதால், வழக்கத்தை விட விரைவான தடுப்பு மருந்தினை உருவாக்குகிறோம். எந்த ஒரு படிநிலைகளையும் தவிர்க்க இயலாது, ஆனால் விண்ணப்பங்கள், சோதனைகள், தயாரிப்புகள் போன்ற சில படிநிலைகள் ஒரே நேரத்தில் நடைபெறும்.

ஒவ்வொரு தடுப்பூசி வேட்பாளரும் பல மருத்துவ பரிசோதனைகளை கடந்து செல்கின்றன. முதலில் ஒரு சிறிய குழு தன்னார்வலர்களுடன், பின்னர் சிலநூறு தன்னார்வலர்களுடன், பின்னர் ஆயிரக்கணக்கானவர்களுடன். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, மருத்துவ வல்லுநர்கள் முடிவுகளையும், ஏற்படும் பக்க விளைவுகளையும் மதிப்பாய்வு செய்கிறார்கள். தடுப்பூசி வேலை செய்து அது பாதுகாப்பானதாக இருந்தால், அது பொதுமக்களுக்கு வழங்க ஒப்புதல் பெறுகிறது.

Johnson & Johnson தடுப்பூசியால் என்ன ஏற்படுகிறது?

2021 டிசம்பரில், Washington State Department of Health (DOH, வாஷிங்டன் மாநில சுகாதாரத் துறை) ஒரு டோஸ் Johnson & Johnson (J&J) கோவிட்-19 தடுப்பூசியை விட mRNA கோவிட்-19 தடுப்பூசியை (Pfizer-BioNTech அல்லது Moderna) எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.

இந்த வழிமுறை Centers for Disease Control and Prevention ( ,CDCநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்) வழிகாட்டுதல் படி J&J தடுப்பூசியை செலுத்திய பின்பு ஏற்பட்ட இரண்டு அசாதாரண நிலைகள் பற்றிய புதிய தரவு கிடைக்கப்பெற்றப் பிறகு பின்பற்றுகிறது.

 • Thrombosis and thrombocytopenia syndrome (TTS): J&J தடுப்பூசி செலுத்தப்பட்ட சிலருக்கு Thrombosis with thrombocytopenia syndrome (TTS, த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் உடனான ரத்த உறைவு) என்ற அரிதான, ஆனால் தீவிரமான, இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையை உள்ளடக்கிய நிலை உண்டானது. இருப்பினும் இத்தகைய ஆபத்து அரிதானது. யுனைடெட் ஸ்டேட்ஸில் அளிக்கப்பட்ட சுமார் 14 மில்லியன் டோஸ்களில் 54 TTS நிலை கண்டறியப்பட்டுள்ளன.
 • Guillain-Barré Syndrome(GBS): Guillain-Barre Syndrome (GBS, குய்லின்-பார் சிண்ட்ரோம்) என்பது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். இது உடலின் நோய் எதிர்ப்பு நரம்பு செல்களை சேதப்படுத்துகிறது. இது தசைகளில் பலவீனம் மற்றும் சில நேரங்களில் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது GBS அபாயமும் மிகவும் அரிதானது. ஜூலை 2021 நிலவரப்படி, J&J, தடுப்பூசி செலுத்தப்பட்ட சுமார் 12.5 மில்லியன் டோஸ்களில் 100 பேரிடம் GBS இன் ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இத்தகைய விளைவுகள் J&J கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களிடம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. மேலும் Pfizer அல்லது Moderna தடுப்பூசிகளால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படவில்லை. எனவே கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவர்களுக்கு Moderna மற்றும் Pfizer  தடுப்பூசிகளை DOH பரிந்துரைக்கிறது.  ஒருவேளை உங்களுக்கு mRNA தடுப்பூசியைப் பெற முடியாமலோ அல்லது இந்த வகையான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விருப்பமில்லாமலோ இருந்தால் J&J தடுப்பூசி இன்னும் கிடைக்கிறது. உங்களுக்கான விருப்பங்களைப் பற்றி ஒரு சுகாதார வழங்குநரிடம் பேசவும்.

நீங்கள் கடந்த மூன்று வாரங்களுக்குள் J&J கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றிருந்தாலோ அல்லது  J&J கோவிட்-19 தடுப்பூசியைப் பெறத் திட்டமிட்டிருந்தாலோ, TTS ஆல் ஏற்படும் ஒரு வகையான இரத்த உறைவுக்கான அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்.  இவற்றில் கடுமையான தலைவலி, வயிற்று வலி, கால் வலி மற்றும்/அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளும் அடங்கும்.  இவற்றில் ஏதேனும் ஒன்றின் அறிகுறியை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.

எந்தவொரு கோவிட்-19 தடுப்பூசியும் செலுத்தப்பட்ட முதல் வாரத்தில் காய்ச்சல், தலைவலி, சோர்வு, மூட்டு/தசை வலி உள்ளிட்ட லேசானது முதல் மிதமான அறிகுறிகள் ஏற்படுவது, இயல்பானது தான். இந்த பக்க விளைவுகள் பொதுவாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு மூன்று நாட்களுக்குள் தொடங்கி சில நாட்கள் மட்டுமே நீடிக்கும்.

தடுப்பூசிக்கு FDA ஒப்புதல் உள்ளது என்றால் என்ன அர்த்தம்?

முழுமையான ஒப்புதலுக்கு, அவசர பயன்பாட்டிற்கு வழங்கப்படும் அங்கீகாரத்தை விட நீண்ட காலத்திற்கு தரவை FDA மதிப்பாய்வு செய்கிறது. தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் வழங்கப்பட வேண்டுமெனில், தடுப்பூசி உற்பத்தியில் அதிக அளவு பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரக் கட்டுப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

முழு உரிமம் பெறுவதற்கு முன்பு ஒரு அறிவிக்கப்பட்ட அவசரகால நிலையில் ஒரு தயாரிப்பு கிடைக்க FDA அவசர பயன்பாட்டிற்கான அங்கீகாரம் (EUA) வழங்குகிறது. தரவை நீண்டகாலம் பகுப்பாய்வு செய்யும் முன்னர் மக்கள் உயிர் காக்கும் தடுப்பூசிகளைப் பெற முடியும் என்பதை உறுதி செய்வதே EUA நோக்கம் ஆகும். இருந்தாலும், ஒரு குறுகிய காலத்திற்குள் EUA இன்னும் மருத்துவத் தரவை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. FDA வழங்கும் எந்தவொரு EUA யும் Western States Pact (மேற்கு மாநில ஒப்பந்தம்) இன் ஒரு பகுதியாக (ஆங்கிலம் மட்டும்) Scientific Safety Review Workgroup (அறிவியல் பாதுகாப்பு மறுஆய்வு பணிக்குழு), மூலம் சரிபார்க்கப்படுகிறது.

Western States Pact என்றால் என்ன?

FDA அங்கீகரித்த பின்பு கோவிட் -19 தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மீளாய்வு செய்வதற்கு வாஷிங்டன் மாநிலம் ஒரேகான், நெவாடா, கொலராடோ மற்றும் கலிபோர்னியாவுடன் இணைந்து மேற்கத்திய மாநில அறிவியல் பாதுகாப்பு மறு ஆய்வு பணிக்குழுவை (மேற்கு மாநில ஒப்பந்தம்) அக்டோபர், 2020 இல் உருவாக்கியது. இந்த பணிக்குழு தடுப்பூசி பாதுகாப்புக் குறித்து நிபுணர் மதிப்பாய்வின் மற்றொரு அறிக்கையை வழங்குகிறது.

குழுவில் அனைத்து உறுப்பு நாடுகளாலும் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் மற்றும் தடுப்பூசி மற்றும் பொது சுகாதாரத் துறையில் நிபுணத்துவம் பெற்ற தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானிகள் இருப்பர். FDA தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கென அங்கீகரிக்கும்போது, இணைந்த மதிப்பாய்வுகளுடன் பொதுவில் கிடைக்கும் அனைத்து தரவுகளையும் குழு மதிப்பாய்வு செய்து ஒரு அறிக்கையை அளிக்கிறது. வாஷிங்டன் மாநிலத்தில் தற்போது எங்களிடம் கிடைக்கும் மூன்று தடுப்பூசிகளுக்கு இந்த செயல்முறை நடந்தது. மேலும் எதிர்காலத்தில் Emergency Use Authorization (EUA) க்கு வழங்கப்படும் அனைத்து கோவிட் -19 தடுப்பூசிகளுக்கும் இது நடக்கும். Western States Scientific Safety Review Workgroup கண்டுபிடிப்புகளைப் படிக்கவும்:

எனது உடலில் கோவிட் -19 தடுப்பு மருந்து எவ்விதம் வேலை செய்யும்?

இந்த வீடியோவைப் பாருங்கள் உங்கள் உடலில் தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் காட்டும் (ஆங்கிலம்).

mRNA தடுப்பூசிகள் (Pfizer மற்றும் Moderna கோவிட் -19 தடுப்பூசிகள்)

இந்த இரண்டு தடுப்பூசிகள் மெசஞ்சர் RNA (mRNA) தடுப்பூசிகள் என்று அழைக்கப்படுகின்றன.

உங்களுடைய உயிரணுக்களுக்கு பாதிப்பில்லாத கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தை உருவாக்க mRNA தடுப்பூசிகள் கற்றுக்கொடுக்கின்றன. இந்த புரதமானது உடலுக்குச் சொந்தமானதல்ல என்பதை உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு காண்கிறது, மேலும் உங்கள் உடல் ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்குகிறது இந்த ஆன்டிபாடிகள் எதிர்காலத்தில் உங்களுக்கு கோவிட் -19 ஏற்பட்டால் எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும். நீங்கள் தடுப்பூசி பெறும் போது, வேறு நோய் ஏதும் ஏற்படாமல் கோவிட் -19 நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி உங்களுக்கு உருவாகிறது. அது அதன் வேலையைச் செய்தவுடன், mRNA விரைவாக கரைந்து சில நாட்களில் உடல் அதை அழிக்கிறது.

வைரஸ் இலக்கு தடுப்பூசிகள் (Johnson & Johnson கோவிட் -19 தடுப்பூசி)

கோவிட் -19 தடுப்பூசிகளில் ஒன்று வைரஸ் இலக்கு தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது.

வைரஸ் வெக்டார் தடுப்பூசிகள் ஒரு பலவீனமான வைரஸை கொண்டு தயாரிக்கப்படுகின்றன (கோவிட் -19 ஏற்படுத்தும் வைரஸிலிருந்து வேறுபட்ட வைரஸ்). இந்த தடுப்பூசிகள் பாதிப்பில்லாத கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியை உங்கள் உயிரணுக்களுக்கு உருவாக்க கற்றுக்கொடுக்கின்றன. இந்த புரதமானது உடலுக்குச் சொந்தமானதல்ல என்பதை உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு காண்கிறது, மேலும் உங்கள் உடல் ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்குகிறது. உங்களுக்கு நோய் ஏதும் ஏற்படாமல், கோவிட் -19 தொடர்பான எதிர்கால நோய்த்தொற்றிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை உங்கள் உடல் கற்றுக்கொள்கிறது

நம்மிடம் உள்ள வைரஸ் வெக்டார் தடுப்பூசி ஒரு மருந்தளவு கொண்டது ஆகும். அதிகபட்ச பாதுகாப்பைப் பெறுவதற்கு நீங்கள் இரண்டாவது மருந்தளவை எடுத்துக்கொண்ட பிறகு பொதுவாக இரண்டு வாரங்கள் ஆகும்.

லேசான காய்ச்சல் அல்லது குளிர் போன்ற அறிகுறிகளை தடுப்பூசி சில நேரங்களில் ஏற்படுத்தும், ஆனால் இவை தீங்கு விளைவிப்பதில்லை.

மேலும் தகவலுக்கு, இந்த ஆதாரங்களைப் பார்க்கவும்: கோவிட் -19 தடுப்பூசிகளின் ஸ்னாப்ஷாட் மற்றும்கோவிட் -19 தடுப்பூசிகள்: தெரிந்து கொள்ள வேண்டியவை.

கொரோனா வைரஸ்-உடன் சண்டையிடும் மக்கள் போதுமான அளவுக்கு இருக்கும் போது, அவை பரவ இயலாது. அதாவது, இதன்மூலம் நாம் நோய்ப் பரவலை வெகு விரைவாக நிறுத்த முடியும், மற்றும் கொள்ளை நோயின் முடிவினை நெருங்கலாம்.

கோவிட் -19 தடுப்பூசிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?

இந்த சிறு காணொளி விளக்குகிறது கோவிட் தடுப்பூசிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை (ஆங்கிலம்).

mRNA தடுப்பூசி என்றால் என்ன?

மெசஞ்சர் RNA அல்லது mRNA தடுப்பூசி ஒரு புதிய வகை தடுப்பூசியாகும். mRNA தடுப்பூசிகள் உங்கள் உயிரணுக்களுக்கு "ஸ்பைக் புரதத்தின்" ஒரு பாதிப்பில்லாத பகுதியை எவ்வாறு உருவாக்குவது என்று கற்றுக் கொடுக்கின்றன. ஸ்பைக் புரதத்தை நீங்கள் கொரோனா வைரஸின் மேற்பரப்பில் காணலாம். புரதம் அதைச் சார்ந்தது இல்லை என்பதை உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு பார்க்கிறது. மேலும் உங்கள் உடல் ஒரு நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி ஆன்டிபாடிகளை உருவாக்கும். இது "இயற்கையாக" நாம் கோவிட் -19 நோய்த்தொற்றைப் பெறும்போது நடப்பதைப் போன்றது. அது அதன் வேலையைச் செய்தவுடன், mRNA விரைவாக கரைந்து சில நாட்களில் உடல் அதை அழிக்கிறது.

கடந்த காலங்களில் நாம் மற்ற வகை மருத்துவ மற்றும் கால்நடை பராமரிப்புக்காக mRNA பயன்படுத்தினாலும், இந்த முறையைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை உருவாக்குவது அறிவியலில் ஒரு பெரிய முன்னேற்றமாகும், மேலும் எதிர்காலத்திற்கான தடுப்பூசிகளை மிக எளிதாக உருவாக்க முடியும்.

CDC இன் இணையதளத்தில் mRNA தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றனபற்றி நீங்கள் மேலும் படிக்கலாம்.

தடுப்பூசிகளில் என்ன மூலப்பொருட்கள் உள்ளன?

இந்த வகை தடுப்பூசி உங்கள் உயிரணுக்களுக்கு வழிமுறைகளை வழங்கும் வேறு வைரஸின் ("இலக்கு நோக்கிய") பலவீனமான வைரைசைப் பயன்படுத்துகிறது. இலக்கு நோக்கு வைரஸ் ரத்த நாளத்திற்குள் நுழைந்து, நாளத்தின் இயங்கும் அமைப்பைப் பயன்படுத்தி, கோவிட் -19 ஸ்பைக் புரதத்தின் பாதிப்பில்லாத பகுதியை உருவாக்குகிறது. செல் அதன் மேற்பரப்பில் ஸ்பைக் புரதத்தைக் கொண்டுள்ளது. மேலும் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு அது உடலைச் சார்ந்ததா என்று பார்க்கிறது. நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்குகிறது மற்றும் தொற்று என்று நினைப்பதை எதிர்த்துப் போராட மற்ற நோயெதிர்ப்பு உயிரணுக்களை செயல்படுத்துகிறது. உங்களுக்கு நோய் ஏதும் ஏற்படாமல், கோவிட் -19 தொடர்பான எதிர்கால நோய்த்தொற்றிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை உங்கள் உடல் கற்றுக்கொள்கிறது.

தடுப்பூசிகளில் என்ன மூலப்பொருட்கள் உள்ளன?

கோவிட் -19 தடுப்பூசிகளில் உள்ள பொருட்கள் தடுப்பூசிகளுக்கான மிகவும் பொதுவானவற்றைக் கொண்டவை. அவை உடலில் சிறப்பாகச் செயல்பட உதவும் mRNA அல்லது மாற்றியமைக்கப்பட்ட அடினோவைரஸ் மற்றும் கொழுப்பு, உப்புகள் மற்றும் சர்க்கரைகள் போன்ற செயல்பாட்டில் உள்ள மூலப்பொருட்களைக் கொண்டுள்ளன. அவை சேமிப்பு மற்றும் எடுத்துச் செல்லும் போது தடுப்பூசியைப் பாதுகாக்கின்றன.

Pfizer, Moderna, and Johnson and Johnson தடுப்பூசிகளில் மனித உயிரணுக்கள் (கரு உயிரணுக்கள் உட்பட), கோவிட் -19 வைரஸ், லேடெக்ஸ், பதப்படுத்திகள், அல்லது பன்றி இறைச்சி பொருட்கள் அல்லது ஜெலட்டின் உள்ளிட்ட எந்த விலங்கு உப பொருட்களும் இல்லை. தடுப்பூசிகள் முட்டைகளில் உருவாக்கப்படுவதில்லை மற்றும் எந்த முட்டை சார்ந்த பொருட்களும் இல்லை.

இவற்றைப் பார்க்கவும் கேள்வி பதில்; பிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனையின் வலைப்பக்கம் (ஆங்கிலம்) மூலப்பொருட்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு. மூலப்பொருட்களின் முழு பட்டியலையும் இவற்றில் நீங்கள் காணலாம் Pfizer (ஆங்கிலம்), Moderna (ஆங்கிலம்), Johnson & Johnson (ஆங்கிலம்) உண்மைத் தாள்கள்.

Johnson & Johnson தடுப்பூசியில் கருவின் திசு உள்ளதா?

Johnson & Johnson கோவிட் -19 தடுப்பூசி பல தடுப்பூசிகளின் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இதில் கருக்கள் அல்லது கரு உயிரணுக்களின் பாகங்கள் இல்லை. தடுப்பூசியின் ஒரு பகுதி 35 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்புகளிலிருந்து பெற்ற ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உயிரணுக்களின் நகல்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அப்போதிருந்து, இந்த தடுப்பூசிகளுக்கான செல் குறியீடுகள் ஆய்வகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு கரு உயிரணுக்களின் ஆதாரங்கள் பயன்படுத்தப்படவில்லை. இது சிலருக்கு புதிய தகவலாக இருக்கலாம். இருப்பினும், சிக்கன் பாக்ஸ், ரூபெல்லா மற்றும் ஹெபடைடிஸ் ஏ ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளும் அதே வழியில் தயாரிக்கப்படுகின்றன.

கோவிட் -19 தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?

தடுப்பூசிகள் கருவுறாமை அல்லது ஆண்மையின்மையை ஏற்படுத்துகின்றன என்பது குறித்த அறிவியல் ஆதாரம் ஏதும் இல்லை. தடுப்பூசி உங்கள் உடலில் நுழையும் போது, அது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புடன் இணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராதடுவதற்கு ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இந்த செயல்முறை உங்கள் இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தாது.

The Centers for Disease Control and Prevention (CDC) (ஆங்கிலம்),American College of Obstetricians and Gynecologists (ACOG)(ஆங்கிலம்), மற்றும் Society for Maternal-Fetal Medicine (SMFM) (ஆங்கிலம்) கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்க திட்டமிடும் நபர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசியை பரிந்துரைக்கிறது. கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட பலர் கர்ப்பம் தரித்துள்ளனர் அல்லது ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

கோவிட் -19 தடுப்பூசிகள் உட்பட எந்தவொரு தடுப்பூசிகளும் ஆண்களுக்கு கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை. MRNA கோவிட் -19 தடுப்பூசி (Pfizer-BioNTech or Moderna) செலுத்தப்பட்ட 45 ஆரோக்கியமான ஆண்களின் மீதான சமீபத்திய ஆய்வு(ஆங்கிலம்)விந்தணுக்களின் அளவு மற்றும் இயக்கம் போன்ற பண்புகளைப் தடுப்பூசிக்கு முன்னும் பின்னும் ஆய்வு செய்தது. தடுப்பூசிக்குப் பின்பு விந்து குணாதிசயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.

நோய்வாய்ப்பட்டதன் காரணமாக ஏற்படும் காய்ச்சல் ஆரோக்கியமான ஆண்களிடையே விந்தணு உற்பத்தியில் குறுகிய கால குறைவை ஏற்படுத்துகிறது கோவிட் -19 தடுப்பூசியின் பக்க விளைவு காய்ச்சல் தற்காலிகமானது என்றாலும், கோவிட்-தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல் விந்தணு உற்பத்தியை பாதிக்கும் என்பதற்கு தற்போதைய ஆதாரம் இல்லை.

CDC யின் குழந்தை பெற விரும்பும் நபர்களுக்கான கோவிட் -19 தடுப்பூசிகளைப் பற்றிய தகவலை காண்க(ஆங்கிலம்)மேலும் தகவலுக்கு. CDC கோவிட் -19 தடுப்பூசிகளின் வலைப்பக்கத்தையும் நீங்கள் பார்க்கலாம் (ஆங்கிலம்)தடுப்பூசிகள் பற்றிய உண்மைகளுக்கு.

தடுப்பூசி பெற்ற பிறகு ஏற்படும் இயல்பான அறிகுறிகள் என்ன?

Pfizer/Comirnaty, Moderna/Spikevax, and Johnson & Johnson – Janssen கோவிட் -19 தடுப்பூசிகள்

மற்ற வழக்கமான தடுப்பூசிகளைப் போலவே, மிகவும் பொதுவான பக்க விளைவுகளான புண், சோர்வு, தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை.

இந்த அறிகுறிகள் தடுப்பூசி வேலை செய்கிறது என்பதற்கான அறிகுறியாகும். Pfizer மற்றும் Moderna பரிசோதனைகளில், இந்த பக்க விளைவுகள் பெரும்பாலும் தடுப்பூசி செலுத்திய இரண்டு நாட்களுக்குள் நிகழ்ந்து, ஒரு நாள் வரை நீடித்தது. முதல் டோஸை விட இரண்டாவது டோஸுக்குப் பிறகு ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் பொதுவானவை. Johnson & Johnson மருத்துவ பரிசோதனைகளில், பக்க விளைவுகள் சராசரியாக ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை நீடித்தது.

மூன்று தடுப்பூசிகளுக்கும், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் இளையவர்களை விட பக்க விளைவுகளை குறைவாகவே பெற்றதாக தெரிவிக்கின்றனர்.

மருத்துவ பரிசோதனைகள் கண்டறிந்தவை:

Pfizer/Comirnaty

 • எண்பது சதவிகித மக்கள் ஊசி செலுத்திய இடத்தில் வலி இருப்பதாக தெரிவித்தனர்
 • ஐம்பது சதவிகித மக்கள் சோர்வு மற்றும் தலைவலி இருப்பதாக தெரிவித்தனர்
 • முப்பது சதவிகித மக்கள் தசை வலி இருப்பதாகப் புகாரளித்தனர்

Moderna/Spikevax

 • தொண்ணூறு சதவிகித மக்கள் ஊசி செலுத்திய இடத்தில் வலி இருப்பதாக தெரிவித்தனர்
 • எழுபது சதவீத மக்கள் சோர்வு மற்றும் தலைவலி இருப்பதாக தெரிவித்தனர்
 • அறுபது சதவிகித மக்கள் தசை வலி இருப்பதாகப் புகாரளித்தனர்

Johnson & Johnson

 • அறுபது சதவிகித மக்கள் ஊசி செலுத்திய இடத்தில் வலி இருப்பதாக தெரிவித்தனர்
 • நாற்பத்தைந்து சதவீத மக்கள் சோர்வு மற்றும் தலைவலி இருப்பதாக தெரிவித்தனர்
 • நாற்பது சதவிகித மக்கள் தசை வலி இருப்பதாகப் புகாரளித்தனர்

ஆன்லைனில் அல்லது சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான பக்க விளைவுகள் பற்றிய சில வதந்திகளை நீங்கள் காணலாம். எந்த நேரத்திலும் ஒரு பக்க விளைவு பற்றிய கருத்தை நீங்கள் பார்க்கும் போது அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்கவும்.

கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற பிறகு எனக்கு நோய் ஏற்பட்டால் என்ன ஆகும்?

மற்ற வழக்கமான தடுப்பூசிகளைப் போலவே, கோவிட் -19 தடுப்பூசியும் பொதுவாக பக்கவிளைவுகளான கை வலி, காய்ச்சல், தலைவலி அல்லது தடுப்பூசி போட்ட பிறகு சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். இவை தடுப்பூசி வேலை செய்வதற்கான அறிகுறிகள் ஆகும்.

தடுப்பூசி செலுத்திய பிறகு உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால், வேலை செய்வது பாதுகாப்பானதா அல்லது உங்கள் பணிகளை பாதுகாப்பாகச் செய்யலாமா என்று நீங்கள் யோசிக்கலாம். பணியாளர் தனது வேலைக்கு திரும்புவது பாதுகாப்பானதா என்று முதலாளிகள் ஆச்சரியப்படலாம். நீங்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவதற்கு தடுப்பூசித் தொடரை (2 டோஸ் Pfizer அல்லது Moderna அல்லது 1 டோஸ் Johnson & Johnson) முடித்த பிறகு சுமார் 2 வாரங்கள் ஆகும். ஒவ்வொரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு சற்று வித்தியாசமானது என்பதையும், தடுப்பூசி செலுத்தப்பட்ட 2,500 பேரில் ஒருவருக்கு தடுப்பூசி வேலை செய்யாது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

இந்த விளக்கப்படம் (PDF) உங்களுக்கு தடுப்பூசிவேலை செய்கிறதா அல்லது கோவிட் -19 தொற்று சோதிக்கப்பட அல்லது தனிமைப்படுத்த வேண்டுமா என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. மிதமான பிரிவில் உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால், நீங்கள் மருத்துவ உதவியை நாடலாம் அல்லது காத்திருந்து பார்க்கலாம். உங்கள் அறிகுறிகள் ஓரிரு நாட்களில் போய்விட்டால், அது தடுப்பூசிக்கான எதிர்வினையாக இருக்கலாம். அவை தொடர்ந்தால் அல்லது தொடர்வதாக நீங்கள் நினைத்தால், மருத்துவ ஆலோசனை பெறவும். உங்களுக்கு கோவிட் -19 அல்லது ஏற்படும் வாய்ப்பு இருந்தால், தயவுசெய்து முன்னெச்சரிக்கையாக மற்றவர்களிடமிருந்து விலகி இருங்கள். கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற பிறகு உங்களுக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், உடனடியாக 9-1-1 ஐ அழைக்கவும்.

தடுப்பூசி செலுத்திய பிறகு உங்களுக்கு நோய்வாய் ஏற்பட்டால், பாதகமான நிகழ்வை [Vaccine Adverse Event Reporting System (VAERS, தடுப்பூசி பாதகமான நிகழ்வு அறிக்கை அமைப்பு)(ஆங்கிலம்)க்குத் தெரிவிக்க வேண்டும் "பாதகமான நிகழ்வு" என்பது தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் எந்தவொரு உடல்நலப் பிரச்சனை அல்லது பக்க விளைவு ஆகும். VAERS பற்றிய கூடுதல் தகவலுக்கு, "VAERS கீழே காண்க

VAERS என்றால் என்ன?

VAERS என்பது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆகியவற்றின் தலைமையிலான ஆரம்பத்திலேயே எச்சரிக்கை அளிக்கும் அமைப்பு ஆகும். VAERS தடுப்பூசி தொடர்பான பிரச்சனைகளை கண்டறிய உதவுகிறது.

எவரும் (உடல்நல வசதிகளை வழங்குபவர், நோயாளி, பராமரிப்பாளர்) ஏற்படும் பாதகமான எதிர்விளைவுகளைப் பற்றி VAERS க்கு புகாரளிக்கலாம் (ஆங்கிலம்).

அமைப்புக்கு வரம்புகள் உள்ளன. VAERS அறிக்கை தடுப்பூசி எதிர்வினை அல்லது விளைவை ஏற்படுத்தியது என்பதைக் குறிக்காது. தடுப்பூசி முதலில் செய்யப்பட்டது என்பதை மட்டுமே இது குறிக்கும்.

போக்கு அல்லது சாத்தியமான பிரச்சனையை ஆராய வேண்டிய காரணங்களின் மீது கவனம் விஞ்ஞானிகள் செலுத்த உதவும் வகையில் VAERS அமைக்கப்பட்டுள்ளது. இது தடுப்பூசியினால் ஏற்பட்ட விளைவுகளை சரிபார்த்த பட்டியல் இல்லை.

VAERS க்கு நீங்கள் அறிக்கையை செய்யும் போது, CDC மற்றும் FDA ஆகியவை சாத்தியமான உடல்நலப் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தடுப்பூசிகள் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிப்படுத்த உதவுகின்றன. ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அவர்கள் நடவடிக்கை எடுத்து, சாத்தியமான பிரச்சினைகள் குறித்து சுகாதார சேவை வழங்குபவர்களுக்கு அறிவிப்பார்கள்.

எனக்கு கோவிட் -19 இருந்தால், எனக்கு கோவிட் -19தடுப்பூசி கிடைக்குமா?

ஆம், Advisory Committee on Immunization Practices (ACIP, நோய்த்தடுப்பு நடைமுறைகளுக்கான ஆலோசனைக் குழு) கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட எவருக்கும் தடுப்பூசி பெற பரிந்துரைக்கிறது.

நீங்கள் பாதிக்கப்பட்ட 90 நாட்களில் கோவிட் -19 ஆல் மீண்டும் பாதிக்கப்படுவது அசாதாரணமானது என்று தரவு காட்டுகிறது, எனவே உங்களுக்கு சில பாதுகாப்பு இருக்கலாம் (இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கப்படுகிறது). இருப்பினும், இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது.

தற்போது கோவிட் -19 நோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு, தங்களின் உடல்நிலை சரியாகி, தனிமைப்படுத்தப்படும் காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

சமீபத்தில் கோவிட் -19 தொற்றுக்கு ஆளானவர்களும், தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின்பு அதுவரை தடுப்பூசி பெற காத்திருக்க வேண்டும். அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் அதிக அபாயம் இருந்தால், நோய் பரவாமல் தடுக்க அவர்களின் தனிமைப்படுத்தப்பட்டக் காலத்தில் அவர்களுக்கு தடுப்பூசி போடலாம்.

விலகியிருத்தல் மற்றும் தனிமைப்படுத்தல்-குறிப்பிட்ட வழிகாட்டுதல் குறித்த ஆவணங்களுக்கு, தயவுசெய்து எங்கள் கோவிட் -19 ஆதாரங்கள் மற்றும் பரிந்துரைகள் வலைப்பக்கத்தின் (ஆங்கிலம் மட்டும்) தனிமைப்படுத்தல் குறித்த பக்கத்தை பார்வையிடவும்.

கடந்த காலங்களில் எனக்கு தடுப்பூசிக்கு ஒவ்வாமை எதிர்விளைவு ஏற்பட்டு இருந்தால் நான் கோவிட் -19 தடுப்பூசி பெறலாமா?

அனாபிலாக்ஸிஸ் போன்ற கடுமையான ஒவ்வாமை உள்ளவர்களுக்கு mRNA அல்லது வைரஸ் நோக்கிய தடுப்பூசியின் முந்தைய டோஸ் அல்லது Pfizer-BioNTech/Comirnaty (ஆங்கிலம்), Moderna/Spikevax (ஆங்கிலம்), Johnson & Johnson–Janssen(ஆங்கிலம்)கோவிட் -19 தடுப்பூசிகளின் கலவைகளினால், மற்ற தடுப்பூசிகள் அல்லது ஊசி மருந்துகளுக்கு கடுமையான ஒவ்வாமை எதிர்வினை உள்ளவர்களுக்கு தடுப்பூசியைப் வழங்கக் கூடாது.

மற்ற தடுப்பூசிகள் அல்லது ஊசி மருந்துகளுக்கு எதிராக கடுமையான ஒவ்வாமை உள்ளவர்களும் தடுப்பூசியைப் பெறலாம். இருப்பினும், தடுப்பூசி வழங்குநர்கள் அபாயத்தை மதிப்பீடு செய்து, ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றி அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். நோயாளி தடுப்பூசி பெற முடிவு செய்தால், தடுப்பூசி வழங்குநர் உடனடியாக ஏற்படும் விளைவுகளைக் கண்காணிக்க 30 நிமிடங்கள் பொறுமை காக்க வேண்டும்.

ஒவ்வாமையினால் ஏற்படும் எதிர்வினைகளைக் கண்காணிக்க தடுப்பூசி செலுத்திய பின்பும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு மற்ற அனைத்து நோயாளிகளையும் தடுப்பூசி வழங்குநர்கள் கவனிக்க வேண்டும் என்று Advisory Committee on Immunization Practices (ACIP) பரிந்துரை செய்கிறது. மேலும் தகவலுக்கு ACIP வழங்கியுள்ள mRNA தடுப்பூசிகளுக்கான இடைக்கால மருத்துவ பரிசீலனைகள் (ஆங்கிலம்) குறித்துப் பார்க்கவும்.

தடுப்பூசிக்கானத் தேவைகள்

கோவிட் -19 தடுப்பூசி தேவையா?

கோவிட் -19 க்கு தடுப்பூசியைப் பெறுவது உங்கள் விருப்பம். ஆனால் சில பணி வழங்குநர்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இது தேவைப்படுகிறது.

வாஷிங்டனில் பின்வரும் மக்களுக்குத் தற்போது கோவிட் -19 தடுப்பூசி தேவைப்படுகிறது:

இந்த ஊழியர்கள் கோவிட் -19 நோய்க்கான(தடுப்பூசித் தொடரை முடித்து குறைந்தது இரண்டு வாரங்கள் நிறைவு செய்ய வேண்டும்) முழுமையான தடுப்பூசியை அக்டோபர் 18, 2021 க்குள் போட வேண்டும். இந்த அமைப்புகளில் வேலை செய்யும் ஒப்பந்ததாரர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மற்ற பதவிகளில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்

நீங்கள் இந்தக் குழுவில் ஒருவராக இருந்தால் அல்லது உங்கள் பணி வழங்குநர் அல்லது பள்ளி கோவிட் -19 தடுப்பூசியை செலுத்தக் கூறினால், என்ன செய்வது என்று அறிய உங்கள் மனித வளத் துறை, பணி வழங்குநர் அல்லது பள்ளியுடன் பேசுங்கள். பணி வழங்குநர் அல்லது கல்லூரியின்/பல்கலைக்கழகத்தின் கொள்கையில் சுகாதாரத் துறை தலையிடுவதில்லை.

தடுப்பூசி உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் கோவிட் -19 பாதிக்காமல் பாதுகாக்க உதவும். மேலும் உங்கள் மருத்துவர் அல்லது கிளினிக்குடன் நன்மைகளைப் பற்றி பேச நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்

என் குழந்தைK-12 பள்ளி அல்லது குழந்தை பராமரிப்புக்கு வசதிகளுக்கு செல்வதற்கு கோவிட் -19 தடுப்பூசி பெற வேண்டுமா?

இல்லை, வாஷிங்டன் மாநிலத்தில் தற்போது குழந்தைகள் K-12 பள்ளி அல்லது குழந்தை பராமரிப்பில் சேர கோவிட் -19 தடுப்பூசி தேவையில்லை. தற்போதைய தேவைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் தடுப்பூசி குறித்த பக்கத்தைப் (ஆங்கிலம்) பார்க்கவும்.

தடுப்பூசி தேவையில்லை என்பதால் உங்கள் குழந்தைக்கு கோவிட் -19 விலக்கு சான்றிதழ் பெறத் தேவையில்லை. பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புக்கு எந்த தடுப்பூசிகள் தேவை என்பதை Washington State Board of Health (வாஷிங்டன் மாநில சுகாதார வாரியம்) தீர்மானிக்கிறது.

K-12 ஊழியர்களுக்காண கோவிட் -19 தடுப்பூசித் தேவைகள் என்ன?

ஆகஸ்ட் 18, 2021 அன்று, கவர்னர் Inslee அனைத்து அரசு மற்றும் தனியார் கே -12 பள்ளி ஊழியர்களுக்கும் கோவிட் -19 நோய்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற வேண்டும் அல்லது மத ரீதியாக அல்லது மருத்துவரீதியாக விலக்கு பெற வேண்டும் என்று ஒரு உத்தரவை அறிவித்தார்.

அனைத்து கல்வி அமைப்புகளில் உள்ள ஊழியர்களுக்கும்(ஆங்கிலம்)பின்வருபவர்கள் உட்பட இந்த உத்தரவு பொருந்தும்:

 • தனியார் K-12 பள்ளிகள், பொது K-12 கல்வி மாவட்டங்கள், பட்டயப் பள்ளிகள் மற்றும் கல்வி சேவை மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் (இந்த உத்தரவு மாநில-பழங்குடி கல்வி சிறிய பள்ளிகளுக்கோ அல்லது மாணவர்களுக்கோ பொருந்தாது).
 • பல வீடுகளில் இருந்து குழந்தைகளுக்கு சேவை செய்யும் குழந்தை பராமரிப்பு மற்றும் தொடக்கக் கல்வி வழங்குநர்கள், மற்றும்
 • உயர் கல்வியில் பணியாற்றும் பணியாளர்கள்.

மேலும் தகவலுக்கு, கே -12 பள்ளி ஊழியர்களுக்கான கோவிட் -19 தடுப்பூசியின் தேவையைப் பார்க்கவும்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (PDF) (ஆங்கிலம்) (பொது அறிவுறுத்தல் கண்காணிப்பாளர் அலுவலகம்).

தடுப்பூசிக்கானத் தேவைகளிலிருந்து நான் எவ்வாறு விலக்கு பெறலாம்?

உங்கள் பணி வழங்குநர் அல்லது கல்லூரி/பல்கலைக்கழகம் கோவிட் -19 தடுப்பூசியை கட்டாயத் தேவையாக்கினால், அல்லது அரசு உத்தரவின் பேரில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியிருந்தால். Jay Inslee இன் ஆகஸ்ட் 9 அன்றைய அறிவிப்பு (ஆங்கிலம்) அல்லது ஆகஸ்ட் 18 அன்றைய அறிவிப்பு (ஆங்கிலம்), தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை எவ்வாறு சேகரிக்கிறார்கள், விலக்கு அளிப்பதற்கான கொள்கை இருந்தால், அதைத் தேர்வு செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய நீங்கள் உங்கள் பணி வழங்குநர் அல்லது கல்லூரி/பல்கலைக்கழகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். பணி வழங்குநர் அல்லது கல்லூரியின்/பல்கலைக்கழகத்தின் கொள்கையில் சுகாதாரத் துறை தலையிடுவதில்லை.

கோவிட் -19 தடுப்பூசியில் இருந்து விலக்குப் பெறுவதற்கான படிவத்தை நீங்கள் Department of Health (DOH, சுகாதாரத் துறையிலிருந்து) பெறத் தேவையில்லை. கோவிட் -19 தடுப்பூசியில் இருந்து விலக்குப் பெறுவதற்கான படிவங்கள் DOH இடம் இல்லை. வாஷிங்டன் மாநிலத்தின் Certificate of Exemption (COE, விலக்கு சான்றிதழ்) K-12 பள்ளிகள், பாலர் பள்ளிகள் அல்லது குழந்தை பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளில் இருந்து விலக்கு பெற விரும்பும் பெற்றோர்கள்/பாதுகாவலர்களுக்கு மட்டுமேயானதாகும். தற்போது, வாஷிங்டன் மாநிலத்தில் பள்ளி அல்லது குழந்தை பராமரிப்பு அமைப்பில் குழந்தைகள் கலந்து கொள்ள கோவிட் -19 தடுப்பூசி தேவையில்லை. எனவே இது வாஷிங்டன் மாநிலத்தின் விலக்கு சான்றிதழில் COE, சேர்க்கப்படவில்லை.

பள்ளி மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்பு

18 வயதிற்குட்பட்டவர்கள் தடுப்பூசி பெற முடியுமா?

ஆம். 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்கள் Pfizer-BioNTech தடுப்பூசியைப் பெறலாம். சட்டப்பூர்வமாக விலகாதவரை, முதல் 17 வயது வரை உள்ள இளைஞர்கள் தடுப்பூசி பெறுவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் (ஆங்கிலம் மட்டும்) தேவைப்படலாம். மேலும் தகவலுக்கு எங்கள் Vaccinating Youth (இளம்வயதினருக்கு தடுப்பூசியிடல்) வலைத்தளத்தைப் பாருங்கள்.

தடுப்பூசி க்ளினிக்கில் பெற்றோரின் ஒப்புதல் அல்லது சட்ட ரீதியாக விலகியதற்கான சான்றைக் காண்பிப்பதற்கான தேவைகளைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

K-12 பள்ளிக்குச் செல்வதற்கு கோவிட் -19 தடுப்பூசி தேவையா?

K-12 பள்ளிகளில் உள்ள (Revised Code of Washington(RCW, வாஷிங்டன் மறுசீரமைக்கப்பட்ட குறியீடு) 28A.210.140) குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்தத் தேவைகளை உருவாக்குவதற்கு மாநில சுகாதார வாரியத்திற்கு (Department of Health அல்ல) அதிகாரம் உண்டு.

ஒரு Technical Advisory Group (தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை) உருவாக்க வாரியம் Department of Health உடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. வாரியத்தின் வரன்முறைக்கு எதிராக கோவிட்-19 தடுப்பூசி தேவையா, மேலும் பள்ளிக்குச் செல்லத் தேவையான தடுப்பூசிகளின் மாநில பட்டியியலில் சேர்க்கப்பட வேண்டுமா என்று ஆலோசனைக்குழு விவாதிக்கும். தனது ஜனவரி 2022 பொதுக்குழுவில் ஆலோசனைக்குழுவின் முன்னேற்றம் குறித்து வாரியம் குறிப்பிடத் திட்டமிடுகிறது.

என் குழந்தைக்கு கோவிட் -19 தடுப்பூசி பெறும் போது மற்ற தடுப்பூசிகளையும் பெறலாமா?

தற்போது அதே நாள் உட்பட மற்ற தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்குள் கோவிட் -19 தடுப்பூசியை மக்கள் பெறலாம்.

கோவிட் -19தொற்றுநோய் காரணமாக 2021-2022 பள்ளி ஆண்டுக்கான பள்ளிக்கான நோய்த்தடுப்புத் தேவைகளில் ஏதேனும் நெகிழ்வுத்தன்மை இருக்குமா?

பள்ளிக்கானத் தடுப்பூசி தேவைகளில் ஏதேனும் மாற்றங்கள் வேண்டுமா என்பதை மாநில சுகாதார வாரியம் தீர்மானிக்கிறது. இந்த சூழ்நிலையில், பள்ளிக்கான தடுப்பூசி தேவைகளில் மாற்றங்கள் இருக்காது. குழந்தைகள் பள்ளியில் கலந்து கொள்வதற்கு முன் தடுப்பூசி குறித்த தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

தடுப்பூசிக்குப் பிந்தைய வாழ்க்கை

முழுமையாக தடுப்பூசி என்பதன் அர்த்தம் என்ன?

நீங்கள் இரண்டு டோஸ் (Pfizer-BioNTech or Moderna), தடுப்பூசி செலுத்திய இரண்டு வாரங்களுக்குப் பிறகு அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி (Johnson and Johnson (J&J)/Janssen) செலுத்திய இரண்டு வாரங்களுக்குப் பிறகு நீங்கள் முழுமையாக கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டவராகக் கருதப்படுகிறீர்கள்.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவுடன், நீங்கள்:

மேலும் தகவலுக்கு, இந்த வீடியோவைபார்க்கவும்: கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற பிறகு நான் எவற்றை எதிர்பார்க்கலாம்.

நான் முழுமையாக கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியிருந்தால், நான் மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமா?

ஆம். நீங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், பொது இடங்களில் உள்ள உட்புற அமைப்புகளில் முகக்கவசம் அணிய வேண்டும். கோவிட் -19 தடுப்பூசிகள் சிறப்பாக வேலை செய்கின்றன, ஆனால் அவை 100% பயனுள்ளதாக இருப்பதில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் சிலருக்கு கோவிட் -19 வரலாம். பரவக்கூடிய டெல்டா வகை வைரஸ் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், வைரஸ் பரவுவதைக் குறைக்க அனைத்து மக்களும் முகக் கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

நீங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், நீங்கள் இன்னும்:

தயவு செய்து பார்க்கவும்: முக கவசங்கள் மற்றும் முகத்தை மூடுவது பற்றிய வழிகாட்டுதல் (ஆங்கிலம் மட்டும்). கோவிட்-19 பரிசோதனை குறித்தத் தகவல் அல்லது குறிப்பிட்ட வழிகாட்டு ஆவணங்களுக்கு, தயவுசெய்து சோதனைக் குறித்த தகவலைப் பார்க்கவும் (PDF) (ஆங்கிலம் மட்டும்).

நான் தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமா?

பொது இடங்களில் உள்ள அனைத்து உட்புற அமைப்புகளிலும் 2 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

தடுப்பூசி போடப்படாத அல்லது பகுதி தடுப்பூசி செலுத்தியவர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் அனைத்து பொது இடங்களிலும் 6 அடி (2 மீட்டர்) இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

நான் கோவிட் -19 க்கு ஆளாகி, முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால், நான் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா?

இல்லை, உங்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால், உங்களுக்கு நோயின் அறிகுறிகள் ஏதும் தென்படாத வரையில், நீங்கள் கோவிட் -19 உடைய ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டால், நீங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவோ அல்லது பரிசோதனை செய்யவோ தேவையில்லை. இருந்தாலும், உங்களுக்கு நோய் ஏற்பட்ட ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டால், 14 நாட்கள் வரை கோவிட் -19 அறிகுறிகளை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு அறிகுறிகள் தென்படத் தொடங்கினால், உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு உங்கள் சுகாதாரப் பராமரிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். சோதனை அல்லது மதிப்பீட்டைக் கோருவதற்கு முன்பு உங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அவர்களிடம் தெரிவியுங்கள்.

வெவ்வேறு வீடுகளில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்தது கொள்ளலாமா?

இது சூழ்நிலையைப் பொறுத்தது. குடும்பங்களில் ஒருவருக்கு கடுமையான கோவிட் -19நோய்க்கான அதிக அபாயம்(ஆங்கிலம்)இருந்தால், நீங்கள் வெளியில் செல்ல வேண்டும் அல்லது உட்புறத்திற்குள் எனில் ஜன்னல்கள் திறக்கப்பட்டு, நன்றாக முகமூடிகளை அணிந்து, உடல் தூரத்தை (குறைந்தது 6 அடி /2 மீட்டர்) பராமரிக்க வேண்டும்.

எந்தவொரு வீட்டிலும் அதிக அபாயமுள்ள நபர்கள் இல்லையென்றால், முகமூடி அணியாமல் வெளியில் சந்திப்பது அல்லது தனிநபருக்கான உட்புற அமைப்பில் முகக்கவசம் இன்றி சந்திப்பது கோவிட் -19 பரவும் அபாயத்தைக் குறைக்கிறது.

என் வீட்டில் உள்ள சிலருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, சிலருக்கு போடப்படவில்லை என்றால் என்ன செய்வது?

உங்கள் வீட்டில் உள்ள சிலருக்கு மட்டும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால், உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடாதது போல் நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது, பகுதி அல்லது தடுப்பூசி செலுத்தாத மற்ற மக்களுடன் சந்திக்கும் போது நீங்கள் முகமூடி அணிந்து 6 அடி (2 மீட்டர்) இடைவெளியை பராமரிக்க வேண்டும். முடிந்த அளவு அத்தகைய கூட்டங்களை தவிர்க்கவும்.

உங்கள் வீட்டில் யாரும் கடுமையான கோவிட் -19 நோய்க்கான அபாயத்தில் இல்லாத வரை முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள் உள்ள வீடுகளுக்கு நீங்கள் செல்லலாம்.

நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நான் ஒரு பெரிய குழுவுடன் இணையலாமா?

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களுக்கிடையேயான கூட்டங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையைப் பொருட்படுத்தாமல், வெளிப்புறங்களில் மற்றவர்களிடமிருந்து போதுமான தூரத்தை பராமரிப்பது சாத்தியமில்லாத போது, மக்கள் கூட்டமாக இருக்கும் எந்த வெளிப்புற அமைப்பிலும் முக கவசங்களை அணிய வேண்டும் என்று DOH கடுமையாக பரிந்துரைக்கிறது. 500 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ளும் வெளிப்புறங்களில் நடக்கும் நிகழ்வுகள் அல்லது கூட்டங்களில் முகமூடி அணிவது அவசியம்.

உட்புற இடத்தில் கூட்டம் நடந்தால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையை பொருட்படுத்தாமல், 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் அபாயம் உள்ளதன் காரணமாக முகக் கவசம் அணியக் கூடாது. இரண்டு, மூன்று அல்லது நான்கு வயதுடைய குழந்தைகள், பெரியவர்களின் உதவி மற்றும் நெருக்கமான மேற்பார்வையுடன், வெளி உறுப்பினர்களைச் சுற்றி இருக்கும்போது பொது இடங்களில் எல்லா நேரங்களிலும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது.

நான் தடுப்பூசி செலுத்தியுவுடன், உணவகத்தில் சாப்பிடுவது போன்ற பொது நடவடிக்கைகளை நான் மீண்டும் தொடங்கலாமா?

பொது இடங்களின் சமூக நடவடிக்கைகளின் போது, உதாரணமாக ஒரு உட்புற அமைப்புக் கொண்ட உணவகத்தில் உணவருந்துவது அல்லது ஜிம்மிற்கு செல்வது போன்றவை, கோவிட் -19 நோய்த்தொற்றின் ஆபத்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு குறைவாக உள்ளது. முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் முகக் கவசம் இல்லாமல் அல்லது சில இடங்களில் உடல் ரீதியான இடைவெளி இல்லாமல் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கலாம். தடுப்பூசி செலுத்திய நிலையைப் பொருட்படுத்தாமல், நெரிசலான பகுதிகளில் அல்லது பெரிய கூட்டங்களில், அனைத்து மக்களுக்கும் முகக்கவசம் அணிவதற்கு DOH பரிந்துரை செய்கிறது. மேலும் உட்புற அமைப்புகளில் 5 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாத அல்லது பகுதி தடுப்பூசி செலுத்தியவர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் அனைத்து பொது அமைப்புகளிலும் அல்லது ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது ஆறு அடி (இரண்டு மீட்டர்) இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை நான் காட்ட வேண்டுமா?

சில மாவட்டங்களில் சில நிறுவனங்களை அணுகுவதற்கு தடுப்பூசி செலுத்திய சான்று தேவைப்படலாம். மேலும் அறிவதற்கு, உங்கள் மாவட்ட சுகாதாரத் துறையைச் அணுகவும்.

சில வணிக நிறுவனங்களுக்கு நீங்கள் தடுப்பூசி செலுத்திய சான்றினை காட்ட வேண்டும். மேலும் பல வணிகங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன. சில மாவட்டங்களுக்கு செல்வதற்கு மற்றும் சில நிறுவனங்களை அணுகுவதற்கு தடுப்பூசி செலுத்திய சான்று தேவைப்படலாம். மேலும் அறிவதற்கு, உங்கள் மாவட்ட சுகாதாரத் துறையைச் அணுகவும்.

எனவே தடுப்பூசி சான்றிதழை உங்கள் பிறப்புச் சான்றிதழ் அல்லது பிற அதிகாரப்பூர்வ ஆவணம் போல பராமரியுங்கள்! அதனை புகைப்படம் எடுத்து வீட்டில் சேமித்து வையுங்கள். தடுப்பூசி சான்றிதழ் மற்றும் நோய்த்தடுப்பு பதிவுகள் பற்றி மேலும் படிக்கவும்.

நான் பகுதி தடுப்பூசி செலுத்தியிருந்தால் என்ன செய்வது?

இரண்டு டோஸ் செலுத்தவேண்டிய தடுப்பூசிகளுக்கு (Pfizer-BioNTech or Moderna), நீங்கள் ஒரு டோஸைப் பெற்றிருந்தால் அல்லது உங்கள் இரண்டாவது டோஸ் செலுத்திய நாளில் இருந்து இரண்டு வாரங்கள் முடியவில்லை என்றால் "பகுதி தடுப்பூசி" செலுத்தியவராக கருதப்படுவீர்கள். ஒரு டோஸ் செலுத்தவேண்டிய தடுப்பூசிக்கு (Johnson and Johnson (J&J)/Janssen), உங்களுக்கு செலுத்தப்பட்ட நாளில் இருந்து இரண்டு வாரங்கள் முடியவில்லை எனில், நீங்கள் "பகுதி தடுப்பூசி" செலுத்தியவராக கருதப்படுவீர்கள்.

நீங்கள் முழுமையான தடுப்பூசியை பெற காத்திருக்கும்போது, நீங்கள் தடுப்பூசி செலுத்தபடாதவர் போல் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது நீங்கள்:

எனக்கு தடுப்பூசி போட்ட பிறகும் நான் கோவிட் -19 இலிருந்து நோய்வாய்ப்பட முடியுமா?

இது சாத்தியமில்லை, ஆனால் ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் 100%அல்ல. உங்களுக்கு கோவிட்-19 நோயின் அறிகுறிகள் இருந்தால் (ஆங்கிலம்),நீங்கள் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். மேலும், உங்கள் சுகாதாரப் பராமரிப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் உங்களுக்கு கோவிட்-19 பரிசோதனையை பரிந்துரை செய்யலாம்.

கோவிட் -19 பரிசோதனை குறித்தத் தகவலுக்கு தயவுசெய்து பார்க்கவும்: பரிசோதனை தகவல்.

நான் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு என் மூலம் கோவிட் -19 நோய் பரவுமா?

டெல்டா வகை வைரஸாக இருந்தாலும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறிய விகித அளவில் மட்டுமே தொற்று ஏற்படுகிறது. இருப்பினும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்படும் போது அவர்கள் மற்றவர்களுக்கும் வைரஸை பரப்பலாம் என்று முதற்கட்ட சான்றுகள் (ஆங்கிலத்தில் மட்டும்) தெரிவிக்கின்றன.

கோவிட் -19 நோயினால் ஏற்படும் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நான் எவ்வாறு சமாளிப்பது?

தொற்றுநோய் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நீங்கள் மட்டும் அல்ல. வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பலர் பொருளாதாரம், வேலைவாய்ப்பு சிக்கல்கள், பள்ளிகள் மூடல், சமூகத்தில் இருந்து தனிமை, உடல்நலம் குறித்தக் கவலைகள், துக்கம் மற்றும் இழப்பு மற்றும் பலவற்றோடு தொடர்புடைய மன அழுத்தம் மற்றும் கவலையை கொண்டுள்ளனர். பொதுச் செயல்பாடுகளுக்குத் திரும்பும்போது கூடுதல் கவலையும் இதில் அடங்கும்.

உங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை நிர்வகிக்க உதவும் சில ஆதாரங்கள் இங்கே:

தடுப்பூசி பூஸ்டர்கள் மற்றும் கூடுதல் டோஸ்கள்

கோவிட் -19 கூடுதல் டோஸுக்கும் மற்றும் பூஸ்டருக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

கூடுதல் டோஸ் (மூன்றாவது டோஸ் என்றும் அழைக்கப்படுகிறது) நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கானது. சில நேரங்களில் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் முதலில் முழுமையாக தடுப்பூசி பெறும்போது போதுமான பாதுகாப்பை பெறுவதில்லை. இது போன்ற சூழலில், மற்றொரு டோஸ் தடுப்பூசியின் பெறுவது நோயிலிருந்து அதிக பாதுகாப்பை உருவாக்க உதவும்.

பூஸ்டர் என்பது தடுப்பூசியின் டோசைக் குறிக்கிறது. இது தடுப்பூசிபோதுமான பாதுகாப்பை உருவாக்கிய, ஆனால் பின்னர் அந்த பாதுகாப்பு காலப்போக்கில் குறையக் கூடிய (குறைந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கப்படுகிறது) ஒருவருக்கு வழங்கப்படுகிறது. உங்கள் குழந்தை பருவத்தில் செலுத்தப்பட்ட டெட்டனஸ் தடுப்பூசிக்கெதிரான பாதுகாப்பு காலப்போக்கில் குறைந்து வருவதால், ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் நீங்கள் ஒரு டெட்டனஸ் பூஸ்டர் பெறுவதற்கு காரணம் இதுவேயாகும்.

கோவிட் -19 தடுப்பூசியின் கூடுதல் டோஸ் யார் பெற வேண்டும்?

U.S. Food and Drug Administration(FDA), Advisory Committee on Immunizations Practices (ACIP, நோய்த்தடுப்பு நடைமுறைகளுக்கான ஆலோசனைக் குழு), மற்றும் Western States Scientific Safety Review Workgroup (மேற்கத்திய மாநிலங்கள் அறிவியல் பாதுகாப்பு மீள்பார்வை பணிக்குழு) மிதமானது முதல் கடுமையான நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்களுக்கு (ஆங்கிலம் மட்டும்) மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பரிந்துரைக்கின்றன. இந்த பூஸ்டர் டோஸ்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பின்வரும் மருத்துவ நிலைகளில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், நீங்கள் மிதமானது முதல் கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுடையவராகக் கருதப்படுவீர்கள், மேலும் கோவிட் -19 தடுப்பூசியின் கூடுதல் டோஸிலிருந்து பயனடையலாம். இதில் உள்ளடங்கும் நபர்கள்:

 • கட்டிகள் அல்லது இரத்தக் புற்றுநோய்களுக்கான புற்றுநோய் சிகிச்சையைப் பெறுபவர்.
 • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்ற மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்க மருந்து எடுத்துக்கொள்பவர்
 • கடந்த 2 ஆண்டுகளில் ஒரு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர் அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அடக்க மருந்து எடுத்துக்கொள்பவர்
 • மிதமான அல்லது கடுமையான நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு (DiGeorge நோய்க்குறி, Wiskott-Aldrich நோய்க்குறி போன்றவை)
 • தீவிர அல்லது சிகிச்சையளிக்கப்படாத HIV தொற்று
 • அதிக அளவு கார்டிகோஸ்டீராய்டுகள் அல்லது நோயெதிர்ப்பு சக்தியை அடக்கும் பிற மருந்துகளுடன் சிகிச்சை பெறுபவர்.

எங்களிடம் உள்ள தடுப்பூசிகள் பெரும்பாலான வைரஸ் வகைகளுக்கு எதிராக 90% செயல்திறன் கொண்டவை என்றாலும், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்களிடம் எப்போதும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மூன்றாவது டோஸ் ஒரு பூஸ்டராக கருதப்படுவதில்லை, ஆனால் இரண்டு டோஸ் மூலம் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்காதவர்களுக்கு கூடுதல் டோஸ் என கருதப்பபடுகிறது.

நீங்கள் ஒரு mRNA தடுப்பூசி பெற்றிருந்தால் (Moderna அல்லது Pfizer) மற்றும் மிதமானது முதல் கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவராக இருந்தால்:

 • உங்கள் இரண்டாவது டோஸுக்கு பின் குறைந்தது 28 நாட்களுக்குப் பிறகு உங்கள் கூடுதல் டோஸ் பெற வேண்டும்.
 • முடிந்தால், உங்கள் முதல் இரண்டு டோஸின் அதே பிராண்ட் தடுப்பூசியைப் பெற வேண்டும். அந்த பிராண்ட் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் மற்ற mRNA தடுப்பூசி பிராண்டை பெறலாம்.
 • உங்கள் மூன்றாவது mRNA தடுப்பூசி டோஸை முடித்த பின் நீங்கள் ஒரு ஒற்றை கோவிட்-19 பூஸ்டர் டோஸ் (Pfizer-BioNTech, Moderna அல்லது Janssen) ஐப் பெறலாம். உங்கள் பூஸ்டர் டோஸ் Pfizer இன் மூன்றாவது டோஸ் செலுத்திய 3 மாதங்களுக்குப் பிறகு அல்லது Moderna இன் மூன்றாவது டோஸ் செலுத்திய 3 மாதங்களுக்குப் பிறகு இருக்க வேண்டும். இம்மாதிரியான சூழ்நிலைகளில், மிதமான மற்றும் கடுமையான நோயெதிர்ப்புக் குறைபாடுள்ளவர்கள் மொத்தம் நான்கு கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை எடுத்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு Johnson & Johnson (Janssen) தடுப்பூசி கிடைத்து மற்றும் மிதமானது முதல் கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவராக இருந்தால்:

 • உங்கள் முதன்மை Janssen டோஸுக்குப் பிறகு குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் (8 வாரங்கள்) கழித்து, நீங்கள் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியை (Pfizer-BioNTech, Modernaஅல்லது Janssen) பெற வேண்டும்.
 • Janssen கோவிட்-19 தடுப்பூசியின் முதன்மை டோஸ் பெற்ற ஒருவர், இரண்டு கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களுக்கு மேல் பெறக்கூடாது.

உங்கள் மருத்துவ நிலையின் அடிப்படையில் உங்களுக்கு மற்றொரு டோஸ் தேவையா இல்லையா என்ற கேள்விகள் இருந்தால், தயவுசெய்து உங்கள் சுகாதார வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்.

பூஸ்டர் டோஸ்கள் ஏன் அவசியமானவை?

தீவிரமான கோவிட்-19 நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் கடுமையான நோய்களுக்கு எதிராக தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க பூஸ்டர் டோஸ் உதவுகிறது. 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 நோய்க்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்க பூஸ்டர் டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகிறது. அமெரிக்கா முழுவதும் தீவிரமாக பரவி வரும் அதிக தொற்றுத்தன்மையுடைய திரிபுகள் மற்றும் கோவிட்-19 நோயாளிகள் அதிகரித்து வருவதால் இது முக்கியமானதாக உள்ளது.

அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் கோவிட்-19 வைரஸால் ஏற்படும் நோயின் தீவிரத்தைக் குறைக்கிறது, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் இது வைரஸ் திரிபுகளுக்கு எதிராகவும் சிறப்பாக வேலை செய்கிறது. இருப்பினும், எங்களிடம் உள்ள தடுப்பூசிகள் காலப்போக்கில் அவை வழங்கும் பாதுகாப்பை இழக்கக்கூடும். பூஸ்டர் டோஸ்கள் கோவிட்-19 க்கு எதிரான பாதுகாப்பை நீண்ட காலம் அளிக்கும். மேலும் தகவலுக்கு பூஸ்டர் டோஸ் பக்கத்தைப் பார்க்கவும்.

கூடுதல் வாய்ப்பு வளங்கள் மற்றும் தகவல்கள்

குறிப்பிட்ட குழுக்களுக்கான கோவிட் -19 ஆதாரங்கள்

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்

தாய்ப்பால் கொடுப்பவர்கள் மற்றும்/அல்லது கர்ப்பிணிப் பெண்கள்

குடியேறியவர்கள் மற்றும் அகதிகள்

வீட்டிலேயே இருப்பவர்

குறிப்பிட்ட கூடுதல் சமூக வளங்களை தடுப்பூசி தகைமை மற்றும் ஈடுபாடு பக்கம் (ஆங்கிலம் மட்டும்)

எனது கேள்விக்கு இங்கு பதில் இல்லை. நான் மேலும் எவ்வாறு அறிந்து கொள்வது?

பொதுவான கேள்விகளை covid.vaccine@doh.wa.gov முகவரிக்கு அனுப்பலாம்.