கோவிட்-19 க்கான பரிசோதனை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனக்கு அருகிலுள்ள ஒரு சோதனை இடத்தைக் கண்டறியவும் (ஆங்கிலத்தில்)

வீட்டுப் பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவாக வந்தால் எளிதாகத் தெரிவிக்கவும்

ஓவர்-தி-கவுண்டர் பரிசோதனைக் கருவிகளைப் பெற்று பாசிட்டிவ் முடிவைப் பெறுபவர்கள், முடிவைப் பெற்றவுடனே, மாகாண கோவிட்-19 ஹாட்லைன், 1-800-525-0127 எண்ணை அழைக்கவும், பின்னர் # ஐ அழுத்தவும். ஹாட்லைன் திங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும், செவ்வாய் முதல் ஞாயிறு வரை (மற்றும் அனுசரிக்கப்படும் விடுமுறை நாட்கள்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் உள்ளது. மொழி உதவியும் உள்ளது.

ஏன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

பரிசோதனை செய்வது உயிரைக் காப்பாற்றுகிறது. பரிசோதனையானது, வைரஸ் பரவுவதைத் தடுக்கச் சரியான நேரத்தில் தனிமைப்படுத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மக்களை அனுமதிக்கிறது; மேலும் அறிகுறிகள் இல்லாமல் கூட பாதிக்கப்பட்டவர்கள் வைரஸை பரப்பலாம். பொது சுகாதார அதிகாரிகள் பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரிப்புகளைக் கண்டறிந்து பதிலளிக்கவும், வைரஸின் புதிய திரிபுகளைக் கண்காணிக்கவும் இந்த பரிசோதனை உதவுகிறது. வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உதவுவதில் பரிசோதனை ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.

University of Washington மற்றும் Department of Health (DOH, சுகாதாரத் துறை) இன் ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 பரிசோதனை மற்றும் WA Notify (வாஷிங்டன் அறிவிப்பு) மூலம் கண்காணிப்பதால் டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை சுமார் 6,000 நிகழ்வுகளைத் தடுக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

எப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது பரிசோதனை செய்யுங்கள். கோவிட்-19 பரவலான அறிகுறிகளை (ஆங்கிலத்தில்) கொண்டுள்ளது, எனவே உங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், மிக விரைவில் பரிசோதனை செய்து கொள்வது நல்லதாகும்.

கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று உறுதி செய்தவரிடம் நீங்கள் வெளிப்படும் போது பரிசோதனை செய்யுங்கள். அறிகுறிகள் தோன்றும் பட்சத்தில் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு அறிகுறிகள் தோன்றவில்லை என்றால், வெளிப்பாடுக்குப் பிறகு ஐந்து நாட்கள் காத்திருந்து பின்னர் பரிசோதனை செய்யுங்கள்.

வாஷிங்டனில் உள்ள வணிகங்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் ஆகியவை ஒரு நிறுவனம் அல்லது நிகழ்விற்குள் நுழைவதற்கு முன்பு பரிசோதனை மற்றும்/அல்லது தடுப்பூசி செலுத்த வேண்டிய தேவைகளைக் கொண்டிருக்கலாம். நீங்கள் செல்வதற்கு முன் அவர்களை தொலைபேசியில் அழைக்கவும் அல்லது அவர்களின் இணையதளத்தைப் பார்க்கவும்.

பயணத்திற்கு முன்பு மற்றும்/அல்லது பயணத்திற்குப் பின்பு நீங்கள் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கலாம். Centers for Disease Control and Prevention (CDC, இன் சமீபத்திய பயண வழிகாட்டுதலைப்) (ஆங்கிலத்தில்) பார்க்கவும்.

குறிப்பாக தீவிரமான நோய் அபாயத்தில் உள்ளவர்கள் அல்லது அவர்களின் கோவிட்-19 தடுப்பூசிகளை புதுப்பித்த நிலையில் கொண்டில்லாத(ஆங்கிலத்தில்) குழுவினருடன் செல்லும்போது.

எங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

வாஷிங்டன் மாகாண Department of Health இணையதளம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் நேரம் மற்றும் நிபந்தனைகள் உள்ள பரிசோதனை தளங்களின் விவரங்களைப் பராமரிக்கிறது. பரிசோதனை தளங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, 2-1-1 ஐ அழைக்கவும். ஆர்டர் செய்வதற்கும், மருந்தகங்களிலும், வசதியாக வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்வதற்கு ஏற்ப ஓவர்-தி-கவுண்டர் பரிசோதனைத் தொகுப்புகள் கிடைக்கின்றன.

செலவு

தற்போது மாதத்திற்கு எட்டு பரிசோதனைகளுக்கு ஆகும் செலவுகளை காப்பீட்டு வழங்குநர்கள் குடும்பங்களுக்குத் திருப்பி அளிப்பார்கள்.காப்பீட்டு பணத்தை திரும்பப் பெறுதல் பற்றி மேலும் அறிக(ஆங்கிலத்தில்).

மாவட்ட அல்லது மாகாண-ஆதரவு பரிசோதனைத் தளங்களில் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு எந்தவித செலவும் இல்லை. பல பரிசோதனைகளுக்கு, குறிப்பாக அறிகுறிகளை உணரும் நபர்கள் காப்பீடு மூலம் பணத்தை செலுத்தலாம் அல்லது Department of Health மூலம் மானியம் பெறலாம்.

நீங்கள் வீட்டுப் பரிசோதனை கருவிகளை உள்ளூர் அல்லது ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருந்தகங்களில் வாங்கலாம். காப்பீடு அல்லது மருந்துச் சீட்டு தேவையில்லை.

பரிசோதனைகளின் வகைகள்

தற்போது கிடைக்கும் சோதனைகளில் துரித ஆன்டிஜென் சோதனைகள், மூலக்கூறு சோதனைகள் (ஆய்வக அடிப்படையிலான மற்றும் கவனிப்பு புள்ளி இரண்டும்) மற்றும் சில வீட்டு சுய பரிசோதனைகள் ஆகியவை அடங்கும். எந்தவொரு குறிப்பிட்ட பரிசோதனையின் வழங்கலும் தேவை மற்றும் உற்பத்தியாளர் திறனைப் பொறுத்து மாறுபடும்.

ஒரு வீட்டுப் பரிசோதனை எவ்வாறு செய்வது

துரித வீட்டுப் பரிசோதனைக் கருவிகளின் மிகத் துல்லியமான முடிவுகளுக்கு அந்த தொகுப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியமாகும். பல பிராண்டுகள் வீடியோ வழிமுறைகளையும் வழங்குகின்றன. மேலும் சிறந்த பயிற்சிகளுக்கு, வீட்டு பரிசோதனை செய்வதற்கான CDC இன் உதவிக்குறிப்புகளை (ஆங்கிலத்தில்) பார்க்கவும்.

துரித பரிசோதனைகளில் தவறான நெகட்டிவ் முடிவுகள் வரலாம். சில பரிசோதனைக் கருவிகளில் இரண்டு பரிசோதனைகள் இருக்கலாம் (எப்போது பரிசோதிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளுக்கு பெட்டியில் குறிப்பிட்டுள்ளவற்றைப் பின்பற்ற வேண்டும்).

எவ்வாறு பரிசோதனை செயல்படுகிறது என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, எங்களது பரிசோதனை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தைப்பார்வையிடவும்.

எவ்வாறு பரிசோதனை செயல்படுகிறது

பெரும்பாலான பரிசோதனைகள் நாசி துடைப்பானைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. உமிழ்நீரைச் சேகரிப்பதன் மூலம் சில பரிசோதனைகள் செய்யப்படலாம். மேலும் விவரங்களை பரிசோதனை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தில் காணலாம்.

எப்போது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது விலகியிருக்க வேண்டும்

உங்கள் பரிசோதனையை எடுப்பதற்கு முன்போ உங்கள் முடிவுகளைப் பெற்ற பின்போ நீங்கள் விலகியிருக்க வேண்டும் அல்லது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது உங்கள் தடுப்பூசி நிலை மற்றும் உங்களுக்கு அறிகுறிகள் வெளிப்படுகிறதா என்பதைப் பொறுத்தது. சமீபத்திய CDC வழிகாட்டுதல்கள் இந்த சூழ்நிலையை உடைக்கிறது (ஆங்கிலத்தில்). கோவிட்-19 நோய் தொற்றுக்கு வெளிப்பட்டவர்கள் மற்றும்/அல்லது அறிகுறி வெளிப்படுபவர்கள் எங்கள் வழிகாட்டி ஐயும் பின்பற்றலாம்.

பின்-தொடர்தல்

உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்.  உங்கள் கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவாக வந்தால், உங்களையும் பிறரையும் பாதுகாப்பாக வைக்க நீங்கள் சில வழிகளைப் பின்பற்றலாம் என்பது ஒரு நல்ல செய்தி ஆகும். மேலும் அதிக தகவல்களை இங்கே காணலாம்: உங்கள் பரிசோதனை பாசிட்டிவாக வந்தால் நீங்கள் செய்யவேண்டியது.