WA Notify வெளிப்பாடு அறிவிப்புகள் ஸ்மார்ட்ஃபோன் செயலி

WA Notify (WA அறிவிப்பு) (வாஷிங்டன் வெளிப்பாடு அறிவிப்புகள் எனவும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு இலவச கருவியாகும், சாத்தியமான COVID-19 வெளிப்பாடுகளில் இருந்த பயனர்களை எச்சரிப்பதற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் இதை சேர்க்கலாம். இது முற்றிலும் தனிப்பட்டது, எந்த தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்கவோ அல்லது பகிரவோ செய்யாது, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்காது.

எனது தொலைபேசியில் WA Notify எப்படி இணைப்பது?

Apple logo

iPhone இன் அமைப்புகளில், வெளிப்பாடு அறிவிப்புகள் என்பதைச் செயல்படுத்துங்கள்:

  • அமைப்புகளுக்குச் செல்லவும்
  • Exposure Notifications வரை உருட்டவும்
  • “இயக்கு Exposure Notifications” என்பதைக் கிளிக் செய்யவும்
  • அமெரிக்கா என்பதைத் தெரிவு செய்யவும்
  • வாஷிங்டன் என்பதை தெரிவு செய்யும்
Android logo

Android ஃபோனில்:

அது எவ்வாறு இயங்குகிறது?

நீங்கள் WA Notify செயலியை செயல்படுத்தும் போது, தங்களுடைய தொலைபேசிகளில் WA Notify ஐ செயலியைச் செயல்படுத்தியுள்ள மற்ற நபர்களின் தொலைபேசிகளுடன் உங்களுடைய தொலைபேசியானது சீரற்ற, அநாமதேய குறியீடுகளைப் பரிமாறிக் கொள்கிறது. உங்களைப் பற்றிய எந்த தகவலையும் வெளிப்படுத்தாமல் இந்தக் குறியீடுகளை பரிமாறிக்கொள்வதற்காக, இந்த அமைப்பானது இரகசியம் காக்கும் தன்மையுள்ள குறைந்த ஆற்றலுடன் இயங்கும் புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. சமீபத்தில் உங்களுக்கு அருகில் இருந்த மற்றொரு WA Notify பயனரின் COVID-19 பரிசோதனை பாசிட்டிவாக இருந்து, அநாமதேயமாக மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கான படிகளை அவர் பின்பற்றினால், உங்களுக்கு விழிப்பூட்டல் கிடைக்கும். இது உங்களுக்குத் தேவையான பராமரிப்பை விரைவாகப் பெறுவதற்கும், உங்களின் மூலம் COVID-19 உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குப் பரவுவதைத் தடுப்பதற்கும் உதவும்.

உங்களுக்கு ஒரு எச்சரிக்கை அனுப்பத் தேவைப்படாதபடி பாதுகாப்பான தூரத்திலோ அல்லது குறுகிய நேரத்திலிருந்தோ COVID-19 ஐ பரப்பக்கூடிய நிகழ்வுகளை அடையாளம் காண ஒரு வழிமுறை கணிதத்தைச் செய்கிறது. WA Notify செயலியானது நீங்கள் வெளிப்படும் சாத்தியம் இருந்தால் மட்டுமே உங்களை எச்சரிக்கும். எனவே எச்சரிக்கையைப் பெறாதது நல்ல செய்தியே.

WA Notify செயலியானது 30 க்கும் மேற்பட்ட மொழிகளிலும் உள்ளது.

WA Notify Flow Chart in Tamil - Click to Read as PDF

உங்கள் தனியுரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

WA Notify ஆனது உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Google Apple வெளிப்பாடு அறிவிப்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இது எந்த இருப்பிடத்தையும் அல்லது தனிப்பட்ட தரவையும் சேகரிக்கவோ வெளிப்படுத்தவோ செய்யாமல் பின்னணியில் வேலை செய்கிறது. WA Notify செயலிக்கு நீங்கள் யார் அல்லது எங்கு வேலை செய்கிறீர்கள் என்ற தேவையில்லாமல் திறமையாக வேலை செய்கிறது. இது ப்ளூடூத்தின் சிறிய வெடிப்புகளை மட்டுமே பயன்படுத்துவதால், உங்கள் பேட்டரிக்கும் பாதிப்பு ஏற்படாது.

இதில் பங்கேற்பது முற்றிலும் தன்னார்வமானதாகும். பயனர்கள் எந்த நேரத்திலும் இணைவதை அல்லது வெளியேறுவதைத் தெரிவு செய்ய முடியும். பயனரின் தனியுரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது பற்றி மேலும் அறிவதற்கு, WA Notify தனியுரிமைக் கொள்கை ஐப் பார்க்கவும்.

அந்த அறிவிப்புகள் எப்படி இருக்கும்?

நீங்கள் பெறக்கூடிய இரண்டு வகையான அறிவிப்புகள் உள்ளன. நேர்மறை சோதனை செய்தவர்கள் சரிபார்ப்பு இணைப்பு உரை செய்தி மற்றும்/அல்லது பாப்-அப் அறிவிப்பைப் பெறுவார்கள். [WA Notify நோய் வெளிப்பாடுள்ள பயனர்கள் அந்த வெளிப்பாடு பற்றிய அறிவிப்பைப் பெறுவார்கள். . இந்த அறிவிப்புகளைப் பற்றி மேலும் அறியவும் மற்றும் அவை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவும்.

WA Notify எவ்வாறு உதவுகிறது?

நோய்த் தொற்றுப் பாதிப்பு அறிவிப்புகளை அதிகமான மனிதர்கள் பயன்படுத்தும் போது பயன்கள் பாரியதாக இருக்கும் என்று ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறிய எண்ணிக்கை மனிதர்கள் WA Notify ஐப் பயன்படுத்துவது கூட தொற்றுக்களினதும் மரணங்களினதும் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று வொஷிங்டன் மாநிலத்திலுள்ள மூன்று பிராந்தியங்களை அடிப்படையாகக் கொண்ட மாதிரிகள் காட்டுகின்றன. தடுப்பூசி போட்டு, முகக்கவசம் அணிந்தால், உயிரைக் காப்பாற்றலாம். நாம் நேரில் சந்திக்கும் நிகழ்வுகளை மீண்டும் தொடங்கும் போது, WA Notify என்பது ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்கு ஆகும். இது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் செய்யக்கூடிய மற்றொரு விஷயம் ஆகும்.

சுய-பரிசோதனையில் உங்களுக்கு COVID-19பாசிட்டிவாக வந்திருந்தால், மற்றவர்களுக்கு எவ்வாறு அறிவிப்பது

சுய-பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தும் WA Notify பயனர்களுக்கு (வீட்டுப் பரிசோதனைகள் என்றும் அழைக்கப்படுகிறது) COVID-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்திருந்தால், மற்ற WA Notify பயனர்கள் COVID-19 தொற்றுக்கு வெளிப்பட்டிருக்கலாம் என்று அநாமதேயமாகத் தெரிவிக்க சரிபார்ப்புக் குறியீட்டைக் கோரலாம்.

Apple logo

ஒரு iPhone-இல்:

  • Settings (அமைப்புகள்) க்குச் சென்று Exposure Notifications.(வெளிப்படுகை அறிவிப்புகளைத்) திறக்கவும்.
  • “Share a COVID-19 Diagnosis (COVID-19 நோயறிதலைப் பகிரவும்”) ஐத் தேர்வுசெய்யவும்.
  • “Continue (தொடர்க)” என்பதைத் தேர்வுசெய்யவும்.
  • குறியீட்டை உள்ளிடுவதற்கான விருப்பத்தை நீங்கள் பார்த்தால், “Didn’t get a code? Visit WA State Dept. of Health Website. (ஒரு குறியீடு கிடைக்கவில்லையா? வாஷிங்டன் சுகாதாரத் துறை இணைய தளத்தைப் பாருங்கள்)” என்பதைத் தேர்வுசெய்யுங்கள். குறியீட்டை உள்ளிடுவதற்கான விருப்பத்தை உங்களால் பார்க்கமுடியவில்லை என்றால், அடுத்த படிக்குச் செல்லவும்.
  • WA Notify இனைப் பயன்படுத்தும் உங்கள் சாதனத்தின் தொலைபேசி எண்ணையும் நீங்கள் நேர்மறையான கொவிட்-19 சோதனை முடிவைப் பெற்ற திகதியையும் உள்ளிடுக.
  • “Continue (தொடர்க)” என்பதைத் தேர்வுசெய்யவும்.
Android logo

Android ஃபோனில்:

  • WA Notify “Share your test result to help stop the spread of COVID-19” (“COVID-19 தொற்றுப் பரவலைத் தடுக்க உங்கள் பரிசோதனை முடிவைப் பகிர்ந்து உதவுங்கள்”) இனைத் தேர்வுசெய்யுங்கள்.
  • “Continue (தொடர்க)” ஐத் தேர்வுசெய்யுங்கள் பின்னர் “I need a code (எனக்கு ஒரு குறியீடு தேவை)” என்பதைத் தேர்வுசெய்யுங்கள்.
  • WA Notify இனைப் பயன்படுத்தும் உங்கள் சாதனத்தின் தொலைபேசி எண்ணையும் நீங்கள் நேர்மறையான கொவிட்-19 சோதனை முடிவைப் பெற்ற திகதியையும் உள்ளிடுக.
  • “Send Code” (குறியீட்டை அனுப்புக) இனைத் தெரிவுசெய்க.

உங்களுக்கான சரிபார்த்தல் இணைப்புடன் ஒரு பாப்-அப் அறிவிப்பையும் குறுஞ்செய்தியையும் நீங்கள் பெறுவீர்கள். குறித்த அறிவிப்பினை அல்லது குறுஞ்செய்தியிலுள்ள இணைப்பினைச் சொடுக்குவதன் மூலம் மாத்திரம் WA Notify இன் படிமுறைகளைப் பயன்படுத்தி, தொற்று தொடர்பான சாத்தியமானதொரு வெளிப்பாடு பற்றிப் பிற பயனர்களுக்கு அநாமதேய முறையில் தெரியப்படுத்த உங்களால் முடியும்.

உங்களால் WA Notify இன் மூலம் சரிபார்த்தல் குறியீடு ஒன்றினைக் கோர முடியாத பட்சத்தில், 1-800-525-0127 எனும் மாநில கொவிட்-19 அவசர எண்ணை அழைத்து # குறியீட்டினை அழுத்தி நீங்கள் ஒரு WA Notify பயனர் என்பதனை துரித அழைப்பு ஊழியரிடம் தெரியப்படுத்துங்கள். ஹாட்லைன் ஊழியர்கள் உங்களுக்கு ஒரு சரிபார்ப்பு இணைப்பை வழங்குவார்கள், அதன் மூலம் உங்களுடன் தொடர்பு கொண்ட மற்ற WA Notify பயனர்களை நீங்கள் எச்சரிக்கலாம்.

உங்கள் பாசிட்டிவ் சுய-பரிசோதனை COVID-19 பரிசோதனை முடிவுகளை எவ்வாறு அறிவிப்பது

சுய-பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்துபவர்கள் (வீட்டுப் பரிசோதனைகள் என்றும் அழைக்கப்படுகிறது) COVID-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்திருந்தால், WA Notify செயலியைப் பயன்படுத்தாமல், Department of Health (DOH, சுகாதாரத்துறை) இல் பாசிட்டிவ் பரிசோதனை முடிவுகளை அறிவிக்கலாம். பாசிட்டிவ் பரிசோதனை முடிவை எவ்வாறு அறிவிப்பது என்பது குறித்த தற்போதைய வழிகாட்டுதலுக்கு, COVID-19 பக்கத்திற்கான DOH பரிசோதனை ஐப் பார்க்கவும்.

Say Yes! COVID Test (COVID பரிசோதனைக்கு ஆம் என்று சொல்லுங்கள்!) என்ற இணையதளத்தில் இலவச சுய-பரிசோதனைக் கருவிகள் கிடைக்கின்றன.

DOH இன் ஆதாரவளத்தில் உள்ள உங்களுக்கு COVID-19 பரிசோதனை பாசிட்டிவாக வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற கூடுதல் வழிகாட்டுதலைக் காணலாம்.

தயவுசெய்து கவனிக்கவும்: WA Notify என்பது ஒரு வெளிப்பாடு அறிவிப்பு கருவியாகும். பயனர்கள் தங்கள் பரிசோதனை முடிவுகளை DOH க்கு தெரிவிக்க இது வடிவமைக்கப்படவில்லை. DOH க்குப் பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதற்கு WA Notify செயலியைப் பயன்படுத்தக் கூடாது.

தொடர்புத் தடமறிதல் மற்றும் WA Notify இரண்டும் நமக்கு ஏன் தேவை?

தொடர்பு தடமறிதல் பல தசாப்தங்களாக இருக்கும் ஒரு பயனுள்ள பொது சுகாதார தலையீடாகும். WA Notify இந்த வேலையை அநாமதேயமாக ஆதரிக்கிறது. இங்கே ஒரு உதாரணம்: உங்களுக்கு COVID-19 பரிசோதனை பாசிட்டிவாக இருந்தால், பொது சுகாதார அதிகாரிகள் உங்களை அழைத்து உங்கள் நெருங்கிய தொடர்புகளைப் பகிருமாறு கேட்கலாம். நீங்கள் பேருந்தில் பயணிக்கும்போது உங்கள் அருகில் அமர்ந்திருந்த அந்நியரின் பெயரைச் சொல்ல முடியாது. ஆனால், நீங்கள் இருவரும் WA Notify செயலியைப் பயன்படுத்தினால், பேருந்தில் இருக்கும் அந்நிய நபர் அநாமதேயமாக சாத்தியமான வெளிப்பாடு குறித்து எச்சரிக்கப்பட்டு, அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு COVID-19 பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம். தடுப்பூசிகள் மற்றும் முகக்கவசம் அணிவதைப் போலவே, ஒவ்வொன்றும் COVID-19 பரவுவதைத் தடுக்க உதவுகின்றன, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து மிகவும் பயனுடையதாக உள்ளது.

நான் WA Notify ஐத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமா அல்லது இப்போது அதை அணைக்கலாமா?

அனைவரும் தங்கள் ஃபோனில் உள்ள WA Notify ஐ இயக்கநிலையிலே வைத்திருக்கவும், அதை அணைக்காமல் இருக்கவும் ஊக்குவிக்கிறோம். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் போது, WA Notify என்பது உங்களுடன் கூடுதல் பாதுகாப்பை எடுத்துச் செல்ல எளிதான வழியாகும்.

நான் தடுப்பூசி போட்டிருந்தாலும், எனக்கு WA Notify தேவையா?

ஆம்! வாஷிங்டன் மாகாணத்தில் இன்னும் சில காலத்திற்கு COVID-19 தொற்றுப்பரவல் இருக்கும். தடுப்பூசிகள் எவ்வளவு காலம் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் புதிய COVID-19 திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாகப் பாதுகாக்கின்றன என்பது போன்ற வைரஸைப் பற்றிய பல விஷயங்களை நாங்கள் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறோம். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஆபத்துக் குறைவாக இருந்தாலும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களும் COVID-19 ஐ பரப்பக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம். மேலும், தற்போதும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். இந்த அனைத்துக் காரணங்களுக்காகவும், வாஷிங்டனில் வசிப்பவர்கள் COVID-19 பரவுவதைத் தடுக்க தங்களது ஃபோன்களில் WA Notify ஐ செயல்படுத்துமாறு ஊக்குவிக்கிறோம்.

WA Notify (WA அறிவிப்பு)பற்றியச் செய்தியைப் பரப்ப உதவி செய்ய விரும்புகிறீர்களா?

சமூக ஊடகச் செய்திகள், சுவரொட்டிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சியில் மாதிரி விளம்பரங்கள் மற்றும் பலவற்றிற்கு எங்கள் WA Notify கருவித்தொகுப்பைப் பார்க்கவும். மேலும், உங்கள் நண்பர்கள்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூறுங்கள். அதிகமான நபர்கள் WA Notify ஐப் பயன்படுத்துவது, உங்களையும் உங்கள் சமூகத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் பிற கேள்விகள்

WA Notify இல் எனக்கு தொற்று ஏற்பட்ட தேதியை எவ்வாறு கண்டறிவது?

ஒரு iPhone-இல்:

  1. Settings (அமைப்புகளுக்குச்) செல்லுங்கள்
  2. Exposure Notifications (வெளிப்பாட்டு அறிவிப்புகள்)-ஐத் தேர்வுசெய்யுங்கள் அல்லது தேடல் பட்டியில் Exposure Notifications (வெளிப்பாட்டு அறிவிப்புகள்) என்று உள்ளிடுங்கள்
  3. நீங்கள் தொற்றுக்கு சாத்தியமாக வெளிப்பட்டுள்ள தோராயமான தேதி “You may have been exposed to COVID-19 (நீங்கள் கோவிட்-19 தொற்றுக்கு வெளிப்பட்டிருக்கக் கூடும்)” இன் கீழ் காட்டப்படும்

Android-இல்:

  1. WA Notify செயலியைத் திறக்கவும்
  2. “Possible exposure reported (அறிவிக்கப்பட்ட சாத்தியமான வெளிப்பாடு)” என்பதன் கீழ் உள்ள See Details (விவரங்களைப் பார்க்கவும்) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் தொற்றுக்கு சாத்தியமாக வெளிப்பட்டுள்ள தோராயமான தேதி “Possible Exposure Date (சாத்தியமான வெளிப்பாட்டுத் தேதி)” இன் கீழ் காட்டப்படும்

நான்Washington State Department of Health (DOH)(நான் வாஷிங்டன் மாநில சுகாதாரத் துறை) ( இலிருந்து ஒர் அறிவிப்பை அல்லது/மற்றும் ஒரு உரையைப் பெற்றேன். ஏன்?

DOH சமீபத்தில் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்த அனைவருக்கும் ஒரு குறுஞ்செய்தி மற்றும்/அல்லது பாப்-அப் அறிவிப்பை அனுப்புகிறது, இதனால் WA Notify பயனர்கள் கூடுமானவரை வெளிப்பாட்டின் சாத்தியமுள்ள மற்ற பயனர்களை விரைவாகவும் அநாமதேயமாகவும் எச்சரிக்க முடிகிறது. இந்த அறிவிப்புகளைப் பற்றி மேலும் அறியவும் மற்றும் அவை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவும்.

இரண்டையும் நீங்கள் பெற்றால், அறிவிப்பைத் தட்டவும் அல்லது குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் மேலும் WA Notify இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சாத்தியமான வெளிப்பாடு உள்ள பிற பயனர்களை அநாமதேயமாக எச்சரிக்கவும்.

எனதுWA Notify தரவுகளை பொது சுகாதாரத்திற்கு பங்களிப்பது பற்றி எனக்கு ஒரு அறிவிப்பு வந்தது. ஏன்?

WA Notify செயலியில் தேவையான மேம்பாடுகளை செய்வதற்காக அது எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை DOH அறிய விரும்புகிறது. உங்களுடைய WA Notify தரவுகளைப் பகிர ஒப்புக்கொண்டாலும், உங்கள் தனியுரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும். தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படுவதிவில்லை அல்லது பகிரப்படுவதில்லை. மேலும் உங்களை அடையாளம் காண்பதற்கான வழிகள் எதுவும் இல்லை. DOH மட்டுமே இந்தத் தரவை அணுக முடியும் மற்றும் மாகாண அளவில் மட்டுமே அணுக முடியும்.

ஒரு வேளை WA Notify பயனர்கள் தங்கள் தரவுகளைப் பகிர்ந்துக் கொள்ள ஒப்புக்கொண்டால், என்ன தரவு சேகரிக்கப்படுகிறது?

தரவுகளைப் பகிர ஒப்புக்கொண்டாலும், உங்கள் தனியுரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படுவதில்லை அல்லது பகிரப்படுவதில்லை. மேலும் உங்களை அடையாளம் காண்பதற்கான வழிகள் எதுவும் இல்லை. DOH மட்டுமே இந்த மாகாண அளவிலான தரவுகளை அணுக முடியும். இது பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

  • WA Notify தங்கள் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்கிறவர்களின் எண்ணிக்கை. இது எங்கள் மாதிரியின் அளவை அறிய உதவுகிறது.
  • WA Notify மூலம் பெறப்பட்ட Exposure Notifications பயனர்களின் எண்ணிக்கை. COVID-19 பரவலின் போக்கினை அறிய இது எங்களுக்கு உதவுகிறது.
  • தொடர்பு நிலை குறித்த அறிவிப்பை பெறுவதற்கு கிளிக் செய்யும் நபர்களின் எண்ணிக்கை. பொது சுகாதாரத்திற்கான பரிந்துரைகளை மக்கள் எவ்வாறு கருதுகிறார்கள் என்பதை அறிய எங்களுக்கு இது உதவுகிறது.
  • COVID-19 உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவரின் அருகில் இருந்தவர்களின் எண்ணிக்கை, ஆனால் ஒரு வெளிப்பாடு பற்றி அறிவிக்க போதுமான அளவு நெருக்கமாக அல்லது நீண்ட நேரம் இல்லை. WA Notify ஒரு தொடர்பு நிலையினை நிர்ணயிக்கும் வழிமுறை சரிசெய்யப்பட வேண்டுமா என்பதைக் கருத்தில் கொள்ள இது எங்களுக்கு உதவுகிறது.

எனது iPhone இல் WA Notify இயக்கும்போது, "Availability Alerts (கிடைக்கும் நிலை பற்றிய எச்சரிக்கைகளை" செயல்படுத்த வேண்டுமா அல்லது முடக்க வேண்டுமா?

முடக்குவதே சிறந்தது. நீங்கள் வாஷிங்டன் மாகாணத்திற்கு வெளியே கணிசமான நேரம் பயணம் செய்தால் அதை இயக்க பரிந்துரைக்கப்படுகிறது. Availability Alerts (கிடைக்கும் நிலை பற்றிய எச்சரிக்கைகள்) இயக்கத்தில் இருக்கும்போது, நீங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும்போது வெளிப்பாடு அறிவிப்பு WA Notify கருவி போல, வேறு அறிவிப்புகளையும் பெறலாம். உங்களிடம் iPhone இருந்தால், பல பிராந்தியங்களைச் சேர்க்க முடியும், ஆனால் ஒரு நேரத்தில் ஒரு பிராந்தியத்தை மட்டுமே செயல்பாட்டில் வைக்க முடியும். புதியதைச் செயல்படுத்த நீங்கள் ஒரு பிராந்தியத்தை நீக்கத் தேவையில்லை. உங்களிடம் ஒரு Android ஃபோன் இருந்தால், பல மாகாணங்களில் இருந்து பெறப்படும் WA Notify போன்ற பல வெளிப்பாடு அறிவிப்பு செயலிகளை நிறுவலாம், ஆனால் WA Notify உடன் இணக்கமான தொழில்நுட்பத்துடன் உள்ள ஒரே ஒரு செயலி மட்டுமே ஒரு நேரத்தில் செயலில் இருக்கும்.

நான் பயன்படுத்த தேர்வு செய்ய வேண்டுமா WA Notify?

ஆம். WA Notify ஐப் பயன்படுத்துவது இலவசம் மற்றும் தன்னார்வமானது ஆகும். நீங்கள் எந்த நேரத்திலும் அதில் இருந்து விலகலாம். இதைச் செய்ய, iPhone இல் உள்ள அம்சத்தை முடக்கவும் அல்லது Android ஃபோனில் இருந்து செயலியை நீக்கவும். நீங்கள் விலகியதும், அருகிலுள்ள மற்ற பயனர்களிடமிருந்து ஃபோன் சேமித்து வைத்திருக்கும் அனைத்து சீரற்ற குறியீடுகளும் நீக்கப்படும் மற்றும் அவற்றை மீட்டெடுக்க முடியாது.

இந்த WA Notify தொடர்புத் தடமறிதல் செயலியா?

இல்லை. WA Notify உங்கள் அருகில் இருந்த நபர்களைப் பற்றிய தகவல்களை அது கண்காணிக்கவோ கண்டுபிடிக்கவோ செய்யாது. எனவே அது "தொடர்புத் தடமறிதல்" வேலை செய்வதில்லை. தொடர்புத் தடமறிதல் COVID-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்த ஒரு நபரின் வெளிப்பாடில் இருந்த யாவரையும் அடையாளம் காட்டுகிறது. இந்தக் கருவி எந்தவொரு தனிப்பட்ட நபரின் தகவலையும் சேகரிக்கவோ அல்லது பரிமாறிக்கொள்ளவோ செய்யாது, எனவே நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டீர்கள் என்பது யாருக்கும் தெரியாது.

”வெளிப்பாடு என்றால் என்ன”?

COVID-19 பரிசோதனையில் பின்னர் பாசிட்டிவ் என்று தெரிய வந்த மற்றொரு WA Notify  பயனருக்கு அருகில் நீங்கள் நேரத்தை செலவழிக்கும் போது வெளிப்பாடு ஏற்படுகிறது. ஓர் வெளிப்பாட்டைக் கண்டறிய, உங்களுக்கு எச்சரிக்கை அனுப்பத் தேவைப்படாதபடி பாதுகாப்பான தூரத்திலோ அல்லது குறுகிய நேரத்திலிருந்தோ COVID-19 ஐ பரப்பக்கூடிய நிகழ்வுகளை அடையாளம் காண ஒரு வழிமுறையை WA Notify பயன்படுத்துகிறது. COVID-19 பரவுவதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்து இருப்பதாக DOH நம்பும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு, வேறொரு பயனருடன் உங்கள் தொடர்பு போதுமான அளவு நெருக்கமாகவும், நீண்ட காலமாகவும் இருந்தால் மட்டுமே WA Notify உங்களுக்கு வெளிப்பாடு அறிவிப்பை அனுப்பும். இந்த வழிமுறை பொது சுகாதார அதிகாரிகளால் சரிசெய்யப்படலாம்.

நான் வெளிப்படுத்தப்பட்டு உள்ளதாக WA Notify அறிவித்தால் என்ன செய்ய வேண்டும்?

WA Notify நீங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டறிந்தால், உங்கள் தொலைபேசியில் ஒர் அறிவிப்பு வரும். அது நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தகவலுடன் ஒரு வலைத்தளத்திற்கு உங்களை கொண்டு செல்லும். இதில் எப்படி, எங்கு பரிசோதனை செய்து கொள்வது, உங்களையும் உங்களுக்கு நெருக்கமானவர்களையும் எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது பற்றிய தகவல்கள் மற்றும் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கான ஆதாரங்கள் ஆகியவை இருக்கும். இணையதளத்தில் உள்ள வழிமுறைகளை கவனமாக படித்து பின்பற்றுவது அவசியமாகும்.

நான் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டுள்ளது மக்களுக்குத் தெரியுமா?

இல்லை. WA Notify உங்களைப் பற்றிய எந்த தகவலையும் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாது. சாத்தியமான வெளிப்பாடு குறித்து யாராவது அறிவிப்பைப் பெறும்போது, சமீபத்தில் அவர்கள் அருகில் இருந்த ஒருவருக்கு COVID-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று மட்டுமே அறிவார்கள். அந்த நபர் யார் அல்லது எங்கு வெளிப்பாடு ஏற்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது.

நான்WA Notify க்காக பணம் செலுத்த வேண்டுமா?

இல்லை. WA Notify இலவசமாகும்.

எவ்வாறு WA Notify வாஷிங்டன் மாநிலத்திற்கு உதவும்?

University of Washington ஆய்வின் (ஆங்கிலத்தில் மட்டும்) மூலம் அதிக மக்கள் வெளிப்பாடு அறிவிப்பைப் பயன்படுத்தும்போது, அதிக நன்மை கிடைக்கும் என்று கண்டறியப்பட்டது. WA Notify 40-115 உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் அது பயன்பாட்டில் இருந்த முதல் நான்கு மாதங்களில் சுமார் 5,500 COVID-19 வழக்குகளைத் தடுத்தது. WA Notify ஐப் பயன்படுத்தும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் கூட COVID-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளைக் குறைப்பார்கள் என்று தரவு மாதிரிகள் காட்டுகின்றன, இதன் மூலம் COVID-19 பரவுவதைத் தடுக்க WA Notify ஒரு சிறந்த சாதனமாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நான் மாநிலத்திற்கு வெளியே செல்லும்போது WA Notify வேலை செய்யுமா?

ஆம். அதே Google/Apple தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு செயலியுடன் (ஆங்கிலத்தில் மட்டும்) நீங்கள் ஒரு மாகாணத்திற்குச் சென்றால், உங்கள் தொலைபேசி அந்த மாகாணத்தில் உள்ள மற்ற பயனர்களுடன் சீரற்ற குறியீடுகளை பரிமாறிக்கொண்டே இருக்கும். உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அமைப்புகளில் எதையும் மாற்றத் தேவையில்லை. நீங்கள் நீண்ட நாட்களுக்கு வாஷிங்டனை விட்டு வெளியே சென்றால், உங்களின் புதிய மாகாணத்தின் உள்ளூர் ஆதரவு மற்றும் விழிப்பூட்டல்களைப் பெறுவதற்கு உங்கள் விருப்பங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மற்ற பயனர்களுக்கு அறிவிக்க WA Notify செயலிக்கு எவ்வளவு காலம் ஆகும்?

மற்றொரு பயனரால் கோவிட் -19 க்கு ஆளாகியிருக்கும் பயனர்கள் கோவிட்-பாசிட்டிவ் பயனர் WA Notify இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, WA Notify இன் பிற பயனர்களை மறைமுகமாக எச்சரிப்பதற்கு வசதியாக, 24 மணி நேரத்திற்குள் அறிவிப்பைப் பெறுவார்கள்.

இந்த WA Notify செயலியில் இருந்து பல விழிப்பூட்டல்களைப் பெறுவது சாத்தியமா?

பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்தவர்கள் ஒரு பாப்-அப் அறிவிப்பு மற்றும் குறுஞ்செய்தி இரண்டையும் பெறலாம். பலமுறை வெளிப்பட்டிருக்கக்கூடிய பயனர்களுக்கு ஒவ்வொரு புதிய வெளிப்பாடு குறித்தும் அறிவிக்கப்படும்.

நான் கோவிட்டுக்கு நேர்மறை சோதனை செய்தால் WA Notify க்கு எப்படி தெரியப்படுத்துவது?

உங்களுக்குப் பரிசோதனை பாசிட்டிவாக இருந்தால், DOH இலிருந்து ஒருவர் அல்லது உங்களது உள்ளூர் பொதுச் சுகாதார அதிகாரி உங்களைத் தொடர்பு கொண்டு நீங்கள் WA Notify பயன்படுத்துகின்றீர்களா என கேட்பார். நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அவர்கள் உங்களுக்கு ஒரு சரிபார்ப்பு இணைப்பு மற்றும்/அல்லது அறிவிப்பை அனுப்புவார்கள் மற்றும் அதை WA Notify செயலியில் உள்ளிடுவதற்கான படிகளைப் பின்பற்ற உதவுவார்கள். இணைப்பு அல்லது அறிவிப்பு உங்கள் தனிப்பட்ட தகவல்களுடன் இணைக்கப்படவில்லை. DOH சமீபத்தில் COVID-19 பாசிட்டிவ் வந்த நபர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்களுக்கு ஒரு குறுஞ்செய்தி மற்றும்/அல்லது பாப்-அப் அறிவிப்பை அனுப்புகிறது.

நீங்கள் படிகளைப் பின்பற்றும்போது WA Notify வெளிப்பாடு அறிவிப்புகளை யார் பெறுவார்கள் என்பதை DOH அறிந்து கொள்ள முடியாது. வெளிப்பாடு அறிவிப்பில் உங்களைப் பற்றிய வேறு எந்த தகவலும் இருக்காது. மறைமுகமான முறையில் அதிகமான மக்கள் தங்கள் முடிவுகளை WA Notify செயலியில் உறுதி செய்தால், COVID-19 பரவுவதை நம்மால் தடுக்க முடியும்.

உங்களுக்குப் பரிசோதனை பாசிட்டிவாக வந்து, உங்களது பரிசோதனை முடிவை WA Notify இல் அநாமதேயமாக உறுதிப்படுத்த வேண்டுமாயின், சாத்தியமான வெளிப்பாட்டினை மற்ற WA Notify பயனர்களுக்கு அநாமதேயமாக அறிவிப்பதற்கான சரிபார்த்தல் குறியீடொன்றினைக் கோருவதற்குரிய படிமுறைகளுக்கு, இப்பக்கத்தில் “சுய-பரிசோதனை மூலம் நீங்கள் COVID-19 பாசிட்டிவ் எனப் பரிசோதித்தால் மற்றவர்களுக்கு எப்படி அறிவிப்பது”எனும் பிரிவைப் பார்க்கவும்.

எனது தொலைபேசியில் WA Notify ஐச் சேர்த்த பிறகு நான் ஏதாவது செய்ய வேண்டுமா?

கூடுதல் நடவடிக்கை தேவைப்பட்டால் மட்டுமே:

  1. நீங்கள் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்தீர்கள், அல்லது
  2. நீங்கள் வெளிப்பட்டிருக்கலாம் என்று ஒரு அறிவிப்பைப் பெறுவீர்கள்.

உங்களுக்குப் பரிசோதனை பாசிட்டிவாக இருந்தால், DOH இலிருந்து ஒருவர் அல்லது உங்களது உள்ளூர் பொதுச் சுகாதார அதிகாரி உங்களைத் தொடர்பு கொண்டு நீங்கள் WA Notify பயன்படுத்துகின்றீர்களா என கேட்பார். நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அவர்கள் உங்களுக்கு ஒரு சரிபார்ப்பு இணைப்பு மற்றும்/அல்லது அறிவிப்பை அனுப்புவார்கள் மற்றும் அதை WA Notify செயலியில் உள்ளிடுவதற்கான படிகளைப் பின்பற்ற உதவுவார்கள். இணைப்பு அல்லது அறிவிப்பு உங்கள் தனிப்பட்ட தகவல்களுடன் இணைக்கப்படவில்லை. தொற்றுக்கு வெளிப்பட்டது தொடர்பாக செயலி மூலம் அறியப்படுத்தப்படுபவர்கள் பற்றி DOH இனால் எவ்வகையிலும் தெரிந்துகொள்ள முடியாது. வெளிப்பாடு அறிவிப்பில் உங்களைப் பற்றிய வேறு எந்த தகவலும் இருக்காது. மறைமுகமான முறையில் அதிகமான மக்கள் தங்கள் முடிவுகளை WA Notify செயலியில் உறுதி செய்தால், COVID-19 பரவுவதை நம்மால் தடுக்க முடியும்.

உங்களுக்குப் பரிசோதனை பாசிட்டிவாக இருந்தால், சரிபார்த்தல் குறியீடொன்று தேவைப்படுகிறது எனின், சாத்தியமான வெளிப்பாட்டை ஏனைய WA Notify பயனர்களுக்கு அநாமதேயமாக அறிவிப்பதற்கான சரிபார்த்தல் குறியீடொன்றினைக் கோருவதற்குரிய படிமுறைகளுக்கு, “சுய பரிசோதனையின் மூலம் உங்களுக்கு COVID-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்தால், மற்றவர்களுக்கு எப்படி அறிவிப்பது” என்ற இந்த பக்கத்தில் மேலே உள்ள பிரிவைப் பார்க்கவும்.

இந்த WA Notify செயலியைப் பயன்படுத்தினால் எனது பேட்டரி காலியாகிவிடுமா அல்லது அது நிறைய தரவுகளை பயன்படுத்துமா?

இல்லை. இந்த செயலியானது குறைந்த ஆற்றலுள்ள தொழில்நுட்பத்துடன் கூடிய ப்ளூடூத்தைப் பயன்படுத்தி உங்கள் தரவு மற்றும் பேட்டரியின் ஆயுள் மீது குறைவான விளைவை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

WA Notify பேட்டரி சக்தியை அதிகம் பயன்படுத்துவது போல் தோன்றுவது ஏன்?

உண்மையில், அப்படி இல்லை. உங்கள் சாதனத்தில் உள்ள பேட்டரி பயன்பாடு ஒவ்வொரு நாளும் WA Notify போன்ற செயலிகளால் பயன்படுத்தப்படும் பேட்டரியின் சதவீத்தைக் காட்டுகிறது. பெரும்பாலான செயலிகள் மற்றும் கருவிகள் ஒரே இரவில் இயங்காது. WA Notify இரண்டையும் சாராது. ஆனால், இது ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கும் பாதிக்கப்பட்ட நபருடன் பொருந்தக்கொடிய தொடர்பின்றி எடுக்கப்பட்ட குறியீடுகளை சரிபார்த்து சாத்தியமான தொடர்பு நிலைகள் குறித்து உங்களை எச்சரிக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் தூங்கும் போது வேறு செயலிகள் எதுவும் இயங்கவில்லை என்றால், அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பேட்டரியில் அதிக சதவீதத்தை WA Notify குறிக்கும். WA Notify அதிக பேட்டரியைப் பயன்படுத்துகிறது என்று அர்த்தமல்ல - அதிக சதவீதத்தில் குறைந்த அளவு பேட்டரி சக்தியை பயன்படுத்துகிறது.

இந்த WA Notify செயலி இயங்குவதற்கு வசதியாக நான் ப்ளூடூத்தைப் ஆன் செய்து வைத்திருக்க வேண்டுமா?

ஆம். WA Notify செயலியானது புளூடூத்தின் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறது, எனவே அருகிலுள்ள பிற பயனர்களைக் கண்டறிய கணினிக்கு ப்ளூடூத் எப்போதும் செயலில் இருக்க வேண்டும்.

இந்த WA Notify செயலி வேலை செய்வதற்காக நான் எனது தொலைபேசியை திறந்த நிலையில் வைக்க வேண்டுமா?

இல்லை. WA Notify செயலியானது பின்னணியில் வேலை செய்கிறது.

இந்த WA Notify செயலியானது பழைய ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கிறதா?

iPhone இயக்க அமைப்பு பின்வருவனவற்றில் ஒன்றாக இருந்தால் பயனர்கள் WA Notify ஐ பயன்படுத்த முடியும்:

  • iOS பதிப்பு 13.7 அல்லது அதற்குப் பிந்தையவை (iPhone 6s, 6s Plus, SE அல்லது புதியவை)
  • iOS பதிப்பு 12.5 (iPhone 6, 6 plus, 5s -களுக்கானது)

உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் புளூடூத் குறைந்த ஆற்றல் மற்றும் ஆன்ட்ராய்டு பதிப்பு 6 (API 23) அல்லது அதற்கு மேற்பட்டவற்றை ஆதரித்தால் ஆன்ட்ராய்டு பயனர்கள் WA Notify ஐ பயன்படுத்தலாம்.

இந்த WA Notify செயலியைப் பயன்படுத்த எனக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டுமா?

இல்லை. WA Notify செயலியானது உங்கள் வயதை அறியாது அல்லது வயதைச் சரிபார்க்கவும் செய்யாது.

நான் எனது தொலைபேசியை வேறு ஒருவருடன் பகிர்ந்தால் இந்த தொழில்நுட்பம் வேலை செய்யுமா?

WA Notify செயலியானது சாத்தியமான வெளிப்பாட்டின் போது யார் தொலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள் தொலைபேசியைப் பகிர்ந்தால், WA Notify செயலியானது COVID-19 க்கு சாத்தியமான வெளிப்பாட்டைக் காண்பித்தால், தொலைபேசியைப் பயன்படுத்தும் அனைவரும் பொது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

எனக்கு ஒரு அறிவிப்பு மற்றும்/அல்லது ஒரு குறுஞ்செய்தி கிடைத்தது, ஆனால் பரிசோதிக்கப்பட்ட நபர் ஒரு குடும்ப அல்லது வீட்டு உறுப்பினர் ஆவார். நான் என்ன செய்ய வேண்டும்?

பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்த WA Notify பயனர் வெளிப்பட்ட மற்றவர்களை அநாமதேயமாக எச்சரிக்கை செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், எனவே உங்களுக்குப் பொருந்தாத எந்தவிதமான குறுஞ்செய்திகளையும் அல்லது அறிவிப்புகளையும் நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தினர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் WA Notify பயனராக இருந்து அவர்களின் பரிசோதனை முடிவு பாசிட்டிவாக வந்து, இன்னும் அவர் முடிவை WA Notify இல் உறுதிப்படுத்தாமல் இருந்தால், “சுய பரிசோதனையில் COVID-19 பாசிட்டிவ் என்று வந்தால் மற்றவர்களுக்கு எவ்வாறு அறிவிப்பது” பகுதியில் உள்ள படிமுறைகளைப் பின்பற்றலாம்.

WA Notify அறிவிப்பு iPads அல்லது ஸ்மார்ட் வாட்சுகள் போன்ற சாதனங்களில் வேலை செய்கிறதா?

இல்லை. இந்த வெளிப்பாடு அறிவிப்பின் அமைப்பானது குறிப்பாக ஸ்மார்ட்போன்களுக்காக வடிவமைக்கப்பட்டது. மேலும் அது iPads-கள் அல்லது மடிக்கணினிகளை ஆதரிப்பதில்லை.

ஸ்மார்ட்போன்கள் இல்லாத மக்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை அணுக வாஷிங்டன் மாநிலம் என்ன செய்கிறது?

WA Notify செயலி மட்டும் COVID-19 பரவுவதைத் தடுக்க உதவும் கருவி அல்ல. தொடர்பு கண்காணிப்பு மற்றும் பிற முயற்சிகள் ஒவ்வொரு வாஷிங்டன் குடியிருப்பாளருக்கும் பயனளிக்கிறது, அவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லையென்றாலும் கூட. கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கு தடுப்பூசிகள் சிறந்த வழியாகும், மேலும் முகமூடி அணிவது, உடல் ரீதியாக விலகி இருப்பது மற்றும் கூட்டங்களின் அளவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை கோவிட் -19 பரவுவதைத் தடுக்க அனைவரும் உதவக்கூடிய மற்ற வழிகள் ஆகும்.

மத்திய அரசின் Lifeline program (வாழ்நாள் திட்டம்) தகுதி உள்ளவர்களுக்கு மாதாந்திர தொலைபேசி பில் கடனை வழங்குகிறது. பங்கேற்கும் சில வயர்லெஸ் சேவை வழங்குநர்கள் இலவச ஸ்மார்ட்போனையும் வழங்கக்கூடும். விண்ணப்பிக்கும் முறை, பங்கேற்பதற்கான நிரல், யார் தகுதியுடையவர்கள், மற்றும் வயர்லெஸ் வழங்குநர்கள் பற்றி மேலும் அறிக (ஆங்கிலம் மட்டும்).

வாஷிங்டன் மாநிலம் WA Notify செயலியை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட்டது, அப்படி இருக்கும்போது நான் ஏன் அதை Google Play ஸ்டோரில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் மட்டுமே பார்க்கிறேன்?

WA Notify பயனரின் தொலைபேசியில் இயல்புநிலையாக அமைக்கப்பட்ட மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. WA Notify இன் ஒரே ஒரு பதிப்பு மட்டுமே உள்ளது, ஆனால் எந்த பாப்-அப்களும் - ஒரு வெளிப்பாட்டின் அறிவிப்பேயாகும், எடுத்துக்காட்டாக - 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் பயனரின் விருப்பமான மொழியில் தோன்றும்.

அறிவிப்பைத் தட்ட அல்லது சரிபார்ப்பு இணைப்பைச் செயல்படுத்த எனக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது?

WA Notify இல் உள்ள மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு, உங்களுக்கு அறிவிப்பு அல்லது குறுஞ்செய்தி வந்த பிறகு 24 மணிநேரம் உள்ளது. அந்த நேரத்திற்குள் உங்களால் அறிவிப்பைத் தட்ட முடியாவிட்டால் அல்லது உறுதிப்படுத்தல் இணைப்பை கிளிக் செய்ய முடியாவிட்டால், நீங்கள் இந்தப் பக்கத்தில் உள்ள “சுய பரிசோதனையில் COVID-19 பாசிட்டிவ் என்று வந்தால் மற்றவர்களுக்கு எவ்வாறு அறிவிப்பது” படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் WA Notify இல் உறுதிப்படுத்தல் குறியீடு ஒன்றைக் கோர முடியும். DOH இலிருந்து யாரேனும் ஒருவர் அல்லது உள்ளூர் சுகாதார அதிகாரி உங்களது COVID-19 பரிசோதனை முடிவுகள் தொடர்பாக உங்களைத் தொடர்பு கொள்ளும் போதும் நீங்கள் ஓர் சரிபார்ப்பு இணைப்பைக் கோரலாம்.

வாஷிங்டன் மாநிலம் என் இந்த தீர்வைத் தேர்ந்தெடுத்தது?

வாஷிங்டன் மாநிலம் Google/Apple வெளிப்பாடு அறிவிப்பு அமைப்பை மீளாய்வு செய்வதற்காக பாதுகாப்பு மற்றும் சிவில் உரிமை நிபுணர்கள் மற்றும் பல்வேறு சமுதாயங்களின் அங்கத்தினர்கள் உள்ளிட்ட மாகாண மேற்பார்வைக் குழுவொன்றை அமைத்தது. அந்தக் குழு, தளத்தின் நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மை, வலுவான தரவு பாதுகாப்பு மற்றும் பிற மாநிலங்களின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இத்தெரிவைப் பரிந்துரைத்தது.