கோவிட்-19

 

கோவிட்-19 தகவல்களுக்கான ஹாட்லைன்

கோவிட்-19 பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், 1-800-525-0127 என்ற எண்ணிற்கு அழைத்து 7 ஐ அழுத்தவும். அவர்கள் பதிலளிக்கும்போது, ​​விளக்கச் சேவைகளை அணுக உங்கள் மொழியைக் கூறவும். ஹாட்லைன் சேவை திங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும், செவ்வாய் முதல் ஞாயிறு வரை (மற்றும் விடுமுறை நாட்கள்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ளது.

வீட்டிலேயே இருப்பவருக்கு கோவிட்-19 தடுப்பூசி தேவையா?

பதிவு செய்ய மூன்று வழிகள் உள்ளன (ஆங்கிலத்தில்) அல்லது கோவிட்-19 ஹாட்லைனை 1-800-525-0127 என்ற எண்ணிற்கு அழைத்து 7 ஐ அழுத்தவும்.

கொரொனா வைரஸ் (கோவிட்-19) தடுப்பூசி

கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய தற்போதைய மற்றும் விரிவான தகவல்களுக்கு, உங்கள் மொழியில் இந்த இணையப் பக்கத்தைப் பார்வையிடவும்: கோவிட்-19 தடுப்பூசி பற்றிய தகவல்கள்.

கோவிட்-19 இன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்

கோவிட்-19 இன் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

 • காய்ச்சல் அல்லது குளிர், இருமல், மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தசை அல்லது உடல் வலி, தலைவலி, புதிய சுவை அல்லது வாசனை இழப்பு, தொண்டைப் புண், மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல், குமட்டல் அல்லது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு.
 • பின்வரும் கோவிட்-19 அவசரகால எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டால் 911 என்ற எண்ணிற்கு அழைக்கவும்:
  • சுவாசிப்பதில் சிரமம்
  • தொடர்ந்த நெஞ்சு வலி அல்லது அழுத்தம்
  • திடீர் குழப்பம்
  • பதிலளிக்க இயலாமை
  • உதடுகள் அல்லது முகம் ஊதா நிறமாக மாறுதல்
 • யாரெல்லாம் ஆபத்தில் உள்ளனர்?

என்னையும், என் குடும்பத்தையும் நான் எவ்வாறு பாதுகாப்பது?

 • நீங்கள் தகுதி பெறும்போது, தடுப்பூசி செலுத்திக்கொண்டு உங்கள் பூஸ்டரையும் பெறுங்கள்.
 • உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் வீட்டிலேயே இருங்கள்.
 • நீங்கள் நெரிசலாக உள்ள பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசத்தை பயன்படுத்தவும் மற்றும் மற்றவர்களிடமிருந்து ஆறு அடி (இரண்டு மீட்டர்) சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும்.
 • கூட்டமான மற்றும் காற்றோட்டம் இல்லாத இடங்களைத் தவிர்க்கவும்.
 • உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும் அல்லது ஹேண்ட் சானிடைசரைப் பயன்படுத்தவும்.
 • உங்களுக்கு இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது  முழங்கை அல்லது டிஷ்யூ பேப்பரால் மூடிக்கொள்ளவும்
 • உங்கள் முகம், வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடாதீர்கள்.
 • உங்கள் வீட்டுத் தரைகளை சுத்தம் செய்யவும்.
 • உங்களுக்கு கோவிட் -19 நோயின் அறிகுறிகள் இருந்தால், உங்கள் மருத்துவ சேவை வழங்குநரிடம் பேசங்கள். உங்களுக்கு மருத்துவ சேவை வழங்குநர் இல்லையென்றால், உங்களுக்கு அருகிலுள்ள அவசர சிகிச்சை மையம் அல்லது சமூக சுகாதார மையத்தை அணுகவும். உங்களிடம் காப்பீடு இல்லை என்றால் உள்ளூர் சுகாதாரத் துறையை தொடர்பு கொள்ளவும்.
கோவிட்-19 க்கான பரிசோதனை

கோவிட்-19 க்கான பரிசோதனை குறித்த தற்போதைய மற்றும் விரிவான தகவல்களுக்கு, உங்கள் மொழியில் இந்த இணையப் பக்கத்தைப் பார்வையிடவும்: கோவிட்-19 க்கான பரிசோதனைத் தகவல்கள்.

தனிமைப்படுத்துதல் மற்றும் விலகியிருத்தல்

இந்த சொற்களின் பொருள் என்ன, மேலும் எவ்வளவு காலம் விலகியிருப்பது அல்லது தனிமைப்படுத்திக் கொள்வது  என்பது பற்றி மேலும் அறிய, விலகியிருத்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் கால்குலேட்டர் வலைப்பக்கத்தைப் பார்வையிடவும்.

முகக்கவசங்களின் பயன்பாடு

கோவிட்-19 உள்ள ஒருவர் பேசும்போது, இருமும்போது அல்லது தும்மும்போது முகக்கவசங்கள் காற்றில் வைரஸ் துகள்கள் பரவுவதைக் குறைக்கிறது. லேசான அல்லது அறிகுறிகள் இல்லாமல் கோவிட்-19 இருப்பது சாத்தியமாகும். முகக்கவசத்தைப் பயன்படுத்துதல் நம்மை அறியாமல் கோவிட்-19 ஐ மற்றவர்களுக்குப் பரவவிடாமல் தடுக்கிறது. உங்களுக்கு லேசான தொற்றாக இருப்பது, வேறொருவருக்கு ஆபத்தானதாக இருக்கலாம்.

முகக்கவசத்தைப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 • முகக்கவசம் உங்கள் வாய் மற்றும் மூக்கை மறைத்து, உங்கள் முகத்தின் இரு பக்கங்களிலும் பாதுகாப்பாக பொருந்த வேண்டும்.
 • காது வளையங்கள் அல்லது கட்டும் கயிர்களைப் பயன்படுத்தி நீங்கள் முகக்கவத்தை அணியவும் அகற்றவும் வேண்டும் மேலும் முகக்கவசத்தின் முன்புறத்தையோ அல்லது உங்கள் முகத்தையோ தொடக்கூடாது.
 • மருத்துவ அறுவை சிகிச்சை முகக்கவசங்களை அப்புறப்படுத்துங்கள் அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு நாளும் முகக்கவசங்களைச் சலவை செய்து பயன்படுத்துங்கள் மேலும் உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள்.
 • இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு போதும் முகக்கவசங்களை அணியக்கூடாது. 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் முகக்கவசம் அணியும் போது பெரியவர்களின் மேற்பார்வையில் இருக்க வேண்டும்.
 • முகக்கவசங்கள் அணியும் வரிசையில் உடல்நலம் சரியில்லாத சிலருக்கு விதிவிலக்குகள் உள்ளன. உங்களுக்குப் பிரச்சனைகள் இருந்தால், உங்களுக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதைக் கண்டறிய உங்கள் மருத்துவரிடம் கேட்டறியவும்.
கடைகள் மற்றும் பொது இடங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக செல்லுதல்

உங்களுடைய மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் வீட்டை விட்டு புறப்படும் போது, முன்பும் மற்றும் பின்பும் பல விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

புறப்படுவதற்கு முன்பு:

 • முடிந்தால், உங்களுக்கு உடல்நிலை சரியில்லாத பட்சத்தில், கடைக்கோ அல்லது பொது இடத்திற்கோ செல்ல வேண்டாம். உங்களுக்கான பொருட்களை வாங்குவதற்கு குடும்ப உறுப்பினரிடமோ அல்லது நண்பரிடமோ கேட்கவும்.
 • மளிகைப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்வதைக் கருத்தில் கொள்ளவும்.
 • சிறப்பு நேரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் கடைகள் சிறப்பு செயல்படும் நேரத்தை வழங்கக்கூடும். முடிந்தால், கூட்டம் இல்லாத நேரங்களில் கடைக்குச் செல்வதைக் கருத்தில் கொள்ளவும்.
 • உங்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் கைகளை கழுவவும்.

நீங்கள் வெளியே இருக்கும்போது:

 • உங்கள் மூக்கு மற்றும் வாயை மறைக்கும் வகையில் முகக்கவசத்தைப் பயன்படுத்தவும்.
 • பணம் செலுத்தும் வரிசையில் கூட உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே குறைந்தது ஆறு அடி (இரண்டு மீட்டர்) தூரத்தைக் கடைபிடிக்கவும்.
 • நீங்கள் இருமும் போதும், தும்மும் போதும் முகத்தை மூடிக் கொள்ளவும்.
 • உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
 • ஷாப்பிங் செய்தால், வண்டியின் கைப்பிடி அல்லது ஷாப்பிங் கூடையை சுத்தம் செய்ய ஹேண்ட் சானிடைசர் அல்லது கிருமி நாசினி துடைப்பான்களைப் பயன்படுத்தவும்.

நீங்கள் வீட்டிற்கு வந்ததும்:

 • நீங்கள் ஒரு முகக்கவசத்தை அணிந்திருந்தால், அதைத் துவைத்துப் பாதுகாப்பாக சேமித்து வைத்திருப்பதை உறுதிசெய்து கொள்ளவும் அல்லது ஒருமுறை தூக்கி எறியக்கூடிய முகக்கவசமாக இருந்தால் தூக்கி எறியவும்.
 • கைகளை சுத்தம் செய்யவும்
 • உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவும். சாப்பிடக்கூடியப் பொருட்களை கிருமி நீக்கம் செய்ய வேண்டாம் பழங்கள் மற்றும் காய்கறிகளை வழக்கம் போல் கழுவவும்.
 • கோவிட்-19 மளிகை சாமான்கள் வாங்குவதற்கான உதவிக்குறிப்புகள் (ஆங்கிலத்தில்).
தீவிரமான நோய் அபாயத்தில் உள்ளவர்கள்

தீவிரமான நோய் அபாயத்தில் உள்ளவர்கள் இந்த கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்:

 • உங்களுக்கு ஆலோசனைத் தேவைப்படும்போது உங்கள் மருத்துவ சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும். சில சிகிச்சையகங்கள் தொடர்பு கொள்ள "நோயாளி இணையதளங்களைப்" பயன்படுத்துகின்றன, மேலும் பலவற்றில் தொலைபேசி அழைப்புகளுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஊழியர்களும் உள்ளனர். இருப்பினும், அவர்கள் மிகுந்த வேலையில் இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 • உங்களுக்கு வழக்கமாகத் தேவைப்படும் மருந்துகளின் பட்டியலைத் தயாரித்து, உங்கள் மருந்தகம் அல்லது மருத்துவ சேவை வழங்குநரைத் தொடர்புகொண்டு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை கூடுதலாக வழங்க முடியுமா என்பதைக் கண்டறியவும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் மற்ற மருந்துகள் அல்லது சத்து மாத்திரைகளைக் குறித்து வைத்துக்கொண்டு, உங்கள் தற்போதைய நிலையை அறிவுருத்தியப்படி கண்காணிக்கவும்.
 • பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும். நீங்கள் தகுதி பெறும்போது கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பூஸ்டரைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்களுக்கு அருகிலுள்ள கோவிட்-19 தடுப்பூசி வழங்குநர்களைக் கண்டறிய இங்கே கிளிக் செய்யவும்.
 • நீங்கள் விலகியிருக்க வேண்டும் அல்லது தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், போதுமான உணவு மற்றும் தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 • உங்களுக்கு உதவக்கூடிய ஒருவரைக் கண்டறிந்து, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த அவரை உங்களின் தொலைபேசிக்கு அழைக்கச் சொல்லவும். அவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர் உங்களைப் பார்க்கக்கூடாது என்பதை புரிந்துகொள்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 • உங்கள் ஆரோக்கியத்தை கண்காணித்து, தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடவும்.
கர்ப்பகாலம், குழந்தைகள் மற்றும் கோவிட்-19

நீங்கள் தற்போது கர்ப்பமாக இருந்தால் தெரிந்து கொள்ள வேண்டியவை

 • கர்ப்பமாக இல்லாதவர்களுடன் ஒப்பிடும் போது, கர்ப்பமாக இருப்பவர்கள் அல்லது சமீபத்தில் கர்ப்பமானவர்கள் ஆகியோர் கோவிட்-19 இலிருந்து ஏற்படும் தீவிரமான நோய்களுக்கான அதிக அபாயத்தில் உள்ளனர்.
 • கர்ப்ப காலத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறைப்பிரசவம் (குழந்தையை 37 வாரங்களுக்கு முன்பே பிரசவிப்பது) மற்றும் குழந்தை இறந்து பிறத்தல் ஆகியவைகளுக்கு அதிக அபாயத்தில் உள்ளனர், மேலும் மற்ற கர்ப்ப சிக்கல்களுக்கும் அதிக அபாயத்தில் இருக்கக்கூடும்.
 • கர்ப்பமாக இருப்பவர்கள் அல்லது சமீபத்தில் கர்ப்பமானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், கோவிட்-19 நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:
  • தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசிகளை செலுத்திக் கொள்ளவும்.
  • முகக்கவசம் அணியவும்.
  • மற்றவர்களிடமிருந்து 6 அடி (2 மீட்டர்) தூரத்தைக் கடைபிடியுங்கள், மேலும் கூட்டமான மற்றும் காற்றோட்டம் இல்லாத இடங்களைத் தவிர்க்கவும்.
  • மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதற்கு பரிசோதனை செய்து கொள்ளவும்.
  • உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும் மற்றும் உங்கள் இருமல் மற்றும் தும்மல் வரும்போது முழங்கை அல்லது ஒரு டிஷ்யூ பேப்பரால் மூடிக்கொள்ளவும்.
  • உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யவும்.
  • தினமும் உங்கள் உடல்நிலையை கண்காணிக்கவும்
  • உங்கள் கர்ப்பத்தைப் பற்றி ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், உடல்நிலை சரியில்லை என்றால் அல்லது கோவிட்-19 இருக்கலாம் என்று நினைத்தால், உடனடியாக உங்கள் மருத்துவ சேவை வழங்குநருக்கு அழைக்கவும்.

கர்ப்பகாலம் மற்றும் கோவிட்-19 தடுப்பூசி

 • கர்ப்பமாக இருப்பவர்கள், தாய்ப்பால் ஊட்டுபவர்கள்/மார்புப்பால் ஊட்டுபவர்கள், இப்போது கர்ப்பமாக முயற்சிப்பவர்கள் அல்லது எதிர்காலத்தில் கர்ப்பமாகுபவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
 • கர்ப்ப காலத்தில் கோவிட்-19 தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய சான்றுகள் அதிகரித்து வருகின்றன. கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதால் ஏற்படும் நன்மைகள் கர்ப்ப காலத்தில் தடுப்பூசியின் அறியப்பட்ட அல்லது சாத்தியமான அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கிறது.
 • கர்ப்பமாக உள்ளவர்கள், தகுதியுடையவர்களாக இருக்கும்போது, கோவிட்-19 தடுப்பூசி பூஸ்டரை செலுத்திக் கொள்ள வேண்டும்.
 • கோவிட்-19 தடுப்பூசிகள் கர்ப்பமாக இருப்பவர்களுக்கோ அல்லது அவர்களின் குழந்தைகளுக்கோ கோவிட்-19 நோய்த்தொற்றை ஏற்படுத்தாது.
 • கோவிட் -19 தடுப்பூசிகள் உட்பட எந்தவொரு தடுப்பூசிகளும் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ கருவுறுதலில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு தற்போது எவ்வித ஆதாரமும் இல்லை.
 • கர்ப்பிணி மற்றும் கோவிட்-19 தடுப்பூசி பற்றிக் கூடுதல் கேள்விகள் உள்ளதா? உங்கள் மருத்துவ சேவை வழங்குநரிடம் பேசுங்கள் அல்லது MotherToBaby (தாய்முதல்குழந்தைவரை) ஐத் தொடர்புகொள்ளவும், அதன் நிபுணர்கள் தொலைபேசி அல்லது அரட்டை மூலம் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். இலவச ரகசிய சேவை திங்கள்-வெள்ளி, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கிடைக்கும். நேரலையில் ஆலோசிக்க அல்லது மின்னஞ்சல் அனுப்ப MotherToBaby (தாய்முதல்குழந்தைவரை) ஐப் பார்வையிடவும் அல்லது 1-866-626-6847 என்ற எண்ணுக்கு அழைக்கவும் (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷில் மட்டுமே உள்ளது).

உங்களுக்கு கோவிட்-19 இருக்கும் பட்சத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பராமரித்தல்

 • கர்ப்ப காலத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கோவிட்-19 இருப்பதில்லை.
 • கோவிட்-19 க்கான பரிசோதனைக்கு நேர்மறை முடிவு வந்த புதிதாகப் பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் லேசான அல்லது அறிகுறிகள் இல்லாமல் குணமடைந்துள்ளனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சிலர் தீவிரமான கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
 • நீங்கள் கோவிட்-19 நோய்க்காக விலகியிருந்தால் மற்றும் உங்களுக்கு புதிதாக பிறந்த குழந்தை இருந்தால், விலகியிருத்தல் காலம் முடியும் வரை பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்:
  • உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களிடமிருந்து விலகி இருக்க வீட்டிலேயே இருக்கவும்.
  • தொற்று இல்லாத மற்ற வீட்டு உறுப்பினர்களிடமிருந்து விலகியிருக்கவும் (ஒதுங்கி இருக்கவும்) மற்றும் பகிரப்பட்ட இடங்களில் முகக்கவசத்தை அணியவும்.
  • தீவிர நோய்க்கான அதிக அபாயத்தில் இல்லாத, முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆரோக்கியமான பராமரிப்பாளரை உங்களுக்குப் புதிதாகப் பிறந்த குழந்தையைக் கவனிக்க ஏற்பாடு செய்யவும். முடிந்தால், உங்கள் பாலை பம்ப் செய்து கொடுத்து மற்றொரு பராமரிப்பாளரை குழந்தைக்கு உணவளிக்க வைக்கவும் நீங்கள் பால் பவுடர் தருகிறீர்கள் என்றால், ஆரோக்கியமான பராமரிப்பாளரிடம் அதனை தயார் செய்வதற்கு கூறவும்.
  • உங்களின் விலகியிருத்தல் காலம் நிறைவடைவதற்குள், குழந்தைக்கு உணவளிக்கும் போதோ அல்லது உடன் வைத்திருக்கும் போதோ முகக்கவசம் அணிவது உட்பட, புதிதாகப் பிறந்த குழந்தையை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால், பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும்.
  • உங்களின் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கோவிட்-19 அறிகுறிகள் உள்ளதா என கண்காணிக்கவும்.
 • தாய்ப்பாலால் குழந்தைகளுக்கு வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்று தற்போதைய சான்றுகள் தெரிவிக்கின்றன. கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தாய்ப்பாலின் மூலம் தங்கள் குழந்தைக்கு பாதுகாப்பு நோய் எதிர்ப்பொருள்களை கடத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்களுக்கு கோவிட்-19 இருந்து தாய்ப்பால்/மார்புப்பால் கொடுப்பதைத் தேர்வு செய்தால்:
  • தாய்ப்பால்/மார்புப்பால் கொடுக்கும் முன் கைகளைக் கழுவவும்
  • தாய்ப்பால்/மார்புப்பால் கொடுக்கும் போதும், உங்கள் குழந்தையிடமிருந்து 6 அடி (2 மீட்டர்) தூரத்தில் இருக்கும்போதும் முகக்கவசத்தை அணியுங்கள்.

கர்ப்பிணி அல்லது புதிய பெற்றோர்கள் அல்லது அவர்களின் அன்புக்குரியவர்களுக்காகத் தேவைப்படும் மனநலத்திற்கான ஆதரவு மற்றும் தகவல்களுக்காக Parent Support Warm Line (பெற்றோர் ஆதரவு வார்ம் லைன்) உள்ளது. திங்கள்- வெள்ளி, காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை 1-888-404-7763 என்ற எண்ணிற்கு அழைக்கவும் (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மட்டும்). எங்கள் வார்ம் லைன் சமூக சேவகர், உரிமம் பெற்ற சிகிச்சையாளர் அல்லது மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு/பதற்றத்தை அனுபவித்த பெற்றோர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. வேலை நேரங்களுக்குப் பிறகு வரும் அழைப்புகளுக்கு கூடிய விரைவில் பதில் அனுப்பப்படும். warmline@perinatalsupport.org.என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது தொலைபேசியில் அழைக்கவும், குறுஞ்செய்தி அனுப்பவும்.

உங்களையும், உங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளுதல்

Washington Listens (வாஷிங்டன் லிசன்ஸ்): கோவிட்-19 காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றி நீங்கள் யாரிடமாவது பேச வேண்டும் என்றால், 1-833-681-0211 என்ற எண்ணில் Washington Listens ஐ அழைக்கவும். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மற்றும் வார இறுதி நாட்களில் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை எப்போதும் பேச ஒருவர் இருப்பார். TTY மற்றும் மொழி அணுகல் சேவைகள் கிடைக்கும். மன மற்றும் உணர்வுகள் நல்வாழ்வுக்கான கூடுதல் ஆதாரவளங்களையும் நீங்கள் இங்கே (ஆங்கிலத்தில்) காணலாம்.

 • நம்பகமான ஊடகங்கள், பொது மற்றும் உள்ளூர் சுகாதார ஏஜென்சிகளிலிருந்து வரும் தற்போதைய தொற்றுநோயின் நிலைமை, தகவல்களுடன் கூடிய கூடுதல் பரிந்துரைகள் மற்றும் பொது சுகாதார இணையதளங்களில் இருந்து வரும் புதுப்பிப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளவும்.
 • தொலைபேசி எண்கள், இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் போன்ற சமூக ஆதாரவளங்களின் பட்டியலை உருவாக்கவும். பள்ளிகள், மருத்துவர்கள், பொது சுகாதார நிறுவனங்கள், சமூக சேவைகள், மனநலத்திற்கான சமூக மையங்கள் மற்றும் நெருக்கடி நிலைகளுக்கான ஹாட்லைன்களை நீங்கள் சேர்க்கலாம்.
 • தொலைபேசி அல்லது ஆன்லைன் சேவைகள் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும்.
 • அடிப்படை சுகாதாரப் பொருட்களை கையில் வைத்திருக்கவும் (சோப்பு, ஆல்கஹால் உள்ள ஹேண்ட் சானிடைசர், டிஸ்யூ பேப்பர், ஒரு தெர்மோமீட்டர், காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள் மற்றும் கோவிட்-19 ஐ வீட்டிலேயே சோதனை செய்யும் கருவிகள் போன்றவை).
 • நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவறாமல் உட்கொள்ளும் மருந்துகளை இருப்பில் வைத்துக்கொள்ள முயற்சிக்கவும்.

உங்கள் வீட்டில் உள்ள இளம் குடும்ப உறுப்பினர்களுக்கான ஆதரவு

 • தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவதன் மூலம் அவர்களின் ஆதரவையும், தொடர்பையும் பெறுங்கள்.
 • இந்தச் செய்தி அவர்களுக்கு துன்பத்தை உண்டாக்கினால், ஓய்வு எடுக்க மறக்காதீர்கள். உங்கள் பிள்ளைகள் இணையம் அல்லது பிற தகவல் மூலங்களிலிருந்து பெறக்கூடிய தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்கு அவர்களிடம் பேசவும்.
 • கேள்விகளைக் கேட்க ஊக்குவிப்பதன் மூலமும், தற்போதைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ள உதவுவதன் மூலமும் குழந்தைகளை ஆதரிப்பதில் கவனம் செலுத்தவும்.
 • அவர்கள் கொண்டிருக்கும் உணர்வுகளைப் பற்றி பேசுங்கள், அவர்களை மதியுங்கள்.
 • வரைபடங்கள் அல்லது பிற செயல்பாடுகள் மூலம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவவும்.
 • வழக்கமாக அளிக்கும் ஆறுதலையும், பொறுமையையும் விட கொஞ்சம் அதிகம் காட்டவும்.

குடும்பச் செயல்பாடுகள்

உங்கள் குடும்பம் விலகியிருந்தாலும் அல்லது தனிமைப்படுத்தப்பட்டாலும், அது தற்காலிகமானது என்பதை நினைவில் கொள்ளவும்.

படுக்கை நேரம், உணவு மற்றும் உடற்பயிற்சி என்று வரும்போது குடும்பத்தின் நேர அட்டவணை நேரத்தை சீராக வைத்திருங்கள்.

உங்கள் குழந்தைகள் அவர்களது பள்ளிகள் அல்லது பிற நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைதூரக் கல்வி வாய்ப்புகளில் பங்கேற்றால், உங்கள் பிள்ளைகள் சகாக்களுடன் பாதுகாப்பாக பழகுவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள்.

தனிமை, சலிப்பு, நோய் வந்துவிடுமோ என்ற பயம், பதட்டம், துன்பம் மற்றும் பீதி போன்ற உணர்வுகள் ஒரு தொற்றுநோய் போன்ற மன அழுத்த சூழ்நிலைக்குப் பொதுவான எதிர்வினைகள் என்பதை அறிந்து கொள்ளவும்.

உங்கள் குடும்பம் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு ஏற்ப வேடிக்கையான மற்றும் அர்த்தமுள்ள செயல்களைச் செய்ய உங்கள் குடும்பத்திற்கு உதவுங்கள்.

கூடுதல் ஆதாரவளங்கள்