கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவாக வந்தால்

உங்கள் கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவாக வந்தால், உங்களையும் பிறரையும் பாதுகாப்பாக வைக்க நீங்கள் சில வழிகளைப் பின்பற்றலாம் என்பது ஒரு நல்ல செய்தி ஆகும்.

உங்கள் பரிசோதனை பாசிட்டிவாக வந்தால் நீங்கள் செய்யவேண்டியது என்ன

வீட்டிலேயே இருங்கள் மற்றும் பிறரிடம் இருந்து விலகி இருங்கள். Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) மற்றும் Washington State Department of Health (DOH, வாஷிங்டன் மாகாண சுகாதாரத் துறை) ஆகியவற்றின் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான சமீபத்திய வழிகாட்டுதல் (ஆங்கிலத்தில்) பின்பற்றுங்கள் தனித்திருக்கும்பொழுது உங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால், நீங்கள் Care Connect Washington. இடமிருந்து உதவி பெறலாம்.

  • உங்கள் வீட்டிலுள்ள மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். முடியுமென்றால், உங்களுடன் வாழும் பிறரிடமிருந்து விலகி வேறொரு அறையில் தங்கிக்கொள்ளுங்கள் மற்றும் தனி கழிவறையை உபயோகியுங்கள்.

உங்கள் அறிகுறிகளைக் கவனியுங்கள். உங்கள் அறிகுறிகள் மோசமானால் அல்லது நீங்கள் கவலைப்படக்கூடிய புதிய அறிகுறிகள் தோன்றினால் உங்கள் சுகாதார வழங்குநரைத் தொடர்புக்கொள்ளுங்கள். பின்வரும் கோவிட்-19 அவசரகால எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டால் 9–1–1 என்ற எண்ணிற்கு அழைக்கவும்:

  • சுவாசிப்பதில் சிரமம்
  • தொடர்ந்த நெஞ்சு வலி அல்லது அழுத்தம்
  • திடீர் குழப்பம்
  • பதிலளிக்க இயலாமை
  • மேற்பரப்பு தோலின் நிறத்தைப் பொறுத்து, வெளிர், சாம்பல் அல்லது நீல நிறத்தில் தோல் மாறுவது, உதடுகள் அல்லது நகத்தின் சதைப்பகுதிகள் மாறுவது

உங்கள் வீட்டிற்குள் அல்லது வெளியே மற்றவர்களுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்றால் உங்கள் மூக்கு மற்றும் வாயை மூடும் வகையில் முகக்கவசத்தை அணிய வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் மற்றவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும்.

பரவுதலைத் தவிர்க்க பிறருக்கும் தெரிவியுங்கள். உங்கள் நெருங்கிய தொடர்புகளை (ஆங்கிலத்தில்) தொடர்புகொண்டு அவர்களும் கோவிட்-19 தொற்றுக்கு வெளிப்பட்டிருக்கலாம் என்று தெரிவியுங்கள். அறிகுறிகள் தெரியுமுன்னரே பாதிக்கப்பட்ட ஒருவர் கோவிட்-19 தொற்றைப் பரப்பலாம். உங்களின் நெருங்கிய தொடர்புகளுக்கு அறிவிப்பதன் மூலம், அவர்கள் பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளலாம் அல்லது மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்க தேவைப்பட்டால் விலகி இருக்கலாம்.

  • வீட்டில் எடுக்கும் பரிசோதனையை நீங்கள் உபயோகித்திருந்தால், உங்கள் பாசிட்டிவ் ரிசல்ட்டை 1–800–525–0127 என்னும் வாஷிங்டன் கோவிட்-19 ஹாட்லைன் எண்ணில் பதிவு செய்யவும். இது தொடர்பு தடமறிதல் முயற்சிகளுக்கு (ஆங்கிலத்தில்) உதவுகிறது மற்றும் நமது சமூகத்தில் நோய் மேலும் பரவாமல் தடுக்கிறது. ஹாட்லைன் திங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும், செவ்வாய் முதல் ஞாயிறு வரை (மற்றும் விடுமுறை நாட்கள்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கிடைக்கும். மொழி உதவி கிடைக்கிறது.
  • வீட்டில் எடுக்கும் பரிசோதனையை நீங்கள் உபயோகித்திருந்தால், WA Notify (வாஷிங்டன் அறிவி) மூலம் சரிபார்ப்புக் குறியீட்டைக் கோரி தொற்றுக்கு வெளிப்பட்டிருக்கக்கூடிய பிற WA Notify பயனர்களுக்கு உங்கள் அடையாளத்தைத் தெரிவிக்காமல் எச்சரிக்கலாம்

சுகாதார வழங்குநரைத் தொடர்பு கொள்ளலாம் — உங்களுக்கு ஒருவர் இருந்தால் — அல்லது மருத்துவ ஆலோசனைக்கு உள்ளூர் சுகாதார மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் மீண்டு வரும் வேளையில் எப்படி சௌகரியமாக இருப்பது என்று அவர்கள் உங்களுக்கு குறிப்புகள் கொடுக்கலாம். கவனிக்கப்பட வேண்டிய தீவிர உடல்நலமின்மையின் அறிகுறிகளையும் அவர்கள் உங்களுக்குத் தெரிவிப்பார்கள், அதன் மூலம் உங்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்பட்டால் பெறலாம்.

முடிந்தவரை உங்கள் இடத்தைக் காற்றோட்டமாக வையுங்கள். முடிந்தால், ஜன்னல்களைத் திறந்து வைத்து, உங்கள் தெர்மோஸ்டாட்டின் காற்றாடியை உயர் வேகத்தில் ஓடவிட்டு, உங்கள் HVAC வடிகட்டியை மாற்றி அல்லது HEPA காற்று சுத்தம் படுத்தியை உபயோகியுங்கள்.

நீங்கள் கோவிட்-19 இல் இருந்து மீண்டு விட்டீர்கள் மற்றும் உங்கள் தனிமைப்படுத்தும் காலத்தை முடிக்கலாம் என்றாலும் கூட, உங்களையும் பிறரையும் தொடர்ந்து பாதுகாப்பாக வைப்பது முக்கியம் ஆகும். இதை நீங்கள்கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பூஸ்டர் பெறுவது, பொது இடத்தில் முகக்கவசம் அணிவது, பெரும்கூட்டங்களைத் தவிர்ப்பது கைகளைக் கழுவுவது மற்றும் உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் WA Notify இயக்குவது மூலம் செய்யலாம்.