பள்ளிகளில் செய்யப்படும் பரிசோதனை

ஏன் பரிசோதனை செய்யப்படுகிறது?

தடுப்பூசி செலுத்துதல், மாஸ்க் அணிதல் மற்றும் சமூக விலகல் போன்ற பிற பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், பரிசோதனை என்பது ஒரு முக்கியமான மற்றும் நிரூபிக்கப்பட்ட கருவியாகும் இது கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும்.

கூட்டாண்மைகள் பள்ளிகளின் சுமையை எடுத்துக் கொள்கின்றன

தி Washington State Department of Health (வாஷிங்டன் மாநில சுகாதாரத் துறை) கூட்டாளர்களுடன் இணைந்து Learn to Return program (திரும்ப கற்றுக் கொள்ளுங்கள் திட்டம்) மூலம் தனிப்பட்ட முறையில் கற்பதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க உதவுகிறது. Learn to Return (ஆங்கிலம் மட்டும்) திட்டமானது இருக்கும் இடத்திலேய மாணவர்களுக்கு எளிதாக கோவிட்-19 பரிசோதனையை வழங்க பள்ளிகளுக்கு உதவுகிறது.

DOH ஆனது Washington Office of the Superintendent of Public Instruction (OSPI, வாஷிங்டன் பொதுக் கண்காணிப்பாளர் அலுவலகம்) மற்றும் இலாப நோக்கமற்ற Health Commons Project உடன் இணைந்து, மாநிலம் முழுவதும் பரவியுள்ள தனியார் பள்ளிகள், பட்டயப் பள்ளிகள் மற்றும் பழங்குடி பள்ளிகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாவட்டங்களில் உள்ள மாணவர்களை Learn to Return திட்டத்தில் இணைத்துள்ளன.

பள்ளிகளுக்கு

Learn to Return:

மேலும் அறிந்து கொள்வதற்கு, பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் Learn to Returnபள்ளி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் பக்கம் (ஆங்கிலம் மட்டும்) பார்க்கவும்.

Get your school district started with enrollment (உங்கள் பள்ளி மாவட்டம் சேர்க்கையை ஆரம்பிக்கவும்) (English only)

திட்டத்தை அனைத்து நிலைகளிலும் அணுகுவது பள்ளியின் பரிசோதனையை வெற்றியடையச் செய்யும் திறவுகோலாகும். எளிமையாக பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கு, கூட்டரசின் Public Readiness and Emergency Preparedness Act (பொது தயார்நிலை மற்றும் அவசரகால தயார்நிலை சட்டம்) (PREP சட்டம் - ஆங்கிலம் மட்டும்) சுகாதாரப் பாதுகாப்பு உரிமங்கள் போன்ற ஒழுங்குமுறை தடைகள் இல்லாமல் பரிசோதனை செய்ய பள்ளிகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இதைத் தவிர, PREP வழக்கு மற்றும் பொறுப்பிலிருந்து பரவலான நோயெதிர்ப்பு பாதுகாப்பு மூலம் இந்தச் சட்டம் பள்ளிகளை சட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.

பெற்றோர்/பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு

Learn to Return:

  • குடும்பங்களுக்கு செலவில்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது
  • தன்னார்வமானது
  • பள்ளியில் உங்கள் குழந்தையைப் பாதுகாக்க உதவுகிறது
  • பள்ளிக்குச் சென்று நேரிடையாக கற்பதற்கு உதவுகிறது
  • விளையாட்டு மற்றும் பிறதுறைச் செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கேற்க அனுமதிக்கிறது
  • உங்கள் குழந்தையின் அடையாளத்தை தனிப்பட்டதாக வைத்திருக்கிறது
  • உங்கள் குழந்தையின் நலனை மனதில் கொண்டு எளிதான, மேலோட்டமான ஸ்வாப் சோதனைகளைப் பயன்படுத்துகிறது

மேலும் அறிந்து கொள்ள, பெற்றொர்களும் மாணவர்களும் Learn to Return பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பக்கத்தைப் பார்க்கவும் (ஆங்கிலம் மட்டும்).

தி Washington State Department of Health செய்தி அறையிலிருந்து (ஆங்கிலம் மட்டும்)