கோவிட்-19 சிகிச்சைகள்

கோவிட்-19 பரிசோதனையில் பாசிட்டிவாக இருப்பவர்கள் மற்றும் தீவிர பாதிப்புக்கான அதிக ஆபத்தில் இருப்பவர்கள் கிடைக்கின்ற கோவிட்-19 சிகிச்சைமுறைகள் (மருந்துகள்) மூலம் நன்மையடையலாம். இந்தச் சிகிச்சை முறைகள் கோவிட்-19 காரணமாக ஏற்படும் தீவிர நோய்வாய்ப்படுதல், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பைத் தடுத் தல் ஆகியவற்றிற்கு உதவலாம். நீங்கள் பரிசோதனையில் பாசிட்டிவ் என அறியப்பட்டால் மற்றும் அதிக ஆபத்தில் இருந்தால், உடனடியாக உங்கள் சுகாதார வழங்குநரிடம் பேசுங்கள் ஏனென்றால் சிகிச்சைகள் சிறப்பாக வேலை செய்ய சீக்கிரம் ஆரம்பிக்கப்பட வேண்டும். உங்களுக்கு எந்த கோவிட்-19 மருந்து சிறந்தது என்பதைத் தீர்மானிக்க உங்கள் சுகாதார வழங்குநர் உதவுவார்.

கோவிட்-19 சிகிச்சைகள் / மருந்துகள் நோய்த்தடுப்பிற்குப் பொருத்தமானவை அல்ல. தகுதிபெறும் யாவரும் கோவிட்-19 இன் பரவலைத் தடுக்க தடுப்பூசி மற்றும் மற்ற வழிகளைக் கடைபிடித்தல் பரிந்துரைக்கப்படுகிறது.

மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை என்றால் என்ன?

கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸ் போல, வைரஸ்களை எதிர்த்துப்போராட மனிதர்களின் உடல் உருவாக்கும் புரதங்களே ஆன்டிபாடிகள் எனப்படும். ஆய்வகங்களில் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகளும் பெரும்பாலும் இயற்கையான ஆன்டிபாடிகள் போலவே செயல்பட்டு உங்கள் உடலில் இருக்கும் வைரஸின் அளவைக் கட்டுப்படுத்தும். அவை மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் என்றழைக்கப்படுகின்றன. நீங்கள் தீவிர கோவிட்-19 பாதிப்பைப் பெரும் அபாயத்தில் இருந்து கோவிட்-19 பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு பெற்றிருந்தால் அல்லது பாசிட்டிவ் முடிவைப் பெற்ற ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால், நீங்கள் மோனோக்ளோனல் (mAb) சிகிச்சையைப் பெறுவதைக் கருத்தில் கொள்ளவேண்டும். உங்கள் வயது, மருத்துவ வரலாறு மற்றும் எவ்வளவு நாட்களாக அறிகுறிகள் உள்ளன என்பதைப் பொறுத்து கோவிட்-19 க்கான சிகிச்சையாக mAb சிகிச்சையைப் (bebtelovimab) பெற நீங்கள் தகுதிபெறலாம்.

கோவிட்-19 நோய்க்கான முன்-வெளிப்பாடு நோய்த்தடுப்பு என்றால் என்ன?

மனித செல்களுக்குள் ஒரு வைரஸ் நுழைவது மற்றும் ஒட்டிக்கொள்வதைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட முன்-வெளிப்பாடு நோய்த்தடுப்பு (PrEP) மருந்து ஆகும். தற்போது கிடைக்கும் மற்ற மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளைப் போலில்லாமல், Evusheld  நீடித்து நிலைக்கும் ஒரு ஆன்டிபாடியாகும், இது கோவிட்-19 க்கு ஒருவர் வெளிப்படும் முன்பு அவரைப் பாதுகாக்க அல்லது நோயைத் தடுக்க மட்டும் உபயோகிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 காரணமாக ஏற்படும் அறிகுறிகளுக்குச் சிகிச்சையளிக்க மற்றும் கோவிட்-19 கொண்ட ஒருவருடன் வெளிப்பட்டவுடன் Evusheld  கொடுக்கப்படுவது இல்லை; இது வெளிப்படுவதற்கு முன்பு நோய்த்தொற்றைத் தடுக்க கொடுக்கப்படுகிறது.

வாய்வழி ஆன்டிவைரல்கள் என்றால் என்ன?

வாய்வழி ஆன்டிவைரல் சிகிச்சையானது உங்கள் உடலில் SARS-CoV-2 வைரஸ் (கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) இனப்பெருக்கம் செய்வதை நிறுத்தி, உங்கள் உடலில் இருக்கும் வைரஸின் அளவைக் குறைத்து அல்லது உங்கள் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவி புரிந்து கோவிட்-19 க்கு எதிராக உங்கள் உடல் போராடுவதற்கு உதவும். சிகிச்சை பெறுவதன் மூலம், நீங்கள் தீவிரம் குறைந்த அறிகுறிகளைப் பெறலாம் மற்றும் உங்கள் நோய் தீவிரமடைவதைத் தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையைத் தடுக்கலாம். மருத்துவமனையில் அல்லாத, ஐந்து அல்லது அதற்கும் குறைவான நாட்கள் அறிகுறிகள் கொண்ட மற்றும் தீவிர நோய்வாய்ப்படும் அபாயம் உள்ள லேசான முதல் மிதமான அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு கோவிட்-19 க்கான ஆன்டிவைரல் சிகிச்சைமுறைகள் கிடைக்கின்றன.

சிரைவழி (IV) ஆன்டிவைரல்கள் என்றால் என்ன?

Remdesivir என்பது Food and Drug Administration (FDA, உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) அங்கீகரித்த மற்றும் தற்போது Washington State Department of (WADOH, வாஷிங்டன் மாநில சுகாதாரத் துறை) விநியோகிக்காத ஒரு நிறுவப்பட்ட ஆன்டிவைரல் மருந்து ஆகும். வைரஸ் தன்னைத் தானே பிரதியெடுப்பதை (நகலெடுப்பது) தடுப்பது மூலம் இது வேலை செய்கிறது. நரம்பில் (சிரைவழியாக) ஒரு ஊசி மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு Remdesivir கொடுக்கப்படுகிறது, இதன் பெயர் IV உட்செலுத்துதல் ஆகும்.

தீவிர கோவிட் - 19 பாதிப்பைப் பெரும் அதிக ஆபத்தில் இருக்கும் மருத்துவமனையில் இல்லாத வயது வந்தவர்கள் மற்றும் குழந்தைகளின் சிகிச்சைக்கு Remdesivir அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25, 2022 அன்று, இந்த அங்கீகாரத்தை தீவிர நோய்பாதிப்பு ஏற்படும் ஆபத்துடைய குறைந்தது 28 நாட்கள் வயதான, குறைந்தது 3 கிலோ (6.6 பவுண்டுகள்) எடைகொண்ட குழந்தைகளுக்கும் FDA நீடித்தது. இதன் மூலம் 12 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கான முதல் FDA அங்கீகரித்த சிகிச்சையாக Remdesivir ஆனது.

அறிகுறிகள் ஆரம்பித்த ஏழு நாட்களுக்குள் மிகவும் விரைவாகவே Remdesivir ஆரம்பிக்கப்பட வேண்டும், அதனால் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் அறிகுறிகளைப் பெற்றால் மற்றும் கோவிட்-19 பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்தால் உடனடியாக தங்கள் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரைத் தொடர்பு கொள்ளுதல் முக்கியமானது. இந்தச் சிகிச்சை மூன்று IV உட்செலுத்தல்கள் கொண்ட தொடர்சிகிச்சையாக, நாள் ஒன்றிக்கு ஒருமுறை எனத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.

அனைத்து சுகாதாரப் பராமரிப்பு இடங்களிலும் புறநோயாளிகளுக்கு Remdesivir சிகிச்சையை வழங்க முடியாது - இது சாத்தியமான சிகிச்சை முறையா என்பதை அறிய நோயாளிகள் தங்கள் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரிடம் பேச வேண்டும்.

கோவிட்-19 காரணமாக தீவிர நோய்ப்பாதிப்புடன் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும் Remdesivir உபயோகிக்கப்படுகிறது. கோவிட்-19 காரணமாக நீங்கள் மருத்துவமனையில் இருந்தால், Remdesivir அல்லது பிற சிகிச்சைகள் தேவையா என்று உங்கள் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர் முடிவு செய்வார்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கோவிட்-19 உள்ளவர்களுக்கு mAB எவ்வாறு உதவும்?

அமெரிக்க Food and Drug Administration (FDA, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) அங்கீகரித்த அவசரகால உபயோகத்திற்காக mAb சிகிச்சைகள் அதிக ஆபத்தில் (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மட்டும்) உள்ள நபர்களுக்கு பின்வரும் வகையில் உதவும்:

  • மருத்துவமனையில் தங்கநேரிடுதலைக் குறைக்கும்.
  • கோவிட்-19 இலிருந்து விரைவாக மீளலாம்
mAb சிகிச்சையை யார் பெற முடியும்?

mAbs பின்வருபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது:

  • கோவிட்-19 பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு பெற்றவர்கள்
  • 10 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக நோயின் லேசான முதல் மிதமான அறிகுறிகளைப் பெற்றவர்கள்
  • தீவிரமான நோய்பாதிப்பு பெரும் அபாயம் அதிகம் உள்ளவர்கள்
மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை பெற்றபிறகு நான் கோவிட் தடுப்பூசி பெறலாமா?

கோவிட்-19 தொற்று ஏற்பட்டபிறகு நீங்கள் பேசிவ் ஆன்டிபாடி சிகிச்சை (மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை அல்லது குணமடையும் பிளாஸ்மா) பெற்றிருந்தால், சிகிச்சையை முடித்தபிறகு எந்த நேரத்திலும் கோவிட்-19 தடுப்பூசி பெறலாம். பேசிவ் ஆன்டிபாடி சிகிச்சைக்குப் பிறகு இனிமேல் 90 நாட்களுக்கு காத்திருக்கத் தேவையில்லை.

பேசிவ் ஆன்டிபாடி சிகிச்சைக்கானத் தகுதிகள் தொடர்பான கேள்விகளுக்கு, உங்கள் வழங்குநரிடம் கலந்தாலோசியுங்கள்.

நான் மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை பெற்றேன் என்பதை எவ்வாறு காண்பிப்பது?

mAb சிகிச்சையை உங்களுக்கு வழங்கிய மருத்துவ வழங்குநர் நீங்கள் சிகிச்சை பெற்றதைச் சுட்டிக்காட்டும் ஆவணத்தை வழங்குவார்.

வாய்வழி ஆன்டிவைரல்களைப் பெற தகுதியுள்ளவர்கள் யார்?

Paxlovid: மருத்துவனையில் தங்க நேரிடுதல் அல்லது இறப்பு போன்ற தீவிர கோவிட்-19 பாதிப்பிற்குச் செல்லக்கூடிய அதிக அபாயத்தில் இருக்கும் வயது வந்தவர்கள் மற்றும் குழந்தை நோயாளிகள் (குறைந்தது 88 பவுண்டுகள்/40 கிலோ எடை கொண்ட 12 வயது அல்லது அதிகமானவர்கள்).

Molnupiravir: மருத்துவமனையில் தங்குதல் அல்லது இறப்பு போன்ற தீவிர கோவிட்-19 நிலைக்குச் செல்ல அதிக ஆபத்தில் உள்ள வயது வந்தவர்கள் மற்றும் Food and Drug Administration (FDA, உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) அங்கீகரித்த அல்லது மருத்துவரீதியாக முறையான வேறு கோவிட்-19 சிகிச்சை முறைகள் கிடைக்கப்பெறாதவர்கள்.

Medicaid/Children's Health Insurance Program (CHIP) இல் சிகிச்சை உள்ளடங்குகிறதா?

ஆம். Medicaid/Children's Health Insurance Program (CHIP, குழந்தைகள் நலக் காப்பீட்டுத் திட்டம்) mAb சிகிச்சைகளுக்கான நிர்வாகக் கட்டணத்தை உள்ளடக்குகிறது. நிர்வாகக் கட்டணம் என்பது உங்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர் வசூலிக்கும் கட்டணமாகும். பெரும்பாலான mAbகளுக்கு, தயாரிப்பின் விலை மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நான் காப்பீடு பெறவில்லை என்றாலும் கூட கோவிட்-19 க்கு சிகிச்சை பெற முடியுமா?

மத்திய அரசால் வாங்கப்படும் கோவிட்-19 சிகிச்சைமுறைகள் எந்த செலவும் இல்லாமல் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இருந்தாலும், விநியோகித்தல், சிகிச்சை மற்றும் நிர்வகித்தல் கட்டணங்களை வழங்குநர்கள் பெறலாம், அது காப்பீடு, நோயாளிகள் அல்லது மத்திய அரசு திட்டங்களால் ஏற்றுக்கொள்ளப்படும். சிகிச்சைமுறையைத் தேடும் பொழுது எந்த வகையான கவரேஜ் இருக்கிறது என்பதை அறிய உங்கள் வழங்குநரைக் கலந்தாலோசிக்கவும்.

ஆவணப்படுத்தாத நபர்களும் கோவிட்-19 சிகிச்சை பெற முடியுமா?

ஆவணப்படுத்தாத நபர்கள் Alien Emergency Medical Program (அந்நிய அவசரகால மருத்துவ திட்டம்(AEM)) மூலம் இவற்றுக்கு கவரேஜ் பெறலாம்:

  • கோவிட்-19 மதிப்பீடு மற்றும் சிகிச்சையை உள்ளடக்கும் தகுதிபெற்ற அவசரநிலைகள். 
  • அலுவலகம், மருத்துவமனை அல்லது டெலிஹெல்த்தை உள்ளடக்கும் பரிசோதனை மற்றும் சிகிச்சை அமைப்புகள்.
  • அங்கீகரிக்கப்பட்ட சேவைகள். கோவிட்-19 பரிசோதனையில் பாசிட்டிவ் பெற்றவர்களின் மருந்துகள் மற்றும் மூச்சுக்குழாய் சேவைகள் உள்ளடங்கலாம். பாசிட்டிவ் கோவிட்-19 முடிவுகள் பெற சாத்தியமுள்ளவர்களின் பின்தொடர் வருகைகள் மற்றும் மருந்துகள் உள்ளடங்கலாம்.

AEM க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

19 முதல் 64 வயதுடையோர்:

65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர், கண்பார்வையற்றோர், ஊனமுற்றவர்கள் அல்லது நீண்ட கால சேவை தேவைப்படுபவர்கள்:

  • ஆன்லைன்: Washington Connection (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மட்டும்)
  • தொலைபேசி: 1-877-501-2233

கோவிட்-19 க்கு சிகிச்சை பெறவும்

Test to Treat (சிகிச்சைக்கான பரிசோதனை) திட்டத்தின் மூலம் உயிர்காக்கும் கோவிட்-19 சிகிச்சைகளை விரைவாகவும், எளிதாகவும் அணுக முடியும். உங்களுக்குப் பரிசோதனை பாசிட்டிவ் என்று அறியப்பட்டால், சுகாதார சேவை வழங்குநரை சந்திக்கலாம் (தளத்தில் அல்லது டெலிஹெல்த் மூலம்), மேலும் தகுதிபெற்றிருந்தால் வாய்வழி ஆன்டிவைரல் சிகிச்சைக்கானமருந்துச் சீட்டைப் பெற்று, அந்த மருந்துச் சீட்டில் இருப்பதை வாங்கிக் கொள்ளலாம்- அனைத்தும் ஒரே இடத்தில்.

ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் 150 க்கும் அதிகமான பிற மொழிகளில் உதவி பெற Test to Treat இருப்பிடங்காட்டி க்குச் செல்லவும் அல்லது 1-800-232-0233 (TTY 1-888-720-7489) என்ற எண்களுக்கு அழைக்கவும். கால் சென்டர் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை, வாரத்தின் 7 நாட்களும் திறந்திருக்கும், மேலும் உங்களுக்கு அருகில் உள்ள இடத்தைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவுவோம்.

காப்பீடு பெறாத நபர்களுக்கான ஆதாரவளங்கள்

கோவிட்-19 சிகிச்சை அல்லது பிற சுகாதார கவரேஜ் தேவைப்படும் காப்பீடு பெறாத நபர்கள் இவற்றை அணுகலாம்:

கீழ்கண்ட மத்திய அரசால் தகுதி பெற்ற சுகாதார மையங்களின் (Federally Qualified Health Centers (FQHC)) பகுதியான பல மருத்துவமனைகளிலும் காப்பீடு பெறாத நபர்கள் சேவைகளைப் பெறலாம்: 

மருந்து பெறுவதற்கான ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க உதவி தேவையா? Test to Treat (ஆங்கிலத்தில் மட்டும்) இடத்தைக் கண்டுபிடிக்க 1-800-232-0233 (TTY 888-720-7489) என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

கூடுதல் ஆதாரவளங்கள்

கூடுதல் கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசின் கோவிட்-19 ஹாட்லைன் இருக்கிறது. ஹாட்லைன் தகவல்கள் எங்களைத் தொடர்புகொள்க பக்கத்தில் உள்ளது.

கோவிட்-19 சிகிச்சைமுறைகள் பற்றி மேலும் அறிய, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (Centers for Disease Control and Prevention (CDC)) கோவிட்-19 மருத்துவ சிகிச்சை முறைகள் பக்கத்திற்குச் செல்லவும்.