பக்கவாதமும் மாரடைப்பும் எப்போதுமே அவசர சிகிச்சை தேவைப்படும் நிலைமைகளாகும். ஆனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பின் அறிகுறிகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
அறிவே ஆற்றல் ஆகும். நோயின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஒரு உயிரைக் காப்பாற்றலாம். அவை நிகழும்போது அவற்றை அடையாளம் கண்டு, உதவிக்கு 911 தொலைபேசி எண்ணைஅழைக்கலாம்.
பக்கவாதம்
- உடலின் ஒரு பக்கத்தில், முகம், கை அல்லது காலில் ஏற்படும் திடீர் உணர்வின்மை அல்லது பலவீனம் ஆகும்
- திடீர் என்று ஏற்படும் குழப்பம் அல்லது மற்றவர் பேச்சைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் சிரமம்
- ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்ப்பதில் ஏற்படும் திடீர் சிரமம்
- நடைபயிற்சியில் ஏற்படும் திடீர் சிரமம், தலைசுற்றல், அல்லது சமநிலை இழப்பு அல்லது ஒருங்கிணைப்பில் ஏற்படும் சிரமம்
- தெரிந்த காரணம் எதுவுமின்றி திடீரென ஏற்படும் கடுமையான தலைவலி
மாரடைப்பு
- மார்பு வலி அல்லது அசெளகரியம
- லேசான தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி
- தாடை, கழுத்து அல்லது முதுகு வலி
- கை அல்லது தோளில் அசெளகரியம் அல்லது வலி
- மூச்சு விடுவதில் சிரமம்
ஒருவருக்கு பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கும்போது, எதற்காகவும் காத்திருக்க வேண்டாம். உடனடியாக 911 தொலைபேசி எண்ணை அழைக்கவும். பக்கவாதம் மற்றும் மாரடைப்பின் அறிகுறிகளைக்கண்டறிந்து நோயாளியை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அவசர மருத்துவ சேவை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவ அவசர நிலைகள் குணப்படுத்தக்கூடியவை மற்றும் எந்தளவுக்கு நோயாளிக்கு விரைவாக சிகிச்சை அளிக்கப்படுகிறதோ, அந்தளவுக்கு அவர் வீடு திரும்புவதற்கும் மற்றும் தனது வழக்கமான பணிகளை செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும்.