பல வணிக நிறுவனங்கள், நிகழ்வுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கி உள்ளனர். பின்வரும்சான்றுகளின் வகைகள் வாஷிங்டனில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. சில இடங்களில் கீழே உள்ள இந்தப் பட்டியலிலிருந்து ஒரு குறிப்பிட்ட வகை சான்றுகளை மட்டுமே ஏற்கலாம்.
CDC கோவிட்-19 தடுப்பூசி பதிவு அட்டை
மொபைல் சாதனத்தில் உள்ள அசல், பிரதிகள் அல்லது புகைப்படங்கள் ஏற்கத்தக்கவை.

கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் அல்லது QR குறியீடுகள்

மாதிரி C:
அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர் மொபைல் செயலியில் காண்பிக்கும் QR குறியீடு. (செயலிகள் மாறுபடலாம்)
WA (வாஷிங்டன்) மாநில நோய்த்தடுப்பு தகவல் அமைப்பு அச்சுப்படி
- Certificate of Immunization Status (CIS, நோய்த்தடுப்பு நிலை சான்றிதழ்) Washington State Immunization Information System மூலம் அச்சிடப்பட்ட படிவங்கள்.
- மருத்துவ வழங்குநர் கையொப்பமிடாத கையால் எழுதப்பட்ட உள்ளீடுகள் செல்லுபடியாகாது.

கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு அதிகாரப்பூர்வ பதிவாக வேறு என்ன இருக்கிறது?
- மருத்துவ வழங்குநரிடமிருந்து சரிபார்க்கப்பட்ட மின்னணு மருத்துவ பதிவு அச்சுப்படி