தனிமைப்படுத்தல் மற்றும் விலகியிருத்தல் கால்குலேட்டர்

கோவிட்-19 க்கான தனிமைப்படுத்தல் மற்றும் விலகியிருத்தல் :: Washington State Department of Health (ஆங்கிலத்தில் மட்டும்)

உங்கள் தனிமைப்படுத்தல் அல்லது விலகியிருத்தல் காலத்தை எவ்வாறு கணக்கிடுவது என்பதைக் கீழே பார்க்கவும். விலகியிருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, உங்களுக்கு கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்தால் என்ன செய்வது (PDF). என்ற இணைப்பைப் பார்க்கவும். நீங்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால் என்ன செய்வது என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, கோவிட்-19 உள்ள ஒருவரிடமிருந்து உங்களுக்கு தொற்று வெளிப்படும் சாத்தியமிருந்தால் என்ன செய்வது (PDF)என்ற இணைப்பைப் பார்க்கவும்.

நீங்கள் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவராக இருந்தாலோ அல்லது கோவிட்-19 நோயால் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும் பட்சத்தில், இந்த கால்குலேட்டர்கள் உங்கள் சூழ்நிலைக்குப் பொருந்தாது கூடுதல் தகவல்களுக்கு, உங்களுக்கு கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்தால் என்ன செய்வது (PDF) என்ற இணைப்பைப் பார்க்கவும்.

நீங்கள் அதிக-அபாயமுள்ள இடத்தில் தங்கியிருத்தல் அல்லது பணிபுரியும் பட்சத்தில், இந்த கால்குலேட்டர்கள் உங்கள் சூழ்நிலைக்குப் பொருந்தாமல் இருக்கலாம். அதிக-அபாயமுள்ள இடங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: சுகாதார பராமரிப்பு வசதிகள், சீர்திருத்த வசதிகள், தடுப்புக்காவல் வசதிகள், வீடற்றவர்கள் தங்குமிடங்கள், தற்காலிக வீடுகள், வணிக கடல்சார் அமைப்புகள் (எ.கா., வணிக கடல் உணவுக் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள், உல்லாசக் கப்பல்கள்), வேலையின் தன்மை காரணமாக, தனி மனித இடைவெளி சாத்தியமில்லாத தற்காலிக பணியாளர் வீடுகள் அல்லது நெரிசலான பணியிடங்கள் (எ.கா.,கிடங்குகள், தொழிற்சாலைகள் மற்றும் உணவு பேக்கேஜிங் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் இடங்கள்). விலகியிருத்தல் காலம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு உங்களுக்கு கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்தால் என்ன செய்வது (PDF) மற்றும் தனிமைப்படுத்தல் காலம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு கோவிட்-19 உள்ள ஒருவரிடமிருந்து உங்களுக்கு தொற்று வெளிப்படும் சாத்தியமிருந்தால் என்ன செய்வது (PDF) என்ற இணைப்பைப் பார்க்கவும்.

பரிசோதனை எனக்குப் பாசிட்டிவாக வந்துள்ளது மேலும் அதற்கான அறிகுறிகளும் இருந்தன அல்லது இருக்கிறது: எனது விலகியிருக்கும் காலத்தை கணக்கிடு

5 நாட்கள் விலகியிருத்தல்

பின்வரும் சூழ்நிலைகளில் 5 நாட்கள் விலகியிருத்தல் காலம் பொருத்தமானது:

  • உங்கள் அறிகுறிகள் மேம்பட்டு இருக்கின்றன மற்றும்
  • உங்களுக்கு கடைசியாக காய்ச்சல் ஏற்பட்டு, காய்ச்சலைக் குறைக்கும் மருந்தைப் பயன்படுத்தி 24 மணி நேரம் கடந்திருக்கிறது மற்றும்
  • உங்களால் நன்கு-பொருந்தும் முகக்கவசங்களை பொது இடங்களிலும், வீட்டிலும் மற்றவர்களுடன் இருக்கும் போது அணிய முடியும்.

இந்த நிபந்தனைகள் பொருந்தும் பட்சத்தில், உங்கள் தனிமைப்படுத்தலின் முழுமையான கடைசி நாள்
உங்கள் தனிமைப்படுத்துதல் முடிவடையும் நாள்:

இன்னும் 5 நாட்களுக்கு ( வரை) மற்றவர்களுடன் இருக்கும்போது முகக்கவசம் அணிவதை உறுதி செய்து கொள்ளுங்கள் மேலும் நீங்கள் முகக்கவசம் அணிய முடியாத செயல்பாடுகளைத் தவிர்க்கவும். வரை அதிக அபாயத்தில் உள்ள நபர்களுடன் இருப்பதைத் தவிர்க்கவும். பயணம் பற்றிய தகவல்களுக்கு பயணம் | CDC (ஆங்கிலத்தில் மட்டும்) ஐப் பார்க்கவும்.

உங்களுக்கு ஆன்டிஜென் பரிசோதனைக்கான அணுகல் இருக்கும்பட்சத்தில், விலகியிருக்கும் 5 ஆம் நாள் ஒரு பரிசோதனையை செய்து கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் தொற்றும் அபாயத்தை நீங்கள் மேலும் குறைக்கலாம். உங்கள் பரிசோதனை நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில், 5 வது நாளுக்குப் பிறகு நீங்கள் விலகியிருத்தலை நிறைவு செய்யலாம், ஆனால் 5 நாட்களுக்கு ( வரை) மற்றவர்களுடன் இருக்கும்போது முகக்கவசம் அணிவதைத் தொடரவும். உங்கள் பரிசோதனையின் முடிவு பாசிட்டிவாக இருந்தால், நீங்கள் வரை தனிமைப்படுத்தப்படுத்தலைத் தொடர வேண்டும்.

10 நாட்கள் விலகியிருத்தல்

மேலே உள்ள நிபந்தனைகள் உங்களுக்கு பொருந்தவில்லை என்றால், நீங்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

நீங்கள் 10 நாட்கள் விலகியிருந்தால், உங்கள் விலகியிருத்தலின் முழுமையான கடைசி நாள்:
உங்கள் விலகியிருத்தல் முடிவடையும் நாள்:

அன்று உங்கள் அறிகுறிகள் மேம்படவில்லை அல்லது காய்ச்சல் (அல்லது காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள் தேவை) தொடர்ந்து இருக்கும் பட்சத்தில், காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தாமல், 24 மணிநேரம் உங்களுக்கு காய்ச்சல் வராமல், அறிகுறிகள் மேம்படும் வரை உங்கள் விலகியிருத்ததலை நிறைவுசெய்ய காத்திருக்கவும்.

எனக்கு பரிசோதனை பாசிட்டிவாக வந்துள்ளது, ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லை: எனது விலகியிருத்தல் காலத்தைக் கணக்கிடு.

5 நாட்கள் விலகியிருத்தல்

பின்வரும் சூழ்நிலைகளில் 5 நாட்கள் விலகியிருத்தல் காலம் பொருத்தமானது:

  • உங்களால் நன்கு-பொருந்தும் முகக்கவசங்களை பொது இடங்களிலும், வீட்டிலும் மற்றவர்களுடன் இருக்கும் போது அணிய முடியும்.

உங்களுக்கு ஒருபோதும் அறிகுறிகள் இல்லை மேலும் மற்றவர்களுடன் இருக்கும் போது உங்களால் நன்கு-பொருந்தும் முகக்கவசத்தை அணிய முடியும் எனும் பட்சத்தில் உங்கள் விலகியிருத்தலின் முழுமையான கடைசி நாள்:
உங்கள் தனிமைப்படுத்துதல் முடிவடையும் நாள்:

இன்னும் 5 நாட்களுக்கு ( வரை) மற்றவர்களுடன் இருக்கும்போது முகக்கவசம் அணிவதை உறுதி செய்து கொள்ளுங்கள் மேலும் நீங்கள் முகக்கவசம் அணிய முடியாத செயல்பாடுகளைத் தவிர்க்கவும். வரை அதிக அபாயத்தில் உள்ள நபர்களுடன் இருப்பதைத் தவிர்க்கவும். பயணம் பற்றிய தகவல்களுக்கு பயணம் | CDC (ஆங்கிலத்தில் மட்டும்) ஐப் பார்க்கவும்.

உங்களுக்கு ஆன்டிஜென் பரிசோதனைக்கான அணுகல் இருக்கும்பட்சத்தில், விலகியிருக்கும் 5 ஆம் நாள் ஒரு பரிசோதனையை செய்து கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் தொற்றும் அபாயத்தை நீங்கள் மேலும் குறைக்கலாம். உங்கள் பரிசோதனை நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில், 5 வது நாளுக்குப் பிறகு நீங்கள் விலகியிருத்தலை நிறைவு செய்யலாம், ஆனால் 5 நாட்களுக்கு ( வரை) மற்றவர்களுடன் இருக்கும்போது முகக்கவசம் அணிவதைத் தொடரவும். உங்கள் பரிசோதனையின் முடிவு பாசிட்டிவாக இருந்தால், நீங்கள் வரை தனிமைப்படுத்தப்படுத்தலைத் தொடர வேண்டும்.

10 நாட்கள் விலகியிருத்தல்

மேலே உள்ள நிபந்தனைகள் உங்களுக்கு பொருந்தவில்லை என்றால், நீங்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

நீங்கள் 10 நாட்கள் விலகியிருந்தால், உங்கள் விலகியிருத்தலின் முழுமையான கடைசி நாள்:
உங்கள் விலகியிருத்தல் முடிவடையும் நாள்:

கோவிட்-19 உள்ள ஒருவரிடமிருந்து எனக்கு தொற்று வெளிப்பட்டுள்ளது (நெருங்கிய தொடர்பு என அடையாளம் காணப்பட்டது): எனது தனிமைப்படுத்தப்படும் காலத்தைக் கணக்கிடு

கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்த ஒருவருடன் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தீர்கள், ஆனால் உங்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை.

கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து நீங்கள் புதுப்பித்த நிலையில் உள்ளீர்களா என்பதைக் கண்டறிய, Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) வழிகாட்டுதலைப் (ஆங்கிலத்தில் மட்டும்) பார்க்கவும். கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து நீங்கள் புதுப்பித்த நிலையில் இல்லை என்றால், நீங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

5 நாட்கள் தனிமைப்படுத்துதல்

பின்வரும் சூழ்நிலைகளில் 5 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் பொருத்தமானது:

  • கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து நீங்கள் புதுப்பித்த நிலையில் இல்லை, மேலும்
  • உங்களால் நன்கு-பொருந்தும் முகக்கவசங்களை பொது இடங்களிலும், வீட்டிலும் மற்றவர்களுடன் இருக்கும் போது அணிய முடியும்.

நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் குறைந்தது முழுமையான 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் (இந்த நேரத்தில் உங்கள் பரிசோதனை நெகட்டிவாக இருந்தாலும் கூட). உங்கள் தனிமைப்படுத்துதலின் முழுமையான கடைசி நாள்:
உங்கள் தனிமைப்படுத்துதல் முடிவடையும் நாள்:

இன்னும் 5 நாட்களுக்கு ( வரை) மற்றவர்களுடன் இருக்கும்போது நன்கு-பொருந்தும் முகக்கவசத்தை (ஆங்கிலத்தில் மட்டும்) அணியவும், நீங்கள் முகக்கவசம் அணிய முடியாத செயல்பாடுகளைத் தவிர்க்கவும் மற்றும் தீவிர நோய்க்கான அதிக-அபாயத்தில் உள்ளவர்களுடன் இருப்பதைத் தவிர்க்கவும். பயணம் பற்றிய தகவல்களுக்கு பயணம் | CDC (ஆங்கிலத்தில் மட்டும்) ஐப் பார்க்கவும்.

உங்களுக்கு அறிகுறிகள் தோன்றாவிட்டாலும் கூட, நீங்கள் பரிசோதனை செய்ய வேண்டும். கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் கடைசியாக நெருங்கிய தொடர்பு கொண்ட நாளிலிருந்து குறைந்தது 5 நாட்களுக்குப் பிறகு பரிசோதனை செய்துகொள்ளுங்கள் ( அன்று அல்லது அதற்குப் பிறகு) பரிசோதனை உங்களுக்கு பாசிட்டிவாக வந்தால், நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் (கூடுதல் தகவல்களுக்கு, உங்களுக்கு கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்தால் என்ன செய்வது (PDF)) என்ற இணைப்பைப் பார்க்கவும்.

10 நாட்கள் தனிமைப்படுத்துதல்

10 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் பின்வரும் சூழ்நிலைகளில் பொருந்தும்:

  • கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து நீங்கள் புதுப்பித்த நிலையில் இல்லை, மேலும்
  • உங்களால் நன்கு-பொருந்தும் முகக்கவசங்களை மற்றவர்களுடன் இருக்கும் போது அணிய முடியாது.

நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் குறைந்தது முழுமையான 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் (இந்த நேரத்தில் உங்கள் பரிசோதனை நெகட்டிவாக இருந்தாலும் கூட). உங்கள் தனிமைப்படுத்துதலின் முழுமையான கடைசி நாள்:
உங்கள் தனிமைப்படுத்துதல் முடிவடையும் நாள்:

இந்தத் தேதியில், உங்கள் வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கலாம், ஆனால் ஆபத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் (உதாரணமாக, கோவிட்-19 தடுப்பூசிகளைப் பற்றி புதுப்பித்த நிலை (ஆங்கிலத்தில் மட்டும்) இல் இருங்கள்,பரிந்துரைகள் மற்றும்/அல்லது தேவைகளுக்கு ஏற்ப முகக்கவசத்தை அணியுங்கள், குறைந்த காற்றோட்டம் உள்ள இடங்களைத் தவிர்க்கவும் மேலும் அடிக்கடி கைகளை கழுவவும்; மேலும் அறிய உங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது | CDC (ஆங்கிலத்தில் மட்டும்) ஐப் பார்க்கவும்.)

தனிமைப்படுத்துதல் இல்லை

கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து நீங்கள் புதுப்பித்த (ஆங்கிலத்தில் மட்டும்) நிலையில் இருந்தால், உங்களுக்கு அறிகுறிகள் தோன்றாத வரை நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியதில்லை. வரை நீங்கள் நன்கு-பொருந்தும் முகக்கவசத்தை மற்றவர்களுடன் இருக்கும் போது அணிய வேண்டும் மற்றும் உங்களுக்கு அறிகுறிகள் தோன்றாவிட்டாலும் கூட, நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் கடைசியாக நெருங்கிய தொடர்பு கொண்ட நாளிலிருந்து குறைந்தது 5 நாட்களுக்குப் பிறகு பரிசோதனை செய்துகொள்ளுங்கள் ( அன்று அல்லது அதற்குப் பிறகு)

கடந்த 90 நாட்களுக்குள் உங்களுக்கு கோவிட்-19 நோய் இருந்திருக்கும் பட்சத்தில் (உங்களுக்கு வைரஸ் பரிசோதனை (ஆங்கிலத்தில் மட்டும்) பாசிட்டிவாக வந்திருந்தால்), உங்களுக்கு அறிகுறிகள் தோன்றாத வரை நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியதில்லை. வரை நீங்கள் நன்கு-பொருந்தும் முகக்கவசத்தை மற்றவர்களுடன் இருக்கும் போது அணிய வேண்டும் மேலும் நீங்கள் கடைசியாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் ( அல்லது அதற்குப் பிறகு) நெருங்கிய தொடர்பில் இருந்து குறைந்தது 5 நாட்களுக்குப் பிறகு, ஆன்டிஜென் சோதனையைப் பயன்படுத்தி (PCR சோதனை அல்ல) பரிசோதனை செய்ய வேண்டும்.

கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவாக வந்த ஒருவருடன் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால் மேலும் உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் கோவிட்-19 உள்ள ஒருவரிடமிருந்து உங்களுக்கு தொற்று வெளிப்படும் சாத்தியமிருந்தால் என்ன செய்வது செய்வது (PDF) என்ற இணைப்பைப் பார்க்கவும்.