கோவிட்-19

This page is being reviewed for updates. The Washington State Department of Health has updated its guidance for what to do if you are sick with COVID-19 or were exposed to COVID-19. This page may have content that is inconsistent with the new guidance.

கோவிட்-19 தகவல்களுக்கான ஹாட்லைன்

கோவிட்-19 பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், 1-800-525-0127 என்ற எண்ணிற்கு அழைத்து 7 ஐ அழுத்தவும். அவர்கள் பதிலளிக்கும்போது, ​​விளக்கச் சேவைகளை அணுக உங்கள் மொழியைக் கூறவும். ஹாட்லைன் சேவை திங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும், செவ்வாய் முதல் ஞாயிறு வரை (மற்றும் விடுமுறை நாட்கள்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ளது.

வீட்டிலேயே இருப்பவருக்கு கோவிட்-19 தடுப்பூசி தேவையா?

பதிவு செய்ய மூன்று வழிகள் உள்ளன.

உங்களை கவனித்துக் கொள்ளவும், WA - COVID-19 தொற்றின் போது சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் வாழுதல்

தற்போது COVID-19 தொற்று பரவியுள்ளது, மேலும் எதிர்காலத்திலும் இந்த தொற்று இருக்கும் என்பதையும் நாம் அறிவோம். நம்மையும், நமது அன்புக்குரியவர்களையும், சமூகத்தையும் முடிந்தவரை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, நம் வாழ்க்கையையும் எவ்வாறு வாழ்வது என்பதைப் பற்றி புரிந்துகொள்வது முக்கியம். நாம் அதை எவ்வாறு செய்யலாம்? இதுவரை நாம் கற்றுக்கொண்ட அனைத்துக் கருவிகளையும் பயன்படுத்துவதன் மூலம்: தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் மற்றும் பூஸ்டர் செலுத்திக் கொள்ளுதல், நோய்வாய்ப்பட்டாலோ அல்லது தொற்று உள்ளவரிடம் வெளிப்பட்டிருந்தாலோ பரிசோதனை செய்துகொள்ளுதல் மற்றும் வீட்டிலேயே இருத்தல், கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல்.

நமது சமூகத்தில் COVID-19 தொற்றுடன் இணைந்து வாழும் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் நுழையும்போது, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கை எடுக்கவும், கவனித்துக் கொள்ளவும்

Decorative

தடுப்பூசி மற்றும் பூஸ்டர்களை செலுத்திக் கொள்ளவும்.

COVID-19 தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர்கள், தொற்று மற்றும் தீவிர நோய்களுக்கு எதிராக செயல்படுவதில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் அறிக

Decorative

எப்போது பரிசோதிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவும்

உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, கூட்டத்தில் கலந்து கொண்டாலோ அல்லது COVID-19 தொற்றுக்கு வெளிப்பட்டிருந்தாலோ பரிசோதனை செய்து கொண்டு COVID-19 பரவும் அபாயத்தைக் குறைக்கவும்.

மேலும் அறிக

Decorative

முகக்கவசம் அணிந்து கொள்ளவும்

முகக்கவசம் அணிவது COVID-19 தொற்றுப் பரவலின் வேகத்தைக் குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் சில அமைப்புகளில் தற்போதும் முகக்கவசம் தேவைப்படுகிறது.

ተጨማሪ ይወቁ

 

தற்போது உங்களுக்கு COVID-19 தொற்று இருந்தால்

சமீபத்திய வழிகாட்டுதல்களைப் படிக்கவும்

பிறரிடம் இருந்து விலகி, வீட்டிலேயே இருக்கவும் மற்றும் விலகியிருத்தலுக்கான சமீபத்திய வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

மேலும் அறிக

சிகிச்சை பெறவும்

உங்கள் சிகிச்கை விருப்பங்களைப் பற்றி அறிந்து கொள்ள உங்கள் சுகாதார வழங்குநரிடம் கலந்துரையாடவும்.

மேலும் அறிக

குணமடைவதற்கான உதவியைப் பெறவும்

நீங்கள் COVID-19 நோயிலிருந்து குணமடையும் போது, உங்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் மருந்து விநியோகம், குழந்தை பராமரிப்பு மற்றும் பிற சேவைகளைப் பெறவும்.

மேலும் அறிக

நீண்டகால COVID

COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நோய்த்தொற்றுக்குப் பிறகு சில வாரங்கள் முதல் ஆண்டுகள் வரை நீடிக்கும் அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம். COVID-19 தொற்றைத் தடுப்பதின் மூலம் நீண்டகால COVID நோயைத் தடுக்கவும்.

மேலும் அறிக

கூடுதல் தகவல்கள்

COVID-19 தொற்றின் அறிகுறிகள், நோய்க்குறிகள் மற்றும் தடுப்பு முறைகள்

COVID-19 தொற்றின் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

  • இருமல், மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், குளிர், தசை வலி, தொண்டைப் புண், புதிய சுவை அல்லது வாசனை இழப்பு. குமட்டல், வாந்தி, அல்லது வயிற்றுப்போக்கு போன்று குறைவாகத் தோன்றும் பொதுவான அறிகுறிகள்.
  • பின்வரும் COVID-19 அவசரகால எச்சரிக்கை நோய்க்குறிகளை எதிர்கொண்டால், 911 என்ற எண்ணிற்கு அழைக்கவும்:
    • சுவாசிப்பதில் சிரமம்
    • தொடர்ந்த நெஞ்சு வலி அல்லது அழுத்தம்
    • திடீர் குழப்பம்
    • விழிப்பதில் அல்லது விழித்திருப்பதில் சிரமம்
    • மேற்பரப்பு தோலின் நிறத்தைப் பொறுத்து, வெளிர், சாம்பல் அல்லது நீல நிறத்தில் தோல், உதடுகள் அல்லது நகத்தின் சதைப்பகுதிகள் மாறுதல்
  • யாரெல்லாம் ஆபத்தில் உள்ளனர்?
    • முதியவர்கள், நீண்டகாலம் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்ட அனைத்து வயதினர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் COVID-19 தொற்றினால் ஏற்படக்கூடிய தீவிர நோய் தாக்கத்தின் அதிக ஆபத்தில் இருக்கலாம்.

என்னையும், என் குடும்பத்தையும் நான் எவ்வாறு பாதுகாப்பது?

  • தகுதி பெறும் போது, தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறவும்.
  • உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் வீட்டிலேயே இருக்கவும்.
  • நீங்கள் கூட்டமான பொது இடங்களுக்குச் செல்லும் போது மற்றவர்களிடமிருந்து 6 அடி (2 மீட்டர்) தூரத்தில் விலகி இருக்கவும்.
  • கூட்டமான மற்றும் காற்றோட்டம் இல்லாத இடங்களைத் தவிர்க்கவும்.
  • உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும் அல்லது ஹேண்ட் சானிடைசரைப் பயன்படுத்தவும்.
  • உங்களுக்கு இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது முழங்கை அல்லது டிஷ்யூ பேப்பரால் மூடிக்கொள்ளவும்.
  • உங்கள் முகம், வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடாதீர்கள்.
  • உங்கள் வீட்டின் மேற்பரப்புகளை சுத்தம் செய்யவும்.
  • உங்களுக்கு COVID-19 நோய்க்கான அறிகுறிகள் இருந்தால், உங்கள் சுகாதார வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்.
கடைகள் மற்றும் பொது இடங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக செல்லவும்

நீங்கள் வெளியே செல்வதற்கு முன்பும், பின்பும், வீட்டிலிருந்து விலகி இருக்கும் போதும் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள பல விஷயங்களை கருத்தில் கொள்ளவும்.

புறப்படுவதற்கு முன்பு:

  • கூடுமான வரையில், உங்களுக்கு உடல்நிலை சரியில்லாத பட்சத்தில், கடைக்கோ அல்லது பொது இடத்திற்கோ செல்ல வேண்டாம். உங்களுக்கான பொருட்களை வாங்கித் தருமாறு குடும்பஉறுப்பினரிடமோ அல்லது நண்பரிடமோ கேட்கவும்.
  • மளிகைப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்வதைக் கருத்தில் கொள்ளவும்.
  • உங்களுக்கு முடியும் பட்சத்தில், கூட்டம் இல்லாத நேரங்களில் கடைக்குச் செல்வதைக் கருத்தில் கொள்ளவும்.
  • வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் உங்கள் கைகளை கழுவவும்.

கூட்டமான உள்ளரங்குகளில் இருக்கும்போது:

  • உங்கள் மூக்கு மற்றும் வாயை மூடும் வகையில் முகக்கவசத்தை அணியவும்.
  • பணம் செலுத்தும் வரிசையில் கூட உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே குறைந்தது 6 அடி (2 மீட்டர்) தூரத்தில் விலகியிருக்கவும்.
  • நீங்கள் இருமும்போது அல்லது தும்மும்போது முகத்தை மூடிக் கொள்ளவும்.
  • உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
  • ஷாப்பிங் செய்ய சென்றால், வண்டியின் கைப்பிடி அல்லது ஷாப்பிங் கூடையை சுத்தம் செய்ய ஹேண்ட் சானிடைசர் அல்லது கிருமி நாசினி துடைப்பான்களைப் பயன்படுத்தவும்.

நீங்கள் வீட்டிற்கு வந்ததும்:

  • துணி முகக்கவசங்களை துவைத்து பாதுகாப்பாக வைக்கவும். ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசத்தை தூக்கி எறியவும்.
  • கைகளை சுத்தம் செய்யவும்.
  • உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவும். உணவுப் பொருட்களை கிருமி நீக்கம் செய்யாதீர்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை வழக்கம் போல் கழுவவும்.
கர்ப்பகாலம், குழந்தைகள் மற்றும் COVID-19

நீங்கள் கர்ப்பமாக இருந்தால் தெரிந்து கொள்ள வேண்டியவை

  • கர்ப்பமாக இல்லாதவர்களுடன் ஒப்பிடும் போது, கர்ப்பமாக இருப்பவர்கள் அல்லது சமீபத்தில் கர்ப்பமானவர்கள் COVID-19 தொற்றிலிருந்து ஏற்படும் தீவிர நோய்களுக்கான அதிக அபாயத்தில் உள்ளனர்.
  • கர்ப்ப காலத்தில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குறைப்பிரசவம் (குழந்தையை 37 வாரங்களுக்கு முன்பே பிரசவிப்பது) மற்றும் குழந்தை இறந்து பிறத்தல் ஆகியவைகளுக்கான அதிக அபாயத்தில் உள்ளனர், மேலும் மற்ற கர்ப்ப சிக்கல்கள் ஏற்படுவதற்கான அதிக அபாயத்திலும் இருக்கக்கூடும்.
  • கர்ப்பமாக இருப்பவர்கள் அல்லது சமீபத்தில் கர்ப்பமானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், COVID-19 நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:
    • தடுப்பூசி செலுத்திக்கொண்டு உங்கள் பூஸ்டர் டோஸையும் பெறவும்.
    • முகக்கவசம் அணியவும்.
    • மற்றவர்களிடமிருந்து 6 அடி (2 மீட்டர்) தூரத்தில் விலகியிருக்கவும், மேலும் கூட்டமான மற்றும் காற்றோட்டம் இல்லாத இடங்களைத் தவிர்க்கவும்.
    • மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருக்க பரிசோதனை செய்து கொள்ளவும்.
    • உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும் மற்றும் இருமும் போதும், தும்மும் போது முழங்கை அல்லது ஒரு டிஷ்யூ பேப்பரால் மூடிக்கொள்ளவும்.
    • உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யவும்.
    • தினமும் உங்கள் உடல்நிலையைப் பரிசோதிக்கவும்
    • அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், உடல்நிலை சரியில்லை என்றால் அல்லது COVID-19 இருக்கலாம் என்று நினைத்தால், உடனடியாக அவர்களது சுகாதார வழங்குநரை அழைக்கவும்.

கர்ப்பகாலம் மற்றும் COVID-19 தடுப்பூசி

  • கர்ப்பமாக இருப்பவர்கள், தாய்ப்பால் ஊட்டுபவர்கள், தற்போது கர்ப்பமாக முயற்சிப்பவர்கள் அல்லது எதிர்காலத்தில் கர்ப்பமாகுபவர்களுக்கு COVID-19 தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
  • கர்ப்ப காலத்தின் போது செலுத்திக் கொள்ளும் COVID-19 தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய சான்றுகள் அதிகரித்து வருகின்றன. COVID-19 தடுப்பூசியைப் பெறுவதால் ஏற்படும் நன்மைகள், கர்ப்ப காலத்தில் தடுப்பூசியின் அறியப்பட்ட அல்லது சாத்தியமான அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
  • கர்ப்பகாலத்தில், தகுதியுடையவர்கள் COVID-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற வேண்டும்.
  • COVID-19 தடுப்பூசிகள் கர்ப்பமாக இருப்பவர்களுக்கோ அல்லது அவர்களின் குழந்தைகளுக்கோ COVID-19 நோய்த்தொற்றை ஏற்படுத்தாது.
  • COVID-19 தடுப்பூசிகள் உட்பட எந்தவொரு தடுப்பூசிகளும் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ கருவுறுதலில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு தற்போது எவ்வித ஆதாரமும் இல்லை.
  • நீங்கள் கர்ப்பிணியா மேலும் COVID-19 தடுப்பூசி பற்றிக் கூடுதல் கேள்விகள் உள்ளதா? உங்கள் சுகாதார வழங்குநரிடம் கலந்துரையாடவும் அல்லது MotherToBaby ஐத் தொடர்புகொள்ளவும், அதன் நிபுணர்கள் தொலைபேசி அல்லது சாட் மூலம் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். இந்த இலவச ரகசிய சேவை திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கிடைக்கும். நேரலையில் ஆலோசிக்க அல்லது மின்னஞ்சல் அனுப்ப MotherToBaby (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷில் மட்டுமே உள்ளது) ஐப் பார்வையிடவும் அல்லது 1-866-626-6847 என்ற எண்ணுக்கு அழைக்கவும் (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷில் மட்டுமே உள்ளது).

பிறந்த குழந்தைக்கு COVID-19 தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களை எவ்வாறு பராமரிப்பது?

  • கர்ப்ப காலத்தில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு COVID-19 இருப்பதில்லை.
  • COVID-19 பரிசோதனையின் முடிவு பாசிட்டிவாக வந்த பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் லேசான அல்லது அறிகுறிகள் இல்லாமல் குணமடைந்துள்ளனர். பிறந்த குழந்தைகளில் சிலருக்கு, COVID-19 தொற்று தீவிரமான நோய்களை ஏற்படுத்துவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
  • நீங்கள் COVID-19 நோய்க்காக விலகியிருந்தால் மற்றும் உங்களுக்குப் பிறந்த குழந்தை இருந்தால், விலகியிருத்தல் காலம் முடியும் வரை பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்:
    • உங்கள் வீட்டு உறுப்பினர்கள் அல்லாதவர்களிடமிருந்து விலகி இருக்க வீட்டிலேயே இருக்கவும்.
    • தொற்று இல்லாத மற்ற வீட்டு உறுப்பினர்களிடமிருந்து விலகியிருக்கவும் (ஒதுங்கி இருக்கவும்) மற்றும் பகிரப்பட்ட இடங்களில் முகக்கவசத்தை அணியவும்.
    • தீவிர நோய்க்கான அதிக அபாயத்தில் இல்லாத, தடுப்பூசிகள் அனைத்தையும் முழுமையாக செலுத்திக்கொண்ட ஆரோக்கியமான பராமரிப்பாளரை உங்களுக்குப் பிறந்த குழந்தையைக் கவனிக்க ஏற்பாடு செய்யவும். உங்களுக்கு முடியும் பட்சத்தில், உங்கள் தாய்ப்பாலை பம்ப் செய்து மற்றொரு பராமரிப்பாளரிடம் அளித்து குழந்தைக்கு உணவளிக்க வைக்கவும். நீங்கள் பால் பவுடரை அளிக்கும் பட்சத்தில், ஆரோக்கியமான பராமரிப்பாளரிடம் அதைத் தயாரிக்கச் சொல்லுங்கள்.
    • உங்களின் விலகியிருத்தல் காலம் நிறைவடைவதற்குள், குழந்தைக்கு உணவளிக்கும் போதோ அல்லது குழந்தையை வைத்திருக்கும் போதோ முகக்கவசம் அணிவது உட்பட, பிறந்த குழந்தையை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால், பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும்.
    • உங்களின் பிறந்த குழந்தைக்கு COVID-19 அறிகுறிகள் உள்ளதா என கண்காணிக்கவும்.
  • தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்று தற்போதைய சான்றுகள் தெரிவிக்கின்றன. COVID-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தாய்ப்பாலின் மூலம் தங்கள் குழந்தைக்கு பாதுகாப்பு நோய் எதிர்ப்பொருள்களை கடத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் COVID-19 தொற்றுக்கு பாதிப்படைந்து, தாய்ப்பால் கொடுப்பதைத் தேர்வு செய்தால்:
    • தாய்ப்பால் கொடுக்கும் முன் கைகளைக் கழுவவும்.
    • தாய்ப்பால் கொடுக்கும் போதும், உங்கள் குழந்தையிடமிருந்து 6 அடி (2 மீட்டர்) தூரத்தில் இருக்கும்போதும் முகக்கவசத்தை அணியவும்.

அனைத்து புதிய பெற்றோர்கள் மற்றும் பெற்றோராவதை எதிர்பார்ப்பவர்கள் அல்லது அவர்களது அன்புக்குரியவர்களுக்கு மனநலம் பற்றிய தகவல்கள் மற்றும் ஆதரவு ஆகியவை தேவைப்படும் போதெல்லாம் Perinatal Support Washington வார்ம் லைன் சேவை உங்களுக்கு கிடைக்கும். Perinatal Support Washington வார்ம் லைன் ஐ 1-888-404-7763 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது Perinatal Support என்ற இணையதளத்தைப் பார்வையிடவும் (ஆங்கிலத்தில் மட்டும்). warmline@perinatalsupport.org என்ற முகவரிக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் செய்யவும்.

உதவி பெறுவது அவசியம். வார்ம் லைன் சேவையில் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை நேரடியாக பதிலளிக்கப்படும். (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மட்டும்). மாலை மற்றும் வார இறுதி நாட்களில் நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால், உங்களது செய்தியை அனுப்பவும், 1-12 மணி நேரத்திற்குள் உங்கள் அழைப்பிற்கு யாராவது பதில் அளிப்பார்கள். சப்போர்ட் லைன், சமூக சேவகர், உரிமம் பெற்ற சிகிச்சையாளர் அல்லது மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு/பதற்றத்தை எதிர்கொண்ட பெற்றோர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

உங்களையும், உங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளவும்

Washington Listens: COVID-19 காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றி நீங்கள் யாரிடமாவது பேச வேண்டும் என்றால், 1-833-681-0211 என்ற எண்ணில் Washington Listens ஐ அழைக்கவும். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மற்றும் வார இறுதி நாட்களில் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்வதற்கு, எப்போதும் ஒருவர் இருப்பார். TTY மற்றும் மொழிபெயர்ப்பு அணுகல் சேவைகள் கிடைக்கும். கூடுதல் தகவல்கள் எங்களின் மனநலம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு பக்கத்தில் (ஆங்கிலத்தில் மட்டும்) கிடைக்கும்.

  • நம்பகமான ஊடகங்கள், பொது மற்றும் உள்ளூர் சுகாதார ஏஜென்சிகளிலிருந்து வரும் தற்போதைய தொற்றுநோயின் நிலைமை, தகவல்களுடன் கூடிய கூடுதல் பரிந்துரைகள் மற்றும் பொது சுகாதார இணையதளங்களில் இருந்து வரும் புதுப்பிப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளவும்.
  • தொலைபேசி எண்கள், இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் போன்ற சமூக ஆதாரவளங்களின் பட்டியலை உருவாக்கவும். பள்ளிகள், மருத்துவர்கள், பொது சுகாதார நிறுவனங்கள், சமூக சேவைகள், சமூக மனநல மையங்கள் மற்றும் ஹாட்லைன் எண்களையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தொலைபேசி அல்லது ஆன்லைன் சேவைகள் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும்.
  • அடிப்படை சுகாதாரப் பொருட்களை வைத்திருக்கவும் (சோப்பு, ஆல்கஹால் உள்ள ஹேண்ட் சானிடைசர், டிஸ்யூ பேப்பர், ஒரு தெர்மோமீட்டர், காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள் மற்றும் COVID-19 தொற்றை வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கருவிகள் போன்றவை).
  • நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவறாமல் உட்கொள்ளும் மருந்துகளை இருப்பில் வைத்துக்கொள்ள முயற்சிக்கவும்.

உங்கள் குடும்பத்தில் உள்ள இளம் உறுப்பினர்களுக்கு ஆதரவு வழங்கவும்

  • தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவதன் மூலம் அவர்களின் தொடர்ந்த ஆதரவையும், தொடர்பையும் பெறவும்.
  • இந்தச் செய்தி உங்கள் குழந்தைகளுக்கு துன்பத்தை உண்டாக்கினால், இடைவெளி எடுக்க மறக்காதீர்கள் மறக்காதீர்கள். இணையம் அல்லது பிற தகவல் மூலங்களிலிருந்து பெறக்கூடிய ஏதேனும் தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்கு அவர்களிடம் உரையாடவும்.
  • கேள்விகளைக் கேட்க ஊக்குவிப்பதன் மூலமும், தற்போதைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ள உதவுவதன் மூலமும் குழந்தைகளை ஆதரிப்பதில் கவனம் செலுத்தவும்.
  • உங்களுடைய உணர்வுகளைப் பற்றி பேசவும் மற்றும் அவர்களை அங்கீகரிக்கவும்.
  • வரைபடங்கள் அல்லது பிற செயல்பாடுகள் மூலம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவவும்.
  • வழக்கமாக அளிக்கும் ஆறுதலையும், பொறுமையையும் விட சற்று அதிகமாக காட்டவும்.