Care Connect Washington என்பது COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் பிற ஆதார வளங்களை வழங்குவதற்காக, தொற்றுநோய் பரவலின் ஆரம்பக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும், இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வீட்டிலேயே தனியாக விலகியிருக்க முடியும். தற்போது, இந்தத் திட்டம் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களின் நீண்ட காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. உதாரணமாக, சிலர் COVID-19 தொற்றினால் நீண்ட கால பக்க விளைவுகளை எதிர்கொள்கின்றனர். மற்றவர்கள் நோய்வாய்ப்பட்டு அதன் மூலம் அவர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள், இதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு மீண்டும் உதவி தேவைப்படலாம். Care Connect Washington-ஆல் அவர்களுக்கு உதவமுடியும்.
Care Connect வாஷிங்டன் என்பது, Department of Health (சுகாதாரத் துறை), எட்டு பிராந்திய மையங்கள் மற்றும் மாகாணம் முழுவதும் உள்ள சமூகங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட உள்ளூர் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்களிடையே ஒன்றிணைந்து செயல்படுகிறது. நிலைத்தன்மை மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அடைய மக்களுக்கு உதவுவதன் மூலம் Care Connect அமைப்பானது சமூகங்களைப் பலப்படுத்துகிறது. வேலையின்மையின் போது கிடைக்கும் பலன்கள், மானியத்துடன் கூடிய வீட்டுவசதி அல்லது குழந்தை பராமரிப்பு, Supplemental Nutrition Assistance Program (SNAP, கூடுதல் ஊட்டச்சத்து உதவித் திட்டம்) அல்லது Special Supplemental Nutrition Program for Women, Infants, and Children (WIC, பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு கூடுதல் ஊட்டச்சத்து திட்டம்), Apple Health மற்றும் பல உணவு உதவித் திட்டங்கள் போன்ற திட்டங்களுக்கு ஒருவர் விண்ணப்பிப்பதற்கு உதவியாக அவருடன் சேர்ந்து உள்ளூர் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்களும் பணியாற்றுகின்றனர். Care Connect ஆனது மக்களுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் விரும்பும் மொழியிலேயே வழங்குகிறது.
கோவிட்-19 நிவாரணத்திற்கான ஒரு பிராந்திய அணுகுமுறை
மாகாண Department of Health ஆனது, உள்ளூர் சுகாதார சட்ட அதிகார அமைப்பு மற்றும் அவர்களின் கூட்டாளர்களுடன் இணைந்து, பிராந்திய வாரியாக Care Connect Washington ஐ இயக்குகிறது. மருந்து விநியோகம், சுகாதாரப் பராமரிப்பு, வேலையில்லாதவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான உதவி, உள்ளூர் வீட்டுவசதி ஏஜென்சிகள், உணவு வங்கிகள், குழந்தைப் பராமரிப்பு வழங்குநர்கள் போன்ற பல சேவைகளுக்காக மக்கள் தகுதிபெறும் சேவைகளை வழங்குவதற்கு அவர்களுடன் இணைந்திருக்க, ஒவ்வொரு பிராந்தியமும் சமூகம் சார்ந்த கூட்டாளர்களுடன் இணைந்து வேலைசெய்யும்.
எங்கெல்லாம் சேவைகள் கிடைக்கின்றன?
COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சேவைகள் கிடைக்கின்றன.
கிழக்கு பிராந்தியம்
Better Health Together (ஆங்கிலத்தில் மட்டும்) ஆனது Adams, Ferry, Lincoln, Pend Oreille, Spokane மற்றும் Stevens மாவட்டங்களுக்கான Care Connect Washington மையமாகச் செயல்படுகிறது.
King மாவட்டம்
HealthierHere (ஆங்கிலத்தில் மட்டும்) ஆனது King மாவட்டத்திற்கான Care Connect Washington மையமாகச் செயல்படுகிறது.
வட மத்திய பிராந்தியம்
Action Health Partners (ஆங்கிலத்தில் மட்டும்) ஆனது Chelan, Douglas, Grant மற்றும் Okanogan மாவட்டங்களுக்கான Care Connect Washington மையமாகச செயல்படுகிறது.
வடக்கு பிராந்தியம்
North Sound Accountable Community of Health (ஆங்கிலத்தில் மட்டும்) ஆனது Island, San Juan, Skagit, Snohomish மற்றும் Whatcom மாவட்டங்களுக்கான Care Connect Washington மையமாகச் செயல்படுகிறது.
வட மேற்கு பிராந்தியம்
WithinReach (ஆங்கிலத்தில் மட்டும்) ஆனது Clallam, Jefferson, மற்றும் Kitsap மாவட்டங்களுக்கான பராமரிப்பு ஒருங்கிணைப்புச் சேவைகளை வழங்குகிறது.
Pierce மாவட்டம்
Elevate Health (ஆங்கிலத்தில் மட்டும்) ஆனது Pierce மாவட்டத்திற்கான Care Connect Washington மையமாகச் செயல்படுகிறது.
தென் மத்திய பிராந்தியம்
Greater Health Now (ஆங்கிலத்தில் மட்டும்) ஆனது Kittitas, Walla Walla, Whitman, Columbia, Garfield, Asotin, Yakima, Benton மற்றும் Franklin மாவட்டங்களுக்கான Care Connect Washington மையமாகச் செயல்படுகிறது.
தென்மேற்கு பிராந்தியம்
Southwest Washington Accountable Community of Health (SWACH) (ஆங்கிலத்தில் மட்டும்) ஆனது Clark, Klickitat மற்றும் Skamania மாவட்டங்களுக்கான Care Connect Washington மையமாகச் செயல்படுகிறது.
மேற்கு பிராந்தியம்
Cascade Pacific Action Alliance இன் Community CarePort (ஆங்கிலத்தில் மட்டும்) ஆனது Cowlitz, Wahkiakum, Pacific, Grays Harbor, Mason, Thurston மற்றும் Lewis மாவட்டங்களுக்கான Care Connect Washington மையமாகச் செயல்படுகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- Care Connect Washington சேவைகள் எனக்கு கிடைக்குமா?
-
நீங்கள் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்தச் சேவைகளுக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். தற்போது COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கடந்த காலத்தில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இதில் அடங்குவர்.
1-833-453-0336 என்ற எண்ணிற்கு அழையுங்கள். மொழிபெயர்ப்பு உதவி கிடைக்கிறது.
உங்கள் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், ஆதார வளங்கள் மற்றும் சேவைகளுடன் உங்களை இணைக்க உதவுவதற்கும் உள்ளூர் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் உங்களைத் தொடர்புகொள்வார்.
- நான் என்ன வகையான உதவியை எதிர்பார்க்க முடியும்?
-
உங்கள் உள்ளூர் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும், உங்கள் தேவைகளைப் புரிந்து கொள்ளவும் நேரம் ஒதுக்குவார். பின்பு, சுகாதாரப் பாதுகாப்பு, மானிய வீட்டுவசதி அல்லது குழந்தை பராமரிப்பு, வேலையின்மையின் போது கிடைக்கும் பலன்கள், உணவு உதவி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மற்றும் உங்களுக்கு உதவக்கூடிய உள்ளூர் ஆதாரவளங்களை அவர்கள் அடையாளம் காண்பார்கள். பிராந்தியத்தின் அடிப்படையில் சேவைகள் மாறுபடும். Care Connect Washington உங்களுக்குத் தேவையான தகவல்களை நீங்கள் விரும்பும் மொழியிலேயே வழங்கும். Care Connect சேவைகள் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் கிடைக்கும்.
- எனக்கு உதவி கிடைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
-
உங்கள் பிராந்திய பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர், பரிந்துரையைப் பெற்ற ஒரு நாளுக்குள்ளேயே உதவியை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்.
- எனது தகவல்களை எவ்வாறு பாதுகாப்பீர்கள்?
-
உங்கள் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர், கால் சென்ட்டரில் அவர் பெற்ற தகவல்களை உறுதிப்படுத்தி, உங்கள் தேவைகளைப் பற்றி கேட்பார். உங்கள் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளருடன் நீங்கள் பகிரும் எந்தவொரு தகவலும் ரகசியமாகவே இருக்கும். உங்களுக்குத் தேவைப்படக்கூடிய அத்தியாவசியச் சேவைகளை கண்டறிய, பராமரிப்பு ஒருங்கிணைப்புச் சேவைகளை வழங்கும் பணியாளர்கள் மற்றும் Department of Health (சுகாதரத் துறை) உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் உங்கள் சொந்த அல்லது தனிப்பட்ட சுகாதார தகவல்களைப் பகிர மாட்டார்கள்.
- இதற்கு எவ்வளவு செலவாகும்?
-
இந்தச் சேவைக்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. Care Connect Washington, வாஷிங்டன் மாகாணத்தில் கோவிட்-19 க்கு எதிராக செயல்பட உதவுவதற்கான கூட்டாட்சி நிதியைப் பெற்றுள்ளது.
- நான் உதவி பெறுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
-
உங்கள் பிராந்திய பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் பரிந்துரையைப் பெற்ற ஒரு நாளுக்குள்ளேயே உதவியை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்.
- உதவி பெறும் போது நான் இன்னும் விலகி இருக்க அல்லது தனிமைப்படுத்தப்பட வேண்டுமா?
-
ஆம். விலகி இருத்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவை நமது அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்களுக்கு கோவிட்-19 பரவுவதைத் தவிர்ப்பதற்கும், நமது சமூகங்களில் அதன் பரந்த அளவிலான எதிர்மறையான விளைவுகளைக் குறைப்பதற்கும் பயன்படுத்தப்படும் முக்கியமான கருவிகளாகும். உங்கள் விலகி இருத்தல் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைக் கடந்த பின்னரும் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்கள் பிராந்திய பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர், தற்போதைய சுகாதாரம் மற்றும் சமூகத் தேவைகளை ஆதரிக்கும் நீண்டகாலச் சேவைகளுடன் உங்களை இணைப்பார்.
- விலகியிருத்தலுக்கும் தனிமைப்படுத்தலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
-
விலகி இருத்தல்: உங்களுக்கு கோவிட்-19 பரிசோதனை பாசிட்டிவ் என்று உறுதிசெய்யப்பட்டு, அறிகுறிகள் இருந்தால் (ஆங்கிலத்தில் மட்டும்) அல்லது பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தால், உங்களின் தொற்று பிறருக்குப் பரவாமல் இருக்க நீங்கள் பிறரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
- வீட்டிலேயே இருக்கவும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மற்றவர்களுடன் தொடர்புகொள்வதைத் தவிர்க்கவும்.
- தனி அறையில் தங்கி, முடிந்தால் தனி குளியலறையைப் பயன்படுத்தவும்.
- உங்களது வீட்டுக்கு உள்ளே அல்லது வெளியே பிறருடன் கட்டாயம் நீங்கள் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் நன்கு பொருந்தக்கூடிய முகக் கவசத்தை (ஆங்கிலத்தில் மட்டும்) அணியுங்கள்.
- அலுவலகம், பள்ளி அல்லது பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பொதுப் போக்குவரத்து, பயணப் பகிர்வு அல்லது டாக்சிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- மருத்துவ உதவி பெறும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் வீட்டிலேயே தங்கி இருக்கவும்.
- நீங்கள் எத்தனை நாட்கள் விலகி இருக்க வேண்டும் என்பது குறித்த அறிய, Centers for Disease Control and Prevention (CDC, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்) (ஆங்கிலத்தில் மட்டும்) மற்றும் Department of Health (DOH, சுகாதாரத் துறை) (ஆங்கிலத்தில் மட்டும்) வழங்கும் சமீபத்திய வழிகாட்டுதலைப் பின்பற்றவும் (ஆங்கிலத்தில் மட்டும்).
தனிமைப்படுத்தல்: நீங்கள் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருந்து ஆனாலும் அறிகுறிகள் (ஆங்கிலத்தில் மட்டும்) இல்லாவிட்டால், உங்கள் தடுப்பூசி நிலையைப் பொறுத்து, உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கலாம். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறீர்களா என்பதை அறிவதற்கு முன்பே இது வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும்.
நீங்கள் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிய, CDC (ஆங்கிலத்தில் மட்டும்) மற்றும் DOH (ஆங்கிலத்தில் மட்டும்) வழங்கும் சமீபத்திய வழிகாட்டுதலைப் பின்பற்றவும் (ஆங்கிலத்தில் மட்டும்).
- எனது கோவிட்-19 அறிகுறிகள் மோசமடைந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
-
உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தால் உடனே மருத்துவ உதவியைப் பெறுங்கள். யாராவது பின்வரும் அறிகுறிகளுடன் இருந்தால் , உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுங்கள்:
- சுவாசிப்பதில் சிரமம்
- மார்பில் தொடர்ந்து வலி அல்லது அழுத்தம்
- புதிய குழப்பம்
- விழிப்பதில் அல்லது விழித்திருப்பதில் சிரமம்
- உதடுகள் அல்லது முகம் நீல நிறமாக மாறுவது
*இது முழுமையான பட்டியல் அல்ல. கடுமையான அல்லது உங்களைக் கவலைப்படச் செய்யக்கூடிய வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உங்கள் மருத்துவ வழங்குநரை அழைக்கவும்.
உங்களுக்கு மருத்துவ அவசரநிலை இருந்து, 911 ஐ அழைக்க வேண்டும் என்றால், உங்களுக்கு கோவிட்-19 அறிகுறிகள் இருக்கிறது அல்லது இருக்கக்கூடும் என்பதை டிஸ்பாட்ச்சரிடம் சொல்லுங்கள். முடிந்தால், அவசரச் சேவைகள் வருவதற்கு முன்பு முகக் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.
- Care Connect Washington சேவைகளை நான் எவ்வளவு காலம் பெற முடியும்?
-
உங்கள் பிராந்திய பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் உங்களுக்கு 21 நாட்கள் வரை உதவுவார். சில சூழ்நிலைகளில், உங்கள் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் தற்போதைய உடல்நலம் மற்றும் சமூகத் தேவைகளை ஆதரிக்கும் வகையில் உங்களை நீண்டகாலச் சேவைகளுடன் இணைக்கலாம்.
- Care Connect Washington எப்படி வேலை செய்கிறது?
-
Care Connect Washington என்பது மாகாண ஆதரவு பெற்ற உள்ளூரில் மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான அணுகுமுறையாகும்.
Washington State Department of Health பிராந்திய பராமரிப்பு ஒருங்கிணைப்பு பதில் செயல்களை நிர்வகிக்கிறது, பணியமர்த்தல் மற்றும் பயிற்சி வழங்குதலை ஆதரிக்கிறது, மாகாணம் மற்றும் உள்ளூர் ஆதாரவளங்களை இணைக்கிறது, மேலும் நிதி மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு போன்ற தொகுக்கப்பட்ட வளங்களை நிர்வகிப்பதன் மூலம் வெளியீடுகளை மேம்படுத்துகிறது.
வெற்றிகரமான விலகி இருத்தல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு ஆதரவளிக்க, உள்ளூர் ஆதாரவளங்களுடன் மக்களை இணைக்கவும், உதவி வழங்கவும், சமூகம் சார்ந்த பணியாளர்களை தனிப்பட்ட பிராந்தியங்கள் கண்டறிந்து, பயன்படுத்துகின்றன. பிராந்தியங்கள் உள்ளூர் விற்பனையாளர்களுடன் இணைந்து தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றன, மேலும் உள்ளூர் பொருளாதார மீட்புக்கும் பங்களிக்க உதவுகின்றன.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடல்நலம் மற்றும் சமூகத் தேவைகளை மதிப்பிடவும், ஆதரிக்கவும், கண்காணிக்கவும் மற்றும் COVID Care Action Plan-ஐ (கோவிட் பராமரிப்புச் செயல் திட்டம்) உருவாக்கவும் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் முடிந்தவரை மக்களை அவர்களுக்கு விருப்பமான மொழியில் உள்ள ஆதாரங்களுடன் இணைக்கிறது, மேலும் அவர்கள் ஆதரிக்கப்படுவதை உறுதிசெய்ய, செயல்முறை மூலம் அவர்களைப் பின்தொடர்கிறது.
- எனது தகவலை எவ்வாறு பாதுகாப்பீர்கள்?
-
உங்கள் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர், கோவிட்-19 தகவல் ஹாட்லைனிலிருந்து அவர் பெற்ற தகவலை உறுதிப்படுத்தி, உங்கள் தேவைகளைக் கேட்பார். உங்கள் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளருடன் நீங்கள் பகிரும் எந்தவொரு தகவலும் ரகசியமாகவே இருக்கும். உங்களுக்குத் தேவைப்படக்கூடிய அத்தியாவசியச் சேவைகளை அடையாளம் காண, பராமரிப்பு ஒருங்கிணைப்புச் சேவைகளை வழங்கும் பணியாளர்கள் மற்றும் Department of Health உங்கள் தகவலைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் உங்கள் சொந்த அல்லது தனிப்பட்ட சுகாதார தகவல்களைப் பகிர மாட்டார்கள்.
- Care Connect Washington திட்டமானது கோவிட்-19 பரவுவதை எவ்வாறு தடுக்கிறது?
-
சமூகம் மற்றும் சுகாதாரத் தொடர்பான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உதவியைப் பெறுபவர்கள், வீட்டில் விலகி இருத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக முடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கோவிட்-19 பரிசோதனையில் பாசிட்டிவ் என்று உறுதிசெய்யப்பட்டவர்கள் அல்லது தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள், வீட்டில் விலகி இருத்தல் அல்லது தனிமைப்படுத்திக்கொள்வதை உறுதிசெய்வதன் மூலம், Care Connect Washington ஆனது கோவிட்-19 பரவலைக் குறைத்து, பொருளாதார மீட்சியை அதிகரிக்கிறது. கோவிட்-19 ஆல் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உடல்நலம் மற்றும் சமூகத் தேவைகள் உள்ளவர்கள் மீது இந்த அமைப்பு கவனம் செலுத்துவதால், அடிப்படை சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும், கோவிட்-19 ஆல் விகிதாச்சாரத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இது உதவும்.
- Care Connect Washington ஆதரவு தேவைப்படும் யாரையாவது எனக்குத் தெரிந்தால் நான் யாரைத் தொடர்புகொள்வது?
-
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் அவர்களின் வீட்டில் உள்ள மற்றவர்களிடமிருந்து விலகி அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் உதவி தேவைப்பட்டால், மாகாண கோவிட்-19 தகவல் ஹாட்லைனைத் தொடர்புகொள்ளவும்.
மாகாண கோவிட்-19 தகவல் ஹாட்லைன்: 1-800-525-0127 ஐ டயல் செய்து, பின்னர் # ஐ அழுத்தவும். மொழி உதவி உள்ளது.
- காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, திங்கட்கிழமை
- செவ்வாய் முதல் ஞாயிறு மற்றும் கடைப்பிடிக்கப்படும் மாகாண விடுமுறை நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை
- Care Connect Washington இல் நடத்தை சார்ந்த சுகாதார சேவைகள் உள்ளதா?
-
ஆம்! உங்கள் சமூகத்தில் நடத்தை சார்ந்த சுகாதார சேவைகளைப் பெற உங்கள் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் உங்களுக்கு உதவ முடியும்.
- பழங்குடி நாடுகளின் உறுப்பினர்களுக்கு, பராமரிப்பு ஒருங்கிணைப்பு ஆதரவுச் சேவைகள் கிடைக்குமா?
-
ஆம். மேலும் அறிய, COVID19.CareCoordination@doh.wa.gov என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 564-999-1565 என்ற எண்ணை அழைக்கவும்.
- மொழிபெயர்ப்புச் சேவைகள் கிடைக்குமா?
-
ஆம். நீங்கள் 1-800-525-0127 இல் மாகாண கோவிட்-19 தகவல் ஹாட்லைனை அழைக்கும்போது, # ஐ அழுத்தவும், மொழி உதவி கிடைக்கிறது.
பராமரிப்பு ஒருங்கிணைப்பாளருடன் நீங்கள் இணைக்கப்பட்டதும், Care Connect Washington உங்களுக்குத் தேவையான தகவல்களை நீங்கள் விரும்பும் மொழியில் வழங்கும்.
ஆதாரவளங்கள்
ஆதாரங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கான இணையப்பக்கம்: துணி முகக் கவசங்கள், தனிமைப்படுத்தல், குடும்பத்தினர்களுக்குப் பராமரிப்பு வழங்குதல், கோவிட்-19 பாதிப்புக்கு உட்படுதல், அறிகுறிகள் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களைக் கண்டறியவும். உங்களுக்கு விருப்பமான மொழிகளில் நீங்கள் தகவல்களைப் பார்க்கலாம்.