இந்த தனியுரிமைக் கொள்கை வாஷிங்டன் மாநிலத்திற்கான அதிகாரப்பூர்வ வெளிப்பாடு அறிவிப்பு தொழில்நுட்பமான WA Notify (வாஷிங்டன் வெளிப்பாடு அறிவிப்பு) க்கு பொருந்தும். WA Notify வாஷிங்டன் மாநிலம் Department of Health (DOH சுகாதார துறை) இன் மேற்பார்வை மற்றும் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டது.
நாங்கள் என்ன தகவல்களைச் சேகரித்துப் பயன்படுத்துகிறோம்?
பின்வரும் தரவு WA Notify இல் சேகரிக்கப்படலாம்:
- WA Notify ஐ.பதிவிறக்குதல் அல்லது இயக்குதல்.
- வெளிப்பாடு அறிவிப்பைப் பெறுதல்
- சரிபார்ப்புக் குறியீடு அல்லது சரிபார்ப்பு இணைப்பைச் சமர்ப்பித்தல்.
- மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காகத் தேர்வுசெய்த நேர்மறை பயனர்களுக்கான சீரற்ற குறியீடுகளைப் பதிவேற்றுதல்
வாஷிங்டன் மாநிலம் Department of Health (DOH சுகாதார துறை) WA Notify ஐ எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள மேலே உள்ள நிகழ்வுத் தகவலைப் பயன்படுத்துகிறது. இந்தத் தரவு DOH பொது சுகாதார நிறுவனங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார அதிகாரிகளுடன் பகிரப்படலாம். புள்ளியியல் அல்லது அறிவியல் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இது மொத்தமாகவும் பயன்படுத்தப்படலாம். இந்தத் தகவலில் தனிப்பட்ட அல்லது இருப்பிடத் தகவல் எதுவும் இல்லை அல்லது எந்த WA Notify அறிவிப்பு பயனரையும் அடையாளம் காண இது பயன்படுத்தப்படுவதில்லை.
Google மற்றும் Apple இன் நோக்கத்துடன் பொருந்த WA Notify பயனரின் தனியுரிமையை முதன்மையான முன்னுரிமையாகப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. WA Notify இந்த தரவு கூறுகளை உருவாக்குகிறது, இதில் உங்களை அடையாளம் காணக்கூடிய தரவு இல்லை:
சீரற்ற குறியீடுகள்
- சீரற்ற குறியீடுகள் Bluetooth வழியாக WA Notify பயனர்களின் ஸ்மார்ட்போன்கள் ஒருவருக்கொருவர் அருகில் இருக்கும்போது அவர்களுக்கு இடையே பகிரப்படுகின்றன.
- சீரற்ற குறியீடுகள் உங்கள் ஸ்மார்ட்போனில் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன, WA Notify மூலம் அல்ல.
- கோவிட்-19 இற்கான சாத்தியமான வெளிப்பாடுகளை சரிபார்ப்பதற்காக WA Notify மற்றும் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை அனுமதிக்க மட்டுமே சீரற்ற குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது.
- சீரற்ற குறியீடுகள் அதிகபட்சமாக 14 நாட்களுக்கு சேமித்து வைக்கப்படும்.
சரிபார்ப்பு குறியீடுகள் மற்றும் இணைப்புகள்
- உங்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு, பொதுச் சுகாதார அதிகாரிகள் உங்களைத் தொடர்பு கொண்டால், நீங்கள் WA Notify ஐப் பயன்படுத்துகிறீர்களா என்று அவர்கள் உங்களிடம் கேட்பார்கள். நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், WA Notify க்குள் நுழைய அவர்கள் சரிபார்ப்புக் குறியீடு அல்லது இணைப்பை வழங்குவார்கள்.
- சமீபத்தில் கோவிட்-19 க்கு நேர்மறையாக சோதனை செய்த அனைவருக்கும் DOH ஒரு பாப்-அப் அறிவிப்பு மற்றும்/அல்லது ஒரு சரிபார்ப்பு இணைப்புடன் ஒரு உரைச் செய்தியையும் அனுப்புகிறது, இதன் மூலம் WA Notify பயனர்கள் விரைவாகவும் அநாமதேயமாகவும் சாத்தியமான வெளிப்பாடு குறித்து மற்ற பயனர்களை எச்சரிக்க முடியும்.
- அறிவிப்பைத் தட்டுவது அல்லது உங்கள் சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்வது உங்கள் சீரற்ற குறியீடுகள் பகிரப்படுவதை அனுமதிக்கிறது, இதனால் உங்கள் அருகில் இருக்கும் மற்ற WA Notify பயனர்கள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கலாம் என அநாமதேயமாக எச்சரிக்கப்படுவார்கள்.
- கோவிட்-19 க்கு நேர்மறையாக உறுதிசெய்யப்படும் அனைவருக்கும் சரிபார்ப்பு இணைப்புடன் கூடிய உரைச் செய்தியை DOH அனுப்புகிறது, ஏனெனில் WA Notify ஐ யார் பயன்படுத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. நீங்கள் WA Notify ஐப் பயன்படுத்தவில்லை என்றால், உரையைப் புறக்கணிக்கலாம்.
- மற்ற WA Notify பயனர்களை அநாமதேயமாக எச்சரிக்க, அறிவிப்பைத் தட்ட வேண்டுமா அல்லது சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்வதா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.
பயன்பாட்டுப் பதிவுகள்
- ஏறக்குறைய எந்தவொரு செயலி அல்லது இணையச் சேவையைப் போலவே, நீங்கள் சேவையைப் பயன்படுத்தும் போது WA Notify தானாகவே பதிவுகளை உருவாக்குகிறது. இந்த பதிவுகளில் உங்கள் ஸ்மார்ட்போன் பற்றிய சில தகவல்களும் அடங்கும். WA Notify இல் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம்
- இந்த பதிவுகள் சீரற்ற குறியீடுகள் அல்லது சரிபார்ப்பு இணைப்புகளைக் கொண்டிருக்காது, மேலும் உங்களுடன் அல்லது உங்கள் ஸ்மார்ட்போனுடன் எந்த வகை குறியீட்டையும் இணைப்பதற்கு இதனைப் பயன்படுத்த முடியாது.
- இந்தப் பதிவுகள் அவை உருவாக்கப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு தன்னியக்கமாக அழிக்கப்படும்.
பகுப்பாய்வுத் தரவு
- கூடுதல் பகுப்பாய்வுகளை இயக்க நீங்கள் தேர்வுசெய்தால், செயலியை மேம்படுத்த உதவும் வரையறுக்கப்பட்ட மொத்த தரவும் DOH உடன் பகிரப்படும்.
- இந்தத் தரவு, செயலி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றிய புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளது. உங்களை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு தகவலும் இதில் இருக்காது.
- செயலியில் பகுப்பாய்வுப் பகிர்வை முடக்குவதன் மூலம் இத்தரவைப் பகிராமல் இருப்பதற்கு நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
WA Notify உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து அமைவிடத் தரவைச் சேகரிக்க மற்றும் உங்களையோ அல்லது உங்கள் ஸ்மார்ட்ஃபோனையோ சீரற்ற குறியீடுகள் அல்லது சரிபார்ப்புக் குறியீடுகளுடன் இணைக்கும் தகவல்களை சேகரிக்வோ அல்லது பகிரவோ முடியாத முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு சரிபார்ப்புக் குறியீட்டை நீங்கள் கோரும்போது என்ன நடக்கும்:
WA Notify பயனர்கள் வீட்டில் கோவிட்-19 க்கான சோதனை முடிவுகளை நேர்மறையாகக் கொண்டிருந்தாள், WA Notify இல் சரிபார்ப்புக் குறியீட்டைக் கோரி, சாத்தியமான வெளிப்பாடுள்ள மற்ற WA Notify பயனர்களுக்கு அநாமதேயமாக தெரிவிக்கலாம். சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறுவதற்காக, WA Notify பயனர்கள் தங்கள் நேர்மறை சோதனை முடிவு தேதி மற்றும் அவர்களின் மொபைல் ஃபோன் எண்ணை உள்ளிட வேண்டும். குறியீட்டைக் கோருவதற்குப் பயன்படுத்தப்படும் அதே சாதனம், சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது தொற்றின் சாத்தியமான வெளிப்பாட்டைப் பற்றி மற்ற WA Notify பயனர்களுக்கு அநாமதேயமாக எச்சரிக்க, சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
அதே சோதனை முடிவின் நகல் அறிக்கைகளைத் தடுக்க, WA Notify 90 நாட்கள் வரை குறியீட்டைக் கோருவதற்குப் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்ணின் குறியாக்கவியல் ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட பதிப்பை தற்காலிகமாகச் சேமிக்கிறது. இந்தத் தகவலில் தனிப்பட்ட அல்லது இருப்பிடத் தகவல் எதுவும் இல்லை அல்லது எந்த WA Notify அறிவிப்பு பயனரையும் அடையாளம் காண இது பயன்படுத்தப்படாது.
நாங்கள் உங்கள் தகவல்களை எப்போது பகிர்வோம்?
சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட அல்லது சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்ய நீங்கள் தேர்வுசெய்யும் வரை, நாங்கள் தானாக முன்வந்து உங்கள் தகவலைச் சேகரிக்கவோ அல்லது யாருடனும் பகிரவோ மாட்டோம். நீங்கள் அவ்வாறு தேர்வு செய்யும்பட்சத்தில், WA Notify உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அருகில் இருக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களுடன் உங்கள் சீரற்ற குறியீடுகளைப் பகிர்ந்து கொள்ளும். உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அணுகல் அனுமதி இல்லாத ஒருவரால் சரிபார்ப்புக் குறியீடு அல்லது இணைப்பை உங்களுடன் மீண்டும் இணைத்துக் கொள்ள முடியாது. WA Notify இல் என்னென்ன தகவல்கள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிய இந்தப் பக்கத்தின் மேலே உள்ள "நாங்கள் என்ன தகவல்களை சேகரித்து பயன்படுத்துகிறோம்?" என்றப பகுதியை மதிப்பாய்வு செய்யவும்.
உங்கள் தகவல்களை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம்?
WA Notify Google மற்றும் Apple இன் Exposure Notification Framework (எக்ஸ்போஷர் நொட்டிஃபிகேஷன் ஃபிரேம்வேர்க்) ஐப் பயன்படுத்தி சீரற்ற குறியீடுகளைப் பாதுகாக்கிறது, இதில் அவற்றை எப்படி குறியாக்கம் செய்து பரிமாற்றம் செய்வது என்பது பற்றிய குறிப்பிட்ட தேவைகளும் உள்ளன. WA Notify உங்கள் சீரற்ற குறியீடுகளை சேமித்து வைக்கவோ உருவாக்கவோ மாட்டாது — உங்கள் ஸ்மார்ட்போன் அதைச் செய்யும்.
உங்கள் தகவல் மீதான உங்கள் உரிமைகள்
உங்கள் ஸ்மார்ட்ஃபோனை அணுகாமல் சரிபார்ப்புக் குறியீடுகள் மற்றும் பயன்பாட்டுப் பதிவுகளை உங்களுடன் இணைக்க முடியாது என்பதால், DOHக்கு இந்தத் தகவலை அணுகவதற்கு எந்த வழியும் இல்லை. இதன் காரணத்தால், நீங்கள் கேட்கும்போது, DOH ஆல் உங்களுக்கு இந்தத் தகவலைப் பாதுகாப்பாக வழங்கவோ அல்லது நீக்கவோ முடியாது. WA Notify இன் பயன்பாடு உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வெளிப்பாட்டு அறிவிப்புகளை முடக்க அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டுள்ள வெளிப்பாட்டுப் பதிவுகளை அழிக்க உங்கள் ஸ்மார்ட்போன் உங்களை அனுமதிக்க வேண்டும். அத்துடன், WA Notify ஐ நீங்கள் எந்த நேரத்திலும் நிறுவல் நீக்கம் செய்யலாம். நீங்கள் அவ்வாறு செய்யும் பட்சத்தில், சேமிக்கப்பட்ட அனைத்து சீரற்ற குறியீடுகளும் நீக்கப்படும்.