பரிசோதனைக் கருவிகளை அணுகுதல்
- கோவிட்-19 பரிசோதனையை நான் எங்கே செய்து கொள்ள வேண்டும்?
-
பின்வரும் விருப்பத்தேர்வுகளை முயற்சிக்கவும்:
- பொருட்கள் இருப்பில் இருக்கும் போது, Say Yes! COVID Test (சரி என்று சொல்லுங்கள்! கோவிட் பரிசோதனை) இல் (ஆங்கிலத்தில்) இலவச பரிசோதனைக் கருவியை ஆர்டர் செய்யுங்கள் அல்லது மொழி உதவியை அணுக 1-800-525-0127 என்ற எண்ணை அழைத்து, # ஐ அழுத்துங்கள். ஒருவீட்டிற்கு ஒரு ஆர்டர் என்பதைப் பின்பற்றுங்கள்.
- ஃபெடரல் திட்டத்தில் இருந்து இலவச பரிசோதனைக் கருவியை COVIDTests.gov (ஆங்கிலத்தில்) என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்யுங்கள். ஒரு வீட்டிற்கு ஒரு ஆர்டர் என்பதைப் பின்பற்றுங்கள்.
- உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருந்தகங்களில் வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கருவியை வாங்குங்கள்.
- உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருந்தால், பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் காப்பீட்டு திட்டத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், ஒரு மாதத்திற்கு 8 வீட்டிலேயே செய்யும் பரிசோதனைகளுக்கான பணத்தை செலுத்துவார்கள். மேலும் தகவல்களுக்கு இங்கே படிக்கவும் (ஆங்கிலத்தில்).
- எனக்கு அருகிலுள்ள ஒரு பரிசோதிக்கும் இடத்தைக் கண்டறியவும் (ஆங்கிலத்தில்).
உங்களுக்கு அருகிலுள்ள பரிசோதிக்கும் தளத்தை அறிந்து கொள்ள உதவி தேவைப்பட்டால், உங்கள் உள்ளூர் சுகாதாரத் துறை அல்லது மாவட்டத்தை (ஆங்கிலத்தில்) தொடர்புகொள்ளவும். 1-800-525-0127 என்ற எண்ணிற்கு அழைத்து # ஐ அழுத்தவும். அவர்கள் பதிலளிக்கும்போது, விளக்கச் சேவைகளை அணுக உங்கள் மொழியைக் கூறவும்.
- என்னிடம் இணையதள சேவை இல்லை / இணையதளம் எனது மொழியில் இல்லை. வாஷிங்டனில் இலவச பரிசோதனை செய்யும் கருவியை எவ்வாறு ஆர்டர் செய்வது?
-
1-800-525-0127 என்ற எண்ணிற்கு அழையுங்கள், பின்னர் # ஐ அழுத்துங்கள். மொழி உதவி உள்ளது. வாஷிங்டன் மற்றும் ஃபெடரல் ஆன்லைன் போர்டல்கள் மூலமாக உங்கள் சார்பில் கால் சென்டர் பணியாளர்கள் ஆர்டர் செய்யலாம்.
- எனது இலவச பரிசோதனைக் கருவிகளை எப்போது பெறுவேன்?
-
இந்த திட்டங்களின் (Say YES! COVID Test (சரி என்று சொல்லுங்கள்! கோவிட் பரிசோதனை அல்லது Federal Program (ஃபெடரல் திட்டம்) மூலமாக கோரப்படும் பரிசோதனைக் கருவிகள் ஆர்டர் செய்த 1-2 வாரங்களில் அனுப்பி வைக்கப்படும்.
- பரிசோதனைக் கருவிகள் கையிருப்பில் இல்லை என்று இணையதளம் கூறுகிறது. அவை எப்போது கிடைக்கும்?
-
துரதிர்ஷ்டவசமாக, நாடுமுழுவதும் தேவைகள் அதிகரித்துள்ள காரணத்தால் பரிசோதனைக் கருவிகள் எப்போது மீண்டும் கையிருப்பில் இருக்கும் என்பதற்கான சரியான தேதியை எங்களால் தெரிவிக்க முடியவில்லை. தயவு செய்து தொடர்ந்து sayyescovidhometest.org (ஆங்கிலத்தில்)என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். பொறுமை காத்தமைக்கு நன்றி!
உங்களுக்கு உடனடியாகப் பரிசோதனை தேவைப்பட்டால், ‘கோவிட்-19 பரிசோதனையை நான் எங்கே செய்து கொள்ளலாம்?' என்ற கேள்விக்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ள விருப்பத் தேர்வுகளைப் பயன்படுத்தவும்.
- பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பரிசோதனை விருப்பங்களையும் பின்பற்றிய பிறகு, என்னால் இன்னும் பரசோதனை எங்கு செய்துகொள்ளலாம் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு கோவிட்-19 இருப்பதாக சந்தேகம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
-
- தற்போது நாடு முழுவதும் இருப்புக் குறைவாக உள்ளதால் கோவிட்-19 பரிசோதனை செய்யும் இடத்தைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு எங்களை மன்னிக்கவும்.
- நீங்கள் கோவிட்-19 அறிகுறிகளை உணர்ந்தாலோ அல்லது கோவிட்-19 தொற்றுக்கு வெளிப்பட்டிருந்தாலோ, நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கவலைப்பட்டாலோ, பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறோம்:
- கோவிட்-19 பரிசோதனை முடிவுகள் பாசிடிவ் என்று வந்தால் என்ன செய்ய வேண்டும். என்பதற்கான இதே வழிகாட்டுதலைப் பின்பற்றவும்.
- உங்களால் விலகியிருக்க முடியாவிட்டால், நீங்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
- உங்கள் வீட்டிற்கு வெளியே பிறரைச் சுற்றி இருக்கும் போது உங்கள் மூக்கு மற்றும் வாயைப் பாதுகாப்பாக மறைக்கும் அளவிற்கு முகக்கவத்தை அணியுங்கள் (முடிந்தால், KN95, KF-94 அல்லது 3-அடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசம் அணிவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது).
- மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 6 அடி/2 மீட்டர் தூரம் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
- கைகளை அடிக்கடி கழுவவும்.
- கூட்டமான இடங்கள் மற்றும் பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும்.
பொதுவான பரிசோதனை
- யாரெல்லாம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்?
-
Department of Health (DOH, சுகாதாரத் துறை) கோவிட்-19 ஐ ஒத்த அறிகுறிகளைக் கொண்ட எவருக்கும் பரிசோதனை செய்யலாம் என்று பரிந்துரைக்கிறது.
நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அல்லது பெருந்தொற்று காலத்தில் அதிகம் வெளிப்பட்டவர்கள் போன்ற பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ள நபர்கள் பரிசோதனை செய்யவேண்டும் என்று DOH பரிந்துரைக்கிறது.
- பரிசோதனை முடிவு பாசிடிவ் என வந்தபின் அடுத்து என்ன செய்வது?
-
Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்) மற்றும் DOH வழிகாட்டுதல் மற்றும் வீட்டிலேயே விலகியிருத்தல் ஐப் பின்பற்றி மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள். அனைத்து நெருங்கிய தொடர்புகளும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
- கோவிட்-19 என கணிக்கப்பட்ட அல்லது உறுதிப்படுத்தப்பட்ட அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 5 முழு நாட்களுக்கு மற்றவர்களிடமிருந்து விலகியிருத்தல் வேண்டும் (நாள் 0 என்பது, அறிகுறிகள் வந்த முதல் நாள் அல்லது அறிகுறியற்ற நபர்களுக்கு சோதனை முடிவு பாசிடிவ் என வந்த நாள்) மேலும் 5 நாட்களுக்கு வீட்டில் மற்றும் பொது இடங்களில் மற்றவர்கள் சுற்றி இருக்கும் போது அவர்கள் முகக்கவசத்தை அணிய வேண்டும்.
- ஒரு நபருக்கு பரிசோதனைக்கான அணுகல் இருந்து அவர் பரிசோதிக்க விரும்பினால், விலகியிருக்கும் 5-நாட்களின் முடிவில் ஆன்டிஜென் பரிசோதனை பயன்படுத்துவதே சிறந்த அணுகுமுறை ஆகும். காய்ச்சலைக் குறைக்கும் மருந்தைப் பயன்படுத்தாமலேயே 24 மணிநேரம் காய்ச்சலில்லாமல் உங்கள் உடல்நிலை மேம்பட்டிருந்தால் மட்டுமே பரிசோதனை மாதிரியைச் சேகரிக்க வேண்டும் (குணமடைந்த பின்னும் சுவை மற்றும் வாசனை இழப்பு சரியாக வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும் மற்றும் விலகியிருத்தலை முடித்துக்கொள்ள தாமதப்படுத்த வேண்டிய அவசியமில்லை).
- உங்கள் பரிசோதனை முடிவு பாசிடிவாக இருந்தால், நீங்கள் 10 நாள் வரை தொடர்ந்து விலகியிருத்தல் வேண்டும்.
- உங்கள் சோதனை முடிவு நெகடிவாக இருந்தால், நீங்கள் விலகியிருத்தலை நிறுத்திக்கொள்ளலாம். ஆனால், நன்றாகப்பொருந்தும் முகக்கவசங்களை 10 நாள் வரை வீட்டிலும் பொது இடங்களிலும், மற்றவர்கள் சுற்றி இருக்கும் போது அணிய வேண்டும்.
வீட்டிலேயே சோதனை செய்த கோவிட்-19 பரிசோதனை முடிவைத் தெரிவிக்க, பராமரிப்புச் சேவைகளை அணுகவும், வாஷிங்டன் மாகாண கோவிட் ஹாட்லைனை 1-800-525-0127 என்ற எண்ணில் அழைக்கவும். மொழி உதவி உள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே WA Notify (வாஷிங்டன் அறிவி) பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால் அல்லது இயக்கப்பட்டிருந்தால், பாசிடிவ் சோதனை முடிவைத் தெரிவிக்க இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம்.
மேலும் அதிக தகவல்களை இங்கே காணலாம்: உங்கள் பரிசோதனை பாசிட்டிவாக வந்தால் நீங்கள் செய்யவேண்டியது.