அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வீட்டில் இருந்தபடியே நேர்மறையான பரிசோதனை முடிவுகளை பற்றி எளிதாகத் தெரிவிக்கவும்
ஓவர்-தி-கவுண்டர் சோதனைத் தொகுப்புகளை வாங்கி, நேர்மறையான முடிவைப் பெறுபவர்கள், மாநில கோவிட்-19 ஹாட்லைன், 1-800-525-0127 ஐ அழைத்து 7ஐ அழுத்தவும். அவர்கள் பதிலளிக்கும்போது, விளக்கச் சேவைகளை அணுக உங்கள் மொழியைக் கூறவும். ஹாட்லைன் திங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும், செவ்வாய் முதல் ஞாயிறு வரை (மற்றும் விடுமுறை நாட்கள்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கிடைக்கும்.
ஏன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
சோதனை உயிரைக் காப்பாற்றுகிறது. சோதனையானது, வைரஸ் பரவுவதைத் தடுக்கச் சரியான நேரத்தில் தனிமைப்படுத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மக்களை அனுமதிக்கிறது; அறிகுறிகள் இல்லாமலும் கூட பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் வைரஸை பரப்பலாம். பொது சுகாதார அதிகாரிகளுக்கு நோய் தொற்று பரவுதலை கண்டறிந்து பதிலளிக்கவும், வைரஸின் புதிய மாறுபாடுகளைக் கண்காணிக்கவும் இந்த சோதனை உதவுகிறது. வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உதவுவதில் சோதனை ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.
University of Washington மற்றும் Department of Health (DOH, சுகாதாரத் துறை) இன் ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 சோதனை மற்றும் WA Notify (வாஷிங்டன் அறிவிப்பு) மூலம் கண்காணிப்பதால் டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை சுமார் 6,000 நிகழ்வுகளைத் தடுக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
எப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
உங்களிடம் கோவிட்-19 அறிகுறிகள் இருந்தாலோ அல்லது கோவிட்-19 க்கு நேர்மறையாக இருக்கும் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ பரிசோதனை செய்து கொள்ளவும். அறிகுறிகள் இருந்தாலோ, அல்லது சந்தேகத்திற்குரிய வெளிப்பாடு 3-5 நாட்களுக்குப் பிறகு இருந்தாலோ, நீங்கள் எந்த அறிகுறிகளையும் அனுபவிக்காவிட்டாலும் கூட, நீங்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
எங்கே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
வாஷிங்டன் மாநில Department of Health இணையதளமானது, ஒவ்வொரு மாவட்டத்திலும், இயக்க நேரம் மற்றும் தேவைகளுடன் சோதனைத் தளங்களின் அடைவை (ஆங்கிலத்தில்) பராமரிக்கிறது. சோதனை தளங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, 2-1-1 ஐ அழைக்கவும். ஆர்டர் செய்வதற்கும், மருந்தகங்களிலும் வசதியாக வீட்டிலேயே சோதனை செய்து கொள்வதற்கு ஏற்ப ஓவர்-தி-கவுண்டர் சோதனைத் தொகுப்புகள் கிடைக்கின்றன.
எனக்கு அருகிலுள்ள ஒரு சோதனை இடத்தைக் கண்டறியவும் (ஆங்கிலத்தில்)
சோதனைகளின் வகைகள்
தற்போது கிடைக்கும் சோதனைகளில் விரைவான ஆன்டிஜென் சோதனைகள், மூலக்கூறு சோதனைகள் (ஆய்வக அடிப்படையிலான மற்றும் கவனிப்பு புள்ளி இரண்டும்) மற்றும் சில வீட்டு சுய பரிசோதனைகள் ஆகியவை அடங்கும். எந்தவொரு குறிப்பிட்ட சோதனையின் வழங்கலும் தேவை மற்றும் உற்பத்தியாளர் திறனைப் பொறுத்து மாறுபடும்.
- கோவிட்-19 சோதனைகள்: இது எனக்கு என்ன கூறுகிறது? (ஆங்கிலத்தில்)
செலவு
மாவட்ட அல்லது மாநில-ஆதரவு சோதனைத் தளங்களில் செய்யப்படும் சோதனைகளுக்கு எந்த செலவும் இல்லை. பல சோதனைகள், குறிப்பாக அறிகுறிகளை அனுபவிக்கும் நபர்களுக்கு, காப்பீடு மூலம் கட்டணத்தை செலுத்தலாம் அல்லது Department of Health இடம் இருந்து மானியம் பெறலாம். சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் சோதனை தளங்கள் கோப்பகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும்பாலான பயண சோதனைகளுக்கான செலவுகள் காப்பீடு அல்லது மாநில ஆதரவு திட்டங்களால் பொருப்பேர்க்கப்படுவதில்லை.
சோதனை எவ்வாறு செயல்படுகிறது
பெரும்பாலான சோதனைகள் நாசி துடைப்பானைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. உமிழ்நீரைச் சேகரிப்பதன் மூலம் சில சோதனைகள் செய்யப்படலாம். மேலும் விவரங்களை சோதனைக்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தில் காணலாம்.
பின்தொடர்தல்
உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். நீங்கள் நேர்மறையாக சோதனை செய்யப்பட்டால், உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு (DOH/ Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்) வழிகாட்டுதல்களின்படி) Care Connect மூலம் உதவியைப் பெறுங்கள்.